அம்மான்னா சும்மாவா?

Thursday, February 21, 2008

கீழ்தரமான திராவிட திம்மிக்கள்

பாரததாயின் பாரம்பரியத்தை எப்போதும் கேலி செய்யும் குணம் ஈவேராவிற்கு உண்டு. அவரின் குண்டர்படையும் அவருக்கு சளைத்தது அல்ல என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் கொலைஞரின் பூத் ஏஜண்ட் ஆன ஒரு பதிவர் அம்மாவின் பிறந்த நாள் புகைபடத்தை வைத்து ஒரு பதிவு போட்டுள்ளார். அம்மாவின் பிறந்த நாள் விழா உலகம் எங்கும் கோலகலமாக கொண்டாட படுவதை கண்டு வயிறெரிந்த வீணர்கள் இப்படி கேவலமான செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

அம்மாவின் பிறந்த நாள் விழா ஒரு ஹிந்து திருக்கோயிலின் உள்ளே நடைபெற்று உள்ளது. தகுதியும், திறமையும் வாய்ந்த கடவுளின் பிரநிதிகள் அந்த விழாவை முன்னின்று நடத்தி வைத்துள்ளனர். பாரம்பரிய மிக்க அவ்விழா சனாதன தருமத்தில் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் படி நடைபெற்று உள்ளது. சனாதன தரும குறியீடுகள் ஒவ்வொன்றும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களால் எழுதபட்டவை. உலகின் பல தலை சிறந்த அறிவியல் அறிஞர்கள் அதை பிரித்து ஆராய்ந்து அவை எல்லாம் அறிவியல் சார்ந்தவை என்று நிரூபித்து உள்ளனர். மெக்காலே கல்வி முறையில் வாந்தி எடுத்து படித்தவர்களுக்கு ஹிந்துஸ்தானத்தின் பழம் பெரும் பொக்கீஷங்களை பற்றி எதுவும் தெரியாது.

அவ்விழாவில் நடைபெற்றதாக நம்பபடும் ஒரு நிகழ்வின் புகைபடத்தை வைத்து கதை எழுதுவது ஒரு கீழ்த்தரமான செயல் என்பதை அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகின்றேன். பதிவு எழுதியவர் தான் சுஜாதா மற்றும் பாலகுமாரன் அளவிற்கு ஸ்வாரஸ்யமாக எழுதுபவர் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இப்படி பொய் உரைகளை எழுதி வந்தால் அந்த பதிவர் ஜெமோ அளவிற்கு கூட ஸ்வாரஸ்யமானவர் இல்லை என்றாகிவிடும்.

வாழ்க அம்மா பல்லாண்டு. வீழ்க திம்மிகள்.

6 Comments:

 • பின்னூட்ட கொலைஞர் தனம்!

  By at 2/21/2008 2:05 AM  

 • அம்மா மீது அவதூறா? நெஞ்சு பொறுக்குதில்லையே! பாவிகளா!
  உலகில் வாழும் அவதார தெய்வம். கறை படியாத கரங்கள். பாவத்தை பார்வையாலும் தீண்டாத விழிகள். எதிரியைக்கூடாத வசை கூறாத திரு வாய்.

  பண ஆசையை அறியாத இதயம்.
  அகதிகளை அரவணைக்கும் கரங்கள்

  அம்மாவையா திட்டுகின்றார்கள்!!


  என்ன கொடுமையடா!


  அம்மா பிள்ளை

  By at 2/21/2008 3:42 AM  

 • Ilaikkaran Back to form...

  By at 2/21/2008 3:54 AM  

 • வந்தாச்சா??? கொஞ்சம் நல்லா பொழுது போகும் !!

  ;)

  By at 2/21/2008 4:42 AM  

 • அதென்ன ஆண்கள் மட்டும் அறுபதாங்
  கல்யாணம் செய்து கொள்வது?
  திருக்கடையூர் ஆண்களின் அறுபதெற்
  கென்றே படைக்கப் பட்டதா?
  வாழ்க,அறுபதடையும் பெண் நண்பர்கள்.

  By at 2/21/2008 3:14 PM  

 • அம்மாவை திட்டுவதென்றால் நேரடியாக திட்டிவிட்டு போங்கள். அதை விடுத்து கீழ்த்தரமான் திராவிட திம்மிகள் என அனைத்திந்திய அண்ணா 'திராவிட' முன்னேற்றக் கழக தலைவியை மறைமுகமாக திட்டுவதேன்.

  By at 2/21/2008 8:00 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za