அம்மான்னா சும்மாவா?

Friday, May 13, 2011

நக்கீரனின் விஷமம்

உலகின் ஒரே தங்க தாரகையும் தமிழகத்தின் நிரந்தர முதல்வருமாகிய அம்மா அவர்கள் தமிழீழம் அமைய அரும்பாடுபட்டு வருவது உள்ளங்கை நெல்லிகனி. அதனால்தான் அவரை புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழ தமிழர்கள் "ஈழத்தாய்" என்று அழைக்கின்றனர்.

அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் ராஜபக்சேவுக்கு வயிறு கலங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்மா அவர்கள் கூடிய விரைவில் தமிழக தேர்தல் அதிகாரியான பிரவீண் குமார் தலைமையில் இயங்கும் துணை நிலை ராணுவத்தை அனுப்பி தமிழீழம் கிடைக்க செய்வார் என்று ஏங்கி தவிக்கும் பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன்.

அதை கண்டு பொருக்க முடியா நக்கீரன் ஒரு விஷம செய்தியை வெளியிட்டு உள்ளது. இது அம்மாவின் பேட்டியாம்.


இலங்கை தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆள்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றி பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பல அறிக்கைகளையும் வெளியிட்டு இருக்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் இலங்கை அரசுதான். ஆகவே தமிழர்கள் என்ற முறையில், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது, நம் அனைவருடைய கடமை. இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதற்கு நம்மால் முயன்றதை அனைவரும் செய்ய வேண்டும்.

மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏனென்றால் இது சர்வதேச பிரச்சினை. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசு. மத்திய அரசு என்ன செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.

நக்கீரனின் இந்த விஷம செய்தியை கடுமையாக கண்டிப்போம்.

வாழ்க அம்மா. வீழ்க நக்கீரன்.

5 Comments:

 • பேதம் பார்க்கும் நக்கீரன் ஒழிக. தமிழர் தலைமை அம்மாவிடம் இருக்கும் வரையில் இது மாதிரி செய்தி வர விடமாட்டோம்

  By at 5/15/2011 6:18 AM  

 • கொடநாடு தமிழருக்கே!
  வாழ்க அம்மா!

  By at 5/16/2011 2:26 AM  

 • நக்கீரன் கும்பலை அழிக்க உடனடியாக ஸ்ரீமான் சோ அவர்களின் ராஜதந்திர ஆலோசனைகளை அம்மா கேட்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.

  By at 8/18/2011 10:15 AM  

 • என்னுடைய பின்னூட்டம் உடனடியாக வெளியாகவில்லை. நம் காவல் தெய்வம் ஆட்சி நடத்தும் இந்த வேளையில் நீங்கள் மட்டுறுத்தல் வைத்திருப்பது அவமானமாய் இருக்கிறது.

  அனானிகள் எல்லாம் தமிழகத்தை விட்டு ஓடிவிட்டார்கள் என்று அம்மா அறிக்கை விட்டால்தான் மட்டுறுத்தலை எடுப்பேன் என நீங்கள் அடம் பிடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

  By at 8/18/2011 10:17 AM  

 • யோவ், என்னதான் 23 சீட்டோட உங்க கட்சி மண்ணை கவ்வினாலும்
  உம்மோட குசும்புக்கு முடிவே கிடையாதா
  சரி சரி ஆடுங்க ஆடுங்க!

  ஜெய் ஜெய் கிருஷ்ணா
  ;-)

  By at 8/18/2011 12:02 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za