அம்மான்னா சும்மாவா?

Monday, May 23, 2011

ஈழத்தாயை கொலை செய்ய புலிகள் முயற்சி

சி.என்.என் ஐ.பி.என் இன்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. விடுதலை புலிகள் ஈ.வெ.ராவின் கொள்கைகளை பின்பற்றியவர்கள் என்று புலிகளின் முன்னாள் தலைவர் தெரிவித்து உள்ளார்.

புலிகள் தமிழகத்தினை பாரத மண்ணில் இருந்து பிரிக்க முயற்சிக்கின்றனர் என்று பல காலமாக நம்மவர் சொல்லி வருகின்றோம். ஆனால் அதை திம்மிக்கள் கட்டுக்கதை என்று புறந்தள்ளிவிட்டனர். இப்போது அந்த உண்மை வெளிவந்து விட்டது.

மேலும் அவர் உலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய நம் அம்மாவை கொலை செய்ய புலிகள் முயற்சி செய்தனர் என்று ஒரு அணுகுண்டை வீசியுள்ளார். இதை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு கருணாநிதி, வீரமணி, சுப.வீரபாண்டியன், திருமாவளவன், நெடுமாறன், வை.கோ, சீமான் போன்ற புலிகளின் ஆதரவாளர்களை பொடா, தடா மற்றும் எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் வேண்டுகிறேன்.

புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் சந்தித்து அம்மாவின் பாதுகாப்பிற்காக அனைத்துலக‌ படையை அனுப்புமாறு வேண்டுவோம்.

வாழ்க அம்மா. வீழ்க புலிகள்.

3 Comments:

 • வாழ்க அம்மா. வீழ்க புலிகள்.

  By at 5/26/2011 12:48 AM  

 • //புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் சந்தித்து அம்மாவின் பாதுகாப்பிற்காக அனைத்துலக‌ படையை அனுப்புமாறு வேண்டுவோம்.//

  ம்ம்ம்ம்.... லிபியாவில இருந்து அனைத்துலக படையை அப்பிடியே திருப்பி விட்டுவிடலாமா.... :))

  By at 8/10/2011 3:36 PM  

 • இது அம்மாவைக்கிண்டல் பண்றமாதிரில்ல இருக்கு.

  By at 8/18/2011 10:22 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za