அம்மான்னா அம்மாதான்
உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஊண் உறக்கம் இன்றி அல்லும் பகலும் பாடு பட்டு வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஓய்வு அறியாத உழைப்பினால் அம்மாவின் உடல் நலன் சிறிது பாதிப்புக்கு உள்ளானது. அதை சீர் செய்யவும், நாட்டு மக்கள் எவ்வாறு உள்ளனர் என்பதை நேரில் கண்டறியவும் அம்மா அவர்கள் கொடநாட்டிற்கு செல்ல முடிவு எடுத்தார்.
உடனே நம் திம்மிக்கள் கூப்பாடு போட ஆரம்பித்து விட்டனர். எப்படி அரசு நடக்கும் என்று கேள்வி எழுப்பினர். அட மூடர்களே அம்மாவின் ஆற்றல் ஒப்பு உயர்வற்றது. அமெரிக்க வெளிஉறவு அமைச்சரே வியந்து பாராட்டிய ஆற்றல் அது. மைனாரிட்டி ஆட்சியின் போது கொடநாட்டில் இருந்து கொண்டே ஆட்சியாளர்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டியவர் அவர். அப்படிப்பட்ட அவரால் கொடநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி பரிபாலனம் செய்ய முடியாதா?
மேலும் தமிழகம் இருளில் மூழ்கி உள்ளது. பஸ் வசதிகள் சரியில்லை. விலைவாசி உயர்ந்து விட்டது என்று பொய் புகார்கள் கிளம்பி உள்ளன. அதை நேரில் சென்று ஆய்வு செய்யத்தான் அம்மா கொடநாடு செல்ல முடிவு எடுத்தார். மேற்கு மண்டல மக்கள் எப்படி உள்ளனர் என்பதை கண் கூடாக கண்டு அறியத்தான் அவர் அங்கு செல்ல முடிவு எடுத்தார். இதை கூட அறியாமல் இந்த அற்பர்கள் துள்ளி குதிக்கின்றனர்.
இதற்கு இடையே சென்னையில் வெள்ளம் என்று செய்தி வெளியானது. அம்மா அவர்கள் உடனடியாக போர்கால முறையில் அவசர உதவிகளை வழங்க ஆணையிட்டார். மேலும் வான் மூலமாக சென்று மக்கள் படும் துயரை கண்டு கண் கலங்கினார். தன் உடல் நலம் பாதிக்கபட்டால் கூட கவலையில்லை தன் நாட்டு மக்களின் நலமே முக்கியம் என்று கொடநாட்டு பயணத்தினை ரத்து செய்துவிட்டார் நம் அம்மா அவர்கள்.
அம்மா அவர்களே நீங்கள் நலமாக இருந்தால்தான் தமிழகம் வெளிச்சம் பெறும். ஈழம் மலரும். உலகு எங்கும் இருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைவர். எனவே தயவு செய்து உங்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு கொடநாடு சென்று ஓய்வு எடுத்து புத்தாக்க சிந்தனையோடு சென்னை திரும்புங்கள்.
வாழ்க அம்மா. வளர்க அவர்தம் சேவை.
1 Comments:
CLICK LINK AND READ.
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
.
By at 11/29/2011 7:10 PM
Post a Comment
<< Home