அம்மான்னா சும்மாவா?

Sunday, November 16, 2008

ராஜினாமா செய்

ஒற்றுமையாக இருக்கும் ஹிந்துக்களை பிளவுபடுத்த திராவிட நஞ்சுகள் உபயோகபடுத்தும் கருவிதான் ஜாதி என்பதை நான் பல பதிவுகள் மூலம் விளக்கி இருக்கின்றேன். ஹிந்துக்கள் ஒற்றுமையாக அவரவர்க்கு விதிக்கபட்ட கடமைகளை செய்து வந்தால் தாங்கள் அரசியல் செய்ய முடியாது என்று மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கருணாநிதி உணர்ந்து உள்ளார். ஆகவே அமைதியாக இருக்கும் ஹிந்துக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்கின்றனர் என்பதை போன்ற ஒரு மாய தோற்றதை உருவாக்கி இருக்கின்றார்.

சட்ட கல்லூரியில் நடந்த பிரச்சனையின் பின்புலத்தில் இருக்கும் சிலவற்றை எல்லோரும் உன்னிப்பாக பார்க்கவேண்டும். சட்ட கல்லூரி ஹிந்துவான அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ளது. பிரச்சனை உருவானதற்கு காரணமாக சொல்லபடும் தேவர் ஒரு ஹிந்து சாம்ராட். ஹிந்துக்கள் அமைதியானவர்கள், தீவிர அஹிம்சாவாதிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படி இருக்கையில் ஒரு ஹிந்து மற்றொரு ஹிந்துவை தாக்குவார்களா என்று யோசித்து பாருங்கள்.

இது எல்லாம் ஒரு மாய தோற்றம். இதன் பின்புலத்தில் கிருத்துவ மிஷினரிகளும், ஜிகாதி இயக்கங்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனதருமை ஹிந்துக்களே அரசியல்வாதிகளின் பிரச்சாரத்திற்கு ஒருபோதும் அடிமை ஆகிவிடாதீர்கள். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று சபதம் எடுங்கள்.

சட்ட கல்லூரி பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கருணாநிதி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பாக கேட்டு கொள்கின்றேன்.

(இதுவரை எத்தனை முறை உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா அவர்கள் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார் என்று சரியாக கணித்து சொல்பவர்க்கு அம்மாவின் பொற்கால ஆட்சியில் வாரியதலைவர் பதவி வழங்கபடும் என்று தெரிவிக்கின்றேன்).

வாழ்க அம்மா. வாழ்க தேவர் பெருமகனார்.

5 Comments:

 • சட்டக் கல்லூரியில் நடந்த தாக்குதல்களை நம் வீர ஹிந்துக்கள் தான் செய்தார்கள் என்று சொன்னால் சின்னத்தம்பி பிரபு கூட நம்பமாட்டார்.

  நம் வீர ஹிந்துக்கள் என்ன கற்கால மனிதர்களா உருட்டுக்கட்டைகளால் அடித்துக்கொள்ள? அவர்கள் வெடிக்குண்டுக்கு மாறி பல வருடங்கள் ஆகிறது. அதுமட்டுமில்லாமல் ஹிந்துஸ்தானத்தின் ராணுவத்திலுள்ள நம் ஹிந்து வீரர்கள் சிலர் நமக்கு வெடிக்குண்டுகளையும் வருங்காலத்தில் அணுக்குண்டுகளையும் தரவிருக்கும் இந்நேரத்தில் நம்மவர்கள் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொள்கொண்டனர் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

  வாழ்க அம்மா. வாழ்க தேவர் பெருமகனார்.வாழ்க அம்பேத்கர்.

  By at 11/17/2008 9:40 PM  

 • //
  (இதுவரை எத்தனை முறை உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா அவர்கள் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார் என்று சரியாக கணித்து சொல்பவர்க்கு அம்மாவின் பொற்கால ஆட்சியில் வாரியதலைவர் பதவி வழங்கபடும் என்று தெரிவிக்கின்றேன்).
  //

  இலைக்காரரே இந்த மைனாரிட்டி அரசு ஆட்சிக்கு வந்து 13 மே 2006 முதல் இன்றுவரை 921 நாட்கள் ஆகிறது.
  இவர்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இன்றுவரை அம்மா ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கு முன்னும் சாப்பாட்டுக்கு பின்னும் ஒவ்வொரு முறை மைனாரிட்டி அரசு பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பார்த்தால் இதுவரை 18420 முறை பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விட்டுள்ளார்.
  இதனுடன் வைகோ-வை கைது செய்யாததால் பதவி விலக வேண்டும் என்று சொன்னதையும், அடுத்த நாள் வைகோ-வை கைது செய்ததால் பதவி விலக வேண்டும் என்று சொன்னதையும் சேர்த்தால் மொத்தம் 18422 வரும்.

  அம்மா எத்தனை முறை அறிக்கைவிட்டுள்ளார் ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடுகிறார் என்று புள்ளிவிவரத்தை நான் வாரி வழங்கியிருப்பதால் வாரிய தலைவர் பதவி எனக்கு பொருத்தமாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
  ஆகவே 2011- ல் அம்மாவும் முதல்வராவார் என்பதால் எனக்கு சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி. வணக்கம்.

  பி.கு: இலைக்காரரே, கூடிய விரைவில் அம்மாவின் 18422 என்ற சாதனையை டாஸ்மாக் காந்த் முறியடித்து விடுவார் என்றே எண்ணுகிறேன்.

  By at 11/17/2008 10:33 PM  

 • Sir, Ambedhkar Oru Buddist. He is not a hindu.

  By at 12/01/2008 12:01 AM  

 • Indy அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அம்பேத்கர் புத்த மதத்தை தழுவி இருக்கலாம். புத்தர் ஹிந்து மதத்தை சார்ந்தவர்தானே. ஆகவே அம்பேத்கர் ஒரு ஹிந்துதான்.

  அம்பேத்கர் ஒரு ஹிந்துவாக இல்லாவிட்டால் எப்படி அவரின் படம் நம் தேசிய கண்மணிகள் ஆன ஆர்.எஸ்.எஸ், ஹிந்து முன்னனி தோழர்கள் நடத்தும் கூட்டங்களில் இருக்கும்.

  By at 12/01/2008 2:16 AM  

 • இதனுடன் வைகோ-வை கைது செய்யாததால் பதவி விலக வேண்டும் என்று சொன்னதையும், அடுத்த நாள் வைகோ-வை கைது செய்ததால் பதவி விலக வேண்டும் என்று சொன்னதையும் சேர்த்தால் மொத்தம் 18422 வரும்.

  :-)

  By at 12/01/2008 9:38 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za