அம்மான்னா சும்மாவா?

Thursday, December 06, 2007

Don’t know Tamil. Speak in English, you Fucker.

நேற்று இரவு சென்னையில் நண்பர் ஒருவரோடு நுங்கம்பாக்கம் சாலையில் சென்று கொண்டு இருந்தேன். மாருதி கார் ஒன்று வேகு வேகமாக பலரை முந்தி கொண்டு வந்தது. வண்டியின் ஓட்டுனர் அபாயகரமாக ஓட்டி வந்தார். எங்கள் வாகனத்தின் மீதும் உரச முயன்றது. கோபம் அடைந்த என் நண்பர் அந்த வண்டியை விரட்டி அண்ணா மேம்பாலத்தின் கீழே ஒரம் கட்டினார். வண்டியின் கண்ணாடியை இறக்கி "ஒழுங்கா வண்டியை ஓட்டுடா" என்றார். அந்த வாகன ஓட்டி ஒரு இளைஞர். தன் வண்டியை விட்டு கீழே இறங்கி எங்களிடம் வந்தார். என் நண்பர் மீண்டும் "தம்பி ஒழுங்கா வண்டியை ஓட்டு" என்றார். அதற்கு வந்த பதில்தான் இந்த பதிவின் தலைப்பு.

கடும் கோபமுற்ற நாங்கள் இருவரும் கீழே இறங்கினோம். அவனை அறைந்து தள்ள நான் முயன்றேன். என் நண்பர் என்னை தடுத்துவிட்டார். அருகில் இருந்த காவலரிடம் புகார் அளித்தோம். அவர் வந்து விசாரிக்க ஆரம்பித்தார். வந்து விழுந்த முதல் வார்த்தைகள் “I am a software engineer. Going for a party. What’s the problem?”.

காவலரின் விசாரணையில் கோபமுற்ற இளைஞன் அவரின் பெயரையும் பேட்ஜ் நம்பரையும் நோட் செய்ய முயன்றான். ஆத்திரம் அடைந்த காவலர் இது “drunken driving” என்று கூறி தன் சார்ஜண்டை வரவழைக்க ஏற்பாடு செய்தார்.

போக்குவரத்திற்கு இடையூராக இருந்ததால் இரண்டு வண்டிகளையும் மேம்பாலத்தின் மற்றொரு பகுதிக்கு எடுத்து சென்றோம். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட இளைஞன் பலரை மொபைல் மூலம் அழைத்தான். காவலரிடம் அந்த போனில் பேசும்படி கெஞ்சினான். நாங்கள் அவர் பேசகூடாது என்று சொல்லிவிட்டோம். நிமிடங்கள் கடந்தன.

காவலரோ “இந்த மாதிரி பசங்களை விட கூடாது சார். பணம் அதிகம் கிடைபதால் இப்படி குடித்து கும்மாளம் அடிக்கின்றார்கள். இவர்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றது” என்றார். கர்நாடகாவில் தமிழ்நாட்டு வண்டிகளை கண்டால் அங்குள்ள போலீஸ்காரன் சில கிலோ மீட்டர் பின்னால் தொடர்ந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி "உன்னை அங்கேதானே நிற்க சொன்னேன். நீ எப்படி கிளம்பி வரலாம்" என்று மிரட்டி ஏராளமான பணம் பறிக்கின்றனர் என்றும் கூறினார்.

அந்த இளைஞன் எங்களிடம் வந்து கெஞ்ச ஆரம்பித்தான். Sorry sir. I will fall in your feet. Let me go. I am sorry. I have never begged like this in my life. Please let me go …. நாங்கள் இருவரும் எதையும் பேசவில்லை. கெஞ்சல் வேறு மாதிரி திரும்பியது. Tell me how much money you want. I will make arrangements. ஆத்திரம் அடைந்த நான் "இது தமிழ்நாடுடா நாயே. தமிழ்ல பேசு" என்றேன். பிறகு “even if you offer me 1 crore I will never let you off. What do you think? என்றேன். என் நண்பர் தொடர்ந்தார் “First of all try to respect fellow humans. I am a software manager. You think we are cheap just because we spoke in Tamil” என்றார்.

சார்ஜண்ட் வந்து சேர்ந்தார். அவரிடம் புகார் செய்தோம். இளைஞனின் கெஞ்சல் அழுகை ஆனது. பிறகு அவரிடமும் மொபைல் மூலம் பேச சொன்னான். அவர் அந்த மொபைலை வாங்கி பேசினார். இது drunken driving.லைசன்ஸ் வேறு இல்லை. இது மஹாராஷ்டிரா வண்டி. இங்கு ஓட்டுவதற்கு பதிவு செய்துள்ளாரா என்ற கேள்விகளை அடுக்கினார். பிறகு அந்த மொபைல் என்னிடம் வந்தது. பேசியவர். “Sorry sir. அவருக்கு தமிழ் தெரியாது” என்றார். “தமிழ் தெரியாதது தப்பில்லை, ஆனால் ஒழுங்காக பேசி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது” என்றேன்.

சார்ஜண்ட் குற்றத்தை பதிவு செய்தார். இளைஞனின் ஆத்திரம் அதிகமானது. How much will they charge? May be 5000 or 7000. It doesn’t matter என்றான். பிறகு மருத்துவ பரிசோதனைகாக இளைஞன் ஆட்டோவில் ராயபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டான். காவலரிடம் நன்றி தெரிவித்துவிட்டு எங்கள் வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம்.

நம் சமுதாயம் சரியான வழியில்தான் செல்கின்றதா என்ற பெரும் கவலை எனக்கு ஏற்பட்டு உள்ளது.

வாழ்க பாரதம்.

44 Comments:

 • pinnootta sadhi

  By at 12/06/2007 10:33 PM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 12/06/2007 10:36 PM  

 • இலைக்காரர் பதிவு திருடப்பட்டு விட்டதா? அம்மா, கமலம் தவிர நல்ல விசயங்கள் வருகிறது ? :-))

  By at 12/06/2007 10:46 PM  

 • கல்வெட்டு (எ) பலூன் மாமா அவர்களே,

  வருகைக்கு நன்றி. இதுவும் ஒருவகையில் அம்மாவின் புகழ் பாடும் பதிவுதான். மைனாரிட்டி அரசு நடத்தும் கயவன் கருணாநிதி ஆட்சியில்தான் இப்படி எல்லாம் நடக்கின்றது என்ற ஒரு வரியை சேர்க்க மறந்து விட்டேன் :-).

  By at 12/06/2007 10:51 PM  

 • என்னாடா கொஞ்ச நாளா பதிவையே கானோமே என்றுப் பார்த்தேன்...

  அந்த இளைஞர் சிரி ராமரை வேண்டியிருந்தல், ராமர் அங்கே பிரசன்னமாகி, உங்களை அவரை மன்னிக்கச் சொல்லியிருப்பார்..

  தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்...சீ சீ..

  தமிழைப் பழித்தவனை "அம்மா" தடுத்தாலும் விடேன்...

  By at 12/06/2007 10:56 PM  

 • பாருங்கள், கலைஞர் ஆட்சியில் காவல்துறை எவ்வளவு பொறுப்பாக நடக்கிறது..லஞ்சம் வாங்காமல்..இதை போய் குறை கூறுகிறிர்களே..கலைஞர் வாழ்க..காவல்துறை வாழ்க...

  By at 12/06/2007 11:00 PM  

 • TBