அம்மான்னா சும்மாவா?

Tuesday, August 19, 2008

வியாதி, பெரும்வியாதி

தேசிய முற்போக்கு திருடர்கள் கழகத்தை ஆரம்பித்த நாட்களில் இருந்தே விஜயகாந்து ஒரு குடிகாரன் என்று நாட்டு மக்களுக்கு நிரூபித்து வருகின்றான். அவனின் சிறப்புகளை பற்றி நான் பல பதிவுகள் போட்டு உள்ளேன். சமீபத்தில் (சில வாரங்களுக்கு) முன் நம் பாரம்பரிய இதழான தினமலரில் அவன் குடித்துவிட்டு கூட்டத்தில் தள்ளாட்டத்துடன் பேசியதை போட்டு இருந்தார்கள்.

இப்போது அம்மாவை பெரும்வியாதி என்கின்றான். ஆமாம் அம்மா ஒரு பெரும் வியாதிதான். அவருக்கு எப்படி வியாதி வந்தது என்று சற்று யோசியுங்கள். எழுத்து சித்தராகிய ஸ்ரீமான் பாலகுமாரன் ஒரு கேள்வி பதிலில் இதை ஒரு முறை அழகாக விளக்கி உள்ளார்.

கே: யோகி ராம்சூரத்குமாருக்கு எப்படி புற்றுநோய் தாக்கியது?
ப: உங்கள் கேள்வியே தவறானது. அவருக்கு நோய் தொற்றவில்லை. அவரின் பக்தர்களின் நோயை அவர் வாங்கிக்கொண்டு தன் பக்தர்களை காப்பாற்றுகிறார்.

இதை போலத்தான் உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவும் கோடானுகோடி தமிழர்களின் நோய்களை அவ்வப்போது செய்து வரும் யாகங்களின் மூலம் தனதாக்கி கொள்கின்றார். அம்மாவின் இந்த புனித பணியை 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து வாழ்த்துவோம்.

வாழ்க அம்மா. வீழ்க குடிகாரன்.

8 Comments:

  • அப்ப அம்மா கொஞ்சூண்டு (!???) பூசினாற் போல் இருப்பதுக்கு காரணம் கூட இது தான் போல!!!!

    தங்க தாரகை அம்மா வாழ்க, வீழ்க திம்மிகள் மற்றும் குடிகாகரன் மற்றும் வாயாடி மருத்துவன் மற்றும் இன்ன பிற ...

    By at 8/19/2008 1:29 AM  

  • அது எந்தெந்த வியாதிகள் இலைக்காரரே. லிஸ்ட் கிடைக்குமா?
    அந்த லிஸ்டில் மனவியாதியும் அடக்கமா?
    இருந்தாலும் பரவாயில்லை,
    வாழ்க அம்மா, வாழ்க வியாதிகள், வீழ்க குடிகாரன்.

    By at 8/19/2008 2:27 AM  

  • //ப: உங்கள் கேள்வியே தவறானது. அவருக்கு நோய் தொற்றவில்லை. அவரின் பக்தர்களின் நோயை அவர் வாங்கிக்கொண்டு தன் பக்தர்களை காப்பாற்றுகிறார்.

    //

    ஆஹா!! எழுத்துச்சித்தரின் கண்டுபிடிப்பே கண்டுபிடிப்பு.
    இன்னும் நம் எழுத்துச்சித்தருக்கு டாக்டர் பட்டம் தராமல் இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
    எழுத்துச்சித்தர் வாழ்க. அவரது அரிய கண்டுபிடிப்பு வாழ்க.

    By at 8/19/2008 2:40 AM  

  • இலைக்காரரே எனக்கொரு சந்தேகம்.
    காண்டம் உபயோகித்தால் நோய் தொற்றாதாமே...??
    கேள்வி தவறென்றால் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்த பாலகனை பொறுத்தருளுங்கள்.

    வாழ்க யோகி ராம்சூரத்குமார், வாழ்க புள்ளிராஜா

    By at 8/19/2008 2:48 AM  

  • great அவர்களே,

    வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றி.

    //காண்டம் உபயோகித்தால் நோய் தொற்றாதாமே...??//

    இப்படி ஒரு கேள்வியா. எல்லாம் பரங்கிமலை ஜோதி ஆண்டவரின் செயல் போலும். உங்கள் கேள்வியை தயவுசெய்து நமது பாரம்பரிய தேசிய பத்திரிக்கையான தினமலருக்கு அனுப்பி வையுங்கள். ஸ்ரீமான் அந்துமணி அதற்கு விளக்கம் அளிப்பார்.

    By at 8/19/2008 3:24 AM  

  • //
    எல்லாம் பரங்கிமலை ஜோதி ஆண்டவரின் செயல் போலும்.
    //

    நாகர்கோவில் ராஜன் பிக்சர் பேலஸ் தவிர வேறெதுவும் எனக்கு தெரியாது இலைக்காரரே.

    //
    உங்கள் கேள்வியை தயவுசெய்து நமது பாரம்பரிய தேசிய பத்திரிக்கையான தினமலருக்கு அனுப்பி வையுங்கள். ஸ்ரீமான் அந்துமணி அதற்கு விளக்கம் அளிப்பார்.
    //

    சபாஷ் சரியான சாய்ஸ்!!
    நம் தேசிய பத்திரிகையின் மணி மகுடம் அறுந்த மணி சே.. சே.. அந்துமணி வாழ்க!!

    இங்கே ஆரோக்கியமாக இல்லாதவர்கள் பற்றி ஆரோக்கியமான முறையில் நடக்கும் விவாதத்தை திசை திருப்பிவிட்டேன் என்று எண்ணுகிறேன்.
    வாழ்க அம்மா, வாழ்க வியாதிகள், வீழ்க குடிகாரன்.

    By at 8/19/2008 4:29 AM  

  • அப்ப கூட்டணி கிடையாதா?

    By at 8/19/2008 11:25 AM  

  • பிரபு ராஜதுரை அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    குடிகாரன் அம்மாவின் பாதத்தில் சரண் அடைந்தால் அவனுக்கு பாவவிமோசனம் உண்டு. காலம் பதில் சொல்லும்.

    By at 8/19/2008 5:51 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za