அம்மான்னா சும்மாவா?

Sunday, March 02, 2008

அருமை தீட்ஷிதர்களும் அடாவடி ஆறுமுகமும்

ஹிந்துஸ்தானத்தின் பழம் பெரும் பொக்கீஷமான சிதம்பரம் கோவில் தீட்ஷிதர்களால் பராமரிக்கபட்டு வருகின்றது. அது அவர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு இடம் என்று நீதிமன்றங்களால் நிரூபிக்கபட்டு உள்ளது. இதை பற்றி பல பதிவர்கள் எழுதி உள்ளனர்.

தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி அரசு ஹிந்துக்களுக்கு எதிராக பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதில் ஒன்று சிதம்பரம் கோவிலின் உள்ளே தமிழில் தேவாரம் பாடலாம் என்ற ஒரு அரசாணை. ஆணை வந்ததும் கலககாரரான அடாவடி ஆறுமுகம் தன் குண்டர் படையுடன் கோவிலின் உள்ளே நுழைய முயன்று உள்ளார். அவருக்கு பாதுகாப்பாக மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி அரசின் போலீசாரும் சென்று உள்ளனர்.

பாரம்பரிய முறைகளை சீரழிக்க வந்த கூட்டத்தினை துணிந்து எதிர்த்தனர் தீட்ஷிதர்கள். அக்காலத்தில் புலியை முறத்தால் விரட்டினார்கள் என்று சில குடிகார புலவர்கள் (நன்றி ஆ.விகடன் மதன்) பொய்யான தமிழ் வரலாறு எழுதியதை படித்து இருக்கின்றோம். ஆனால் இன்று நம் கண் முன் வீரக்காட்சிகள் அரங்கேறின. கோவிலின் புனித தன்மையை அழிக்க வந்த அரக்கர் கூட்டத்தை தன் உயிரை துச்சமென நினைத்து எதிர்த்து நின்றனர் தீட்ஷிதர்கள். அதை பார்த்த என் உடல் மெய்சிலிர்த்துவிட்டது. இதை போலத்தானே நம் முன்னோர்கள் முகமதிய மற்றும் கிருத்துவ மிஷினரிகளின் படை எடுப்பை எதிர்த்து நின்று இருப்பர் என்று நினைத்தேன். அடடா தொலைகாட்சியில் பார்த்த நிகழ்வுகளை எழுத சரியான வார்த்தைகள் வரவில்லை.

மைனாரிட்டி ஆட்சியின் போலீஸ் துணையுடன் உள்ளே புகுந்த குண்டர்களால் தமிழில் ஒழுங்காக பாட முடிந்ததா. இல்லையே. இந்த அடிமுட்டாள்களுக்கு ஈசன் பெரியவரா அல்லது கருணாநிதி பெரியவரா என்று தெரியவில்லை. அடாவடி ஆறுமுகம் பாடும் போது போலீசாரின் தடியடியையும் தாங்கி கொண்டு ஈசனின் சன்னதியை காத்து நின்றனர் வீர தீட்ஷிதர்கள். ஈசனை தரிசிக்க முடியாமல் தோல்வியில் வீடு திரும்பினார் அடாவடி ஆறுமுகம்.

நமது பாரம்பரிய முறைகளை காக்க இது போன்ற வீர தீட்ஷிதர்கள் இருக்கும் வரை ஹிந்துஸ்தானத்தை ஒருவராலும் அசைக்க முடியாது.

வாழ்க தீட்ஷிதர்கள். வீழ்க அடாவடிகள்.

1 Comments:

  • :))))))))

    By at 3/02/2008 7:29 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za