அம்மான்னா சும்மாவா?

Thursday, January 12, 2012

உடைக்கும் க‌ருணாநிதி

பார‌த‌ ம‌க்க‌ளின் எழுச்சியினால் வீட்டிற்கு அனுப்ப‌ப‌ட்ட‌ மைனாரிட்டி ஆட்சி ந‌ட‌த்திய‌ க‌ருணாநிதி இப்போது ந‌ம‌து நாட்டை கூறுபோட்டு விற்க‌ முடிவெடுத்துவிட்டார். ப‌ல‌ கோடி ஆண்டுக‌ளாக‌ ஒற்றுமையுட‌ன் ந‌ம‌து பார‌த‌ ம‌க்கள் வ‌சித்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ்வ‌ப்போது கிருஸ்துவ‌ மிஷின‌ரிக‌ளாலும், ஜிகாதிக‌ளாலும், திராவிட‌ குண்ட‌ர்க‌ளாலும் ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வு ஏற்ப‌டுவ‌து உண்டு. நாட்டின் முன்னேற்ற‌த்தையே குறிக்கோளாக‌ கொண்ட‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ளின் முய‌ற்சியினால் இந்த‌ தொந்த‌ர‌வுக‌ள் அட‌ங்கிவிடும். ந‌ம் பார‌த‌ம் எப்ப‌டி இவ‌ர்க‌ளால் துண்டாட‌படுகிற‌து என்ப‌தை ஸ்ரீமான் அர‌விந்த‌ன் அழ‌காக‌ விள‌க்கி உள்ளார்.

த‌மிழ‌க‌ கேர‌ள‌ எல்லையில் உள்ள‌ முல்ல‌ பெரிய ஆற்றை ப‌ற்றி தனி நாடு கோரும் சில‌ தீவிர‌வாதிக‌ள் ஒரு பிர‌ச்ச‌னையை கிள‌ப்பி விட்ட‌ன‌ர். அந்த‌ பிர‌ச்ச‌னையை மிக‌ லாவ‌க‌மாக‌ த‌ன‌க்கே உரிய‌ பேராற்ற‌லினால் உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையான‌ ந‌ம் அம்மா அவ‌ர்க‌ள் தீர்த்து வைத்து விட்டார்.

த‌மிழ‌க‌ கேர‌ள‌ ம‌க்கள் முல்ல‌ பெரிய‌ ஆற்றின் பிர‌ச்ச‌னையை ம‌ற‌ந்து ஒற்றுமையாக‌ வாழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். அதை க‌ண்டு பொறுக்க‌ முடியாத‌ மைனாரிட்டி ஆட்சி புரிந்த‌ க‌ருணாநிதி கேர‌ள‌த்தின் சில‌ ப‌குதிக‌ளை த‌மிழ்நாட்டோடு சேர்க்க‌ வேண்டும் என்று ஒரு புதிய‌ பிர‌ச்ச‌னையை கிள‌ப்பி விட்டு உள்ளார். இது இப்போது தேவையா?

உடையும் பார‌த‌ம் என்ற‌ ஒரு சிற‌ந்த‌ நூலை எழுதிய‌ ந‌ம் ஸ்ரீமான் அர‌விந்த‌ன் பார‌த‌த்தை உடைக்கும் க‌ருணாநிதியை ப‌ற்றி "உடைக்கும் க‌ருணாநிதி" என்று ஒரு நூலை எழுதுமாறு 80 கோடி ஹிந்துக்க‌ளின் சார்பில் வேண்டுகின்றேன்.

வாழ்க‌ பார‌த‌ம். வீழ்க‌ க‌ருணாநிதி.

3 Comments:

 • ahahahh. வந்தாச்சா?

  By at 1/13/2012 8:19 AM  

 • //உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையான‌ ந‌ம் அம்மா //

  வன்மையா கண்டிக்கிறேன்!! பிரதமராகும் தகுதி படைத்த நிரந்தர முதல்வர்ன்றது விட்டுப் போயிருக்கு. எவ்வகையிலும் 'இராச குலோத்துங்கவை விட்டு விட்டாய்'ன்ற வகைல சேத்தி இல்லை.

  By at 1/13/2012 8:26 AM  

 • Lucky?

  By at 2/28/2012 7:10 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za