அம்மான்னா சும்மாவா?

Sunday, November 11, 2007

ஹிந்துஸ்தானத்தை பிரிக்க முயலும் கயவர்கள்

ஒற்றுமையாக வாழ்ந்து வந்த பாரத மக்கள் இடையே "ஜாதி" என்ற கொடுமையான நோயை பரப்பியவர்கள் கிருத்துவ மிஷினரிகள் என்று பல முறை சொல்லி உள்ளேன். ஹிந்துஸ்தானத்தின் வெற்றியை கிருத்துவர்களாலும், முகமதியர்களாலும் தாங்க முடியவில்லை என்று எழுதி வந்தேன். நான் சிலரை கிண்டல் செய்து எழுதும் காமெடி பதிவர் என்று சில திம்மிகள் கருதி வந்தனர். காந்திய வழியில் பீடு நடை போடும் ஒரே நடுநிலை பத்திரிக்கையான தினமலரில் வந்து இருக்கும் செய்தியை படியுங்கள்.

இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவது அமெரிக்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா; இயற்கை வளம் அதிகம்; மனித சக்தி ஏராளம்! அணுகுண்டு செய்துவிட்டோம்! உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் பெற்ற நாடாகி விட்டோம் நாம்! எரிவாயு - பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்து விட்டது; உணவு தானியங்களுக்கு முன்பு போல் திருவோட்டை ஏந்தி வெளிநாடுகளிடம் செல்லும் நிலை இப்போது இல்லை நம்மிடம். இவை எல்லாம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன!

இந்தியா ஒரே நாடாக இருந்தால், இன்னும் சில வருடங்களில் தனக்கு சமமாகவோ, தனக்குப் போட்டியாகவோ வந்துவிடக் கூடும்; இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதை புரிந்துகொண்ட அமெரிக்க அரசு, இந்தியாவைத் துண்டாட பல வழிகளிலும் முயன்று வருகிறது. அவற்றில் ஒன்றாக நான் சமீபத்தில் கேள்விப்பட்டது.

இந்தியாவில் உள்ள ஜாதிகள், அவற்றின் உட்பிரிவுகள் பற்றியும், எந்த ஜாதிக்கு எந்த ஜாதி எதிர், யாருக்கும், யாருக்கும் நல் உறவு என்பது பற்றியும் ஆராய்ச்சி செய்ய ஏராளமாகப் பணம் ஒதுக்கி உள்ளதாம்!

இந்தப் பணத்தை உதவித் தொகையாக இங்குள்ள ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகத் தாராளமாக அளித்து ஆராய்ந்து வருகிறதாம்! இதேபோல மொழி உணர்வுள்ள இயக்கங்கள், சங்கங்கள், குழுக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய உதவி வருகிறதாம்.

"யோவ் அந்து...இதனால அமெரிக்கக்காரனுக்கு என்னய்யா பலன்?' என்று கேட்கிறீர்களா?

இப்போ, அமெரிக்கா செலவு செய்யும் பணம் அனைத்தும் மூலதனம். யாருக்கு யார் எதிரி என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களில் பலம் பெற்றவர்களுக்கு நேரடியாகவும், பலம் அதிகம் இல்லாதவர்களுக்கு மறைமுகமாகவும் உதவி, உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை மேலுலகம் அனுப்பி, ஒரு மாநிலத்தவனை, இன்னொரு மாநிலத்தவன், ஒரு ஜாதிக்காரனை, ஒரு மதத்தவனை மற்ற ஜாதி, மத மக்கள் பகையாளியாக நோக்க வைத்து, "அல்டிமேட்டாக' நாட்டைத் துண்டாடுவதுதான் அவர்கள் நோக்கம்!

