அம்மான்னா சும்மாவா?

Tuesday, June 02, 2009

உலகை சீரழிக்கும் கருணாநிதி

பாரதத்தின் புண்ணிய கேந்திரங்களில் முக்கியமான தமிழகத்தினை மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி சீரழித்து வருவது ஹிந்துக்கள் அனைவருக்கும் தெரியும். குடும்பத்தினரின் முன்னேற்றத்தினை மட்டுமே முக்கிய நிகழ்வாக கருதும் கருணாநிதியின் எண்ணம் அனைவரும் அறிந்த ஒன்று.

உலகிலேயே முதன் முதலாக தன் மகனை தனக்கு அடுத்த வாரிசாக நியமித்தவர் கருணாநிதி என்பதை உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் சீடர்கள் அனைவரும் அறிவர். அதன் பிறகே பாரதத்தின் பிற கட்சியினர் அதை பின்பற்றினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அமெரிக்காவின் புஷ் குடும்பமும் கருணாநிதியை பார்த்துதான் மகனை அதிபராக ஆக்கி 8 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர் என்பதை இங்கே நினைவு படுத்த நான் கடமை பட்டு உள்ளேன்.

கருணாநிதியின் கயமையினால் உலகம் முழுவதும் குடும்ப அரசியல் வியாதி தொற்றி விட்டது. இது பன்றி காய்ச்சலை விட அதிக ஆபத்தானது என்று சிலர் கிழக்கு பதிப்பக மொட்டை மாடி கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகின்றது. கருணாநிதி தன் மகனுக்கு துணை முதல்வராக பதவி அளித்த செய்தி கேள்வி பட்டதும் வடகொரியாவில் ஆட்சி புரியும் கிம் ஜாங் இல் குடும்பத்தில் பெரும் குழப்பம் எழுத்துள்ளது. அதை உலக நாடுகளின் கண்களில் இருந்து மறைக்கதான் வடகொரியா சில ஏவுகணைகளை சமீபத்தில் ஏவியது. குடும்ப குழப்பம் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த வாரிசாக கருணாநிதியின் வழியில் தன் இளைய மகனான கிம் ஜாக் உன் என்பவரை நியமித்து உள்ளார் கிம் ஜாக் இல். இவ்வாராக மைனாரிட்டி ஆட்சி புரியும் தமிழகத்தினை மட்டும் இல்லாமல் உலகையே சீரழிக்கும் கருணாநிதியின் செயல்களை 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று பட்டு எதிர்ப்போம்.

வாழ்க அம்மா. வீழ்க கருணாநிதி.

1 Comments:

  • ஏன் இந்த ரத்தவெறி?

    By at 6/02/2009 9:03 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za