அம்மான்னா சும்மாவா?

Saturday, March 19, 2011

அம்மான்னா சும்மாவா - II

கூட்டணி கட்சிகளுடன் விடிய விடிய 14 மணி நேரம் மாராதான் பேச்சு நடத்திய ஜெ! என்று முழங்குகிறது ஒரு தகவல் களம். அம்மா அவர்களை சந்திக்க முடியாது. அவரை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு என்று பலரும் பல காலமாய் புளுகி வந்தனர். அது எல்லாம் அண்டப்புளுகு என்று இப்போது தெரிந்துவிட்டது. அம்மா அவர்கள் தாயுள்ளத்தோடு எல்லா கட்சி தலைவர்களையும் அன்போடு தன் இல்லத்திற்கு வரவழைத்து அன்பு மழை பாராட்டி உள்ளார். அவர்களோடு பல மணி நேரம் தொடர்ந்து பேசி அவர்கள் உள்ளம் குளிர வைத்து உள்ளார்.

ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே பெற்று அகில உலகம் எல்லாம் வியக்கும் வகையில் நல்லாட்சி நடத்தியவர் உலகிலேயே நம் அம்மா மட்டும்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. உலகின் ஒரே தங்கதாரகையான நம் அம்மா ஆட்சி பொறுப்பிற்கு வருவதற்கு முன்பே எப்படி பல மணி நேரம் ஊண் உறக்கம் இன்றி நாட்டு நலனிற்கு பாடுபடுகிறார் என்பதை பாருங்கள்.

அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலர 80 கோடி ஹிந்துக்களும். உலகம் எல்லாம் பரவி இருக்கும் கோடானு கோடி புலம் பெயர்ந்த ஈழத்தமிழரும் பாடுபடுவோம்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

2 Comments:

  • என்ன சொல்ல வர்ரீங்க?

    By at 3/19/2011 5:08 AM  

  • vote for D M K

    By at 3/19/2011 5:08 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za