இதன் முதல் கட்டம் செயல்பட ஆரம்பித்து விட்டது. காஷ்மீரில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் மூலம் தூண்டிவிட்டு, காஷ்மீரில் சிறுபான்மையினராக இருப்பவர்களை காஷ்மீரை விட்டு துரத்தி அடித்துள்ளது. தமது தாய் நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக நாட்டின் பல பாகங்களுக்கு சிதறிச் சென்றுள்ளனர். இதே செயல்முறையைப் பயன்படுத்தி தமிழகத்திலும் வாலாட்ட திட்டம் வகுத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்!

இந்தியனே! நீ விழித்துக் கொள்ளும் நேரம்
நெருங்கிவிட்டது; இனியும் தூங்காதே!


(நன்றி தினமலர் - வாரமலர்)

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.கவின் ஆட்சி பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இன்று மலர்கின்றது. அதுபோல நாடு முழுவதும் ஹிந்துக்களின் ஆட்சி ஏற்பட 80 கோடி ஹிந்துக்களும் ஒன்றினைந்து பாடுபடுவோம்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க திம்மிக்கள்.

9 Comments:

 • எப்பா அடென்டெண்ஸ் போட ஜெகதீசன் வரலையே...

  தனியா இருக்க போரடிக்குமே கொலைக்காரரே...

  By at 11/11/2007 10:03 PM  

 • இலைக்காரர் அவர்களே,
  பாரிஸ் தோழி ஒருவரும் டிபிசிடி அவர்களும் நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணக்கூடாது என மிரட்டுகின்றனர்..

  அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். உங்களுக்கு என் ஆதரவு தொடரும்!!!!!
  வாழ்க அம்மா! வாழ்க 80கோடி இந்துக்கள்!!!

  By at 11/11/2007 10:41 PM  

 • //தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.கவின் ஆட்சி பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இன்று மலர்கின்றது.//

  அம்மாவின் ஆசியால் தான் அங்கு இந்த கூட்டணி ஆட்சி உண்டானது என்பதை கூற மறந்து விட்டீர்களே!. அம்மாவின் மீது பொய் வழக்கு போட்டு, அதை அம்மாவின் ஆட்சியின் போது அதிகாரத்தை பயன்படுத்தி அவதூறு வழக்கை கர்னாடகத்துக்கு மாற்றிய திராவிட திம்மிகளின் முகத்தில் கரியை பூசிவிட்டார் அம்மா.

  By at 11/11/2007 11:15 PM  

 • /ஒரே நடுநிலை பத்திரிக்கையான தினமலரில்//

  aiyooo .. appo makkal kural, namadhu MGR .. ???

  puratchi thalaivi yin namadhu MGR nadunilai yaga illai enru sonna ungalai kandikkiren.

  By at 11/11/2007 11:30 PM  

 • tbcd அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 11/12/2007 12:25 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஸ்ரீராமர் துணையுடன் அந்த திம்மிக்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

  By at 11/12/2007 12:26 AM  

 • சாணக்கியன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நீங்கள் சொல்வது உண்மைதான். தேவகவுடா அம்மாவின் ஆலோசனையின்படி செயல்படுபவர். அதனால்தான் அம்மாவின் மீது போடபட்ட பொய் வழக்குகளை தாமதபடுத்திவந்தார்.

  By at 11/12/2007 12:28 AM  

 • thisandthat அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  நம் பத்திரிக்கைகளை பற்றி நாமே எழுதுவது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்ற காரணத்தினால் நான் எழுதவில்லை.

  By at 11/12/2007 12:30 AM  

 • //
  ஸ்ரீராமர் துணையுடன் அந்த திம்மிக்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
  //
  உங்கள் ஆதரவுக்கு நன்றி!!!

  ஸ்ரீராமர் துணை இருக்கும்வரை என்னை அந்தத் திம்மிகளால் ஒன்றும் செய்யமுடியாது!!!
  ஜெய் ஸ்ரீராம்!
  ஜெய் ஸ்ரீராம்!
  ஜெய் ஸ்ரீராம்!

  By at 11/12/2007 1:07 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za