அம்மான்னா சும்மாவா?

Wednesday, April 16, 2008

கொலைகார திம்மிக்கள்

தமிழகத்தில் திம்மிக்கள் நடத்தும் மைனாரிட்டி ஆட்சியின் கீழ் ஹிந்துக்கள் நாள்தோறும் அவதியுற்று வருவது அனைவருக்கும் தெரியும். ஹிந்துக்கள் மீது வரிசையாக கடுமையான தாக்குதல்கள் நடக்கின்றன.

முதலில் எல்லா ஜாதி ஆட்களும் பூஜை செய்யலாம் என்ற உத்தரவு. பிறகு கடவுளுக்கு புரியாத தமிழ் பாஷையில் பூஜை செய்ய ஹிந்துக்களுக்கு கட்டளை. ஸ்ரீராம சேதுவை அழிக்கும் முயற்சி. ஹிந்து சமயத்தின் பெரும் தூணாக விளங்கிய வள்ளலாரின் இடத்தை பாதுகாத்து வந்த குருக்களை அடியாட்களை விட்டு விரட்டியது. பாரதத்தின் முக்கிய புண்ணிய ஸ்தலமான சிதம்பரத்தில் கடவுளின் மறு அவதாரமாக விளங்கும் தீட்ஷிதர்களின் மீது போலீஸ் தடியடி. அவர்களை மிரட்டி தில்லைநாதரின் எதிரே தேவாரம் பாட வைத்தது. இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இப்போது சென்னையில் ஒரு ஹிந்து சாமியார் அவரின் சிஷ்யையோடு கொலை செய்யபட்டு உள்ளார். சுருட்டு சாமியார் என்று சுற்றுபுற மக்களால் அன்போடு அழைக்கபட்ட ஒரு ஹிந்து பெரியவரின் மரணம் சென்னை மக்களை பீதி அடைய வைத்து உள்ளது. இது போன்ற பாவ செயல்களை தடுத்து நிறுத்த உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் வழிகாட்டுதலின் படி அனைவரும் ஆங்காங்கே தீபங்களை ஏற்றுங்கள்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

நான் சில காலமாக பதிவுகள் போடாமல் இருந்தேன். நண்பர் ஒருவர் தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் திம்மியின் பூத் ஏஜண்ட் மீண்டும் தன் திருவிளையாட்டை ஆரம்பித்து உள்ளார் என்று செய்தி அனுப்பினார். அதனால் இந்த பதிவை இடும் நிலைக்கு தள்ளபட்டு உள்ளேன்.

16 Comments:

 • கோவிந்தா கோவிந்தா

  By at 4/16/2008 8:21 PM  

 • திம்மியின் பூத் ஏஜண்ட்டுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
  தங்கத் தாரகை அம்மா நாமம் வாழ்க!!!

  By at 4/16/2008 10:00 PM  

 • //
  உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் வழிகாட்டுதலின் படி அனைவரும் ஆங்காங்கே தீபங்களை ஏற்றுங்கள்.
  //
  நாங்களும் சிங்கையில் தீபங்களை ஏற்றுகிறோம் ..... கோவியார் தலைமையில்...
  ஜெய் ஸ்ரீராம்!!!!!

  By at 4/16/2008 10:15 PM  

 • சுருட்டு சாமியார் மடிப்பாக்கத்தில் ஆசிரமம் கட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிட்லப்பாக்கத்தில் ஆசிரமம் வைத்திருந்ததாக திம்மிக்கள் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.

  By at 4/16/2008 10:42 PM  

 • நண்பரே, சில திம்மிகள் நான் தான் இலைக்காரன் என்று வதந்திகள் கிளப்பி வருகின்றார்கள்.... நான் நீங்கள் இல்லை என்பதைத் தெளிவாக அவர்களிடம் விளக்கவும்....

  By at 4/16/2008 11:16 PM  

 • இலைக்காரன் வாழ்க, அம்மா வாழ்க,
  கொலைக்காரன் கொலைஞர் ஒழிக !
  :)

  By at 4/16/2008 11:19 PM  

 • முரளிகண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 4/17/2008 12:13 AM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  தீபங்களை பக்கத்து வீட்டுகாரர்களுக்கு பாதிப்பு இல்லா வகையில் ஏற்றவும். முடிந்தால் அக்கம்பக்க போலீஸாரிடம் அனுமதி பெற்று உங்கள் பகுதியில் வாழும் ஹிந்துக்களை ஒன்று திரட்டி தீபங்களை ஏற்றுங்கள்.

  By at 4/17/2008 12:16 AM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கும், தகவலுக்கும் நன்றி.

  என்னை மீண்டும் பதிவு எழுத தூண்டியதற்கு மிக்க நன்றி.

  By at 4/17/2008 12:17 AM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி.

  By at 4/17/2008 12:18 AM  

 • திம்மிக்கள் தங்கள் வீடுகளில் எப்படியும் விளக்கேற்றப் போவதில்லை. அங்கேயும் நாமே சென்று விளக்கேற்றி விட்டு வருவோமா?

  By at 4/17/2008 12:35 AM  

 • இலைக்காரன் வந்தாச்சு!
  இலைக்காரன் வந்தாச்சு!!
  இலைக்காரன் வந்தாச்சு!!!

  By at 4/17/2008 1:48 AM  

 • என்ன இலைக்காரரே... எங்களை இவ்வளவு நாள் தவிக்க விட்டு எங்கே சென்றீர்?

  By at 4/17/2008 5:42 AM  

 • //


  திம்மிக்கள் தங்கள் வீடுகளில் எப்படியும் விளக்கேற்றப் போவதில்லை. அங்கேயும் நாமே சென்று விளக்கேற்றி விட்டு வருவோமா?

  By Blogger லக்கிலுக் at 4/17/2008 12:35 AM
  //
  விளக்கேற்றாத திம்மிகளின் வீடுகளைக் கொளுத்துவதற்கு குஜராத்திலிருந்து வந்துள்ள கரசேவகர்கள், இந்து மதக் காவலர்கள் ராமகோபாலன்ஜீ, இலகணேசன்ஜீ தலைமையில் தயாராக உள்ளனர்..

  By at 4/17/2008 8:08 PM  

 • இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா !!!

  இந்தப் பதிவு உங்களுக்கு சமர்ப்பணம்!

  By at 4/20/2008 10:16 PM  

 • உங்களுக்கு அபாரமான எழுத்துத் திறமை இருக்கிறது. தாங்கள் பத்திரிக்கைத் துறையில் இருக்கிறீர்களா?

  தினமலர்?

  :-)

  By at 4/30/2008 11:03 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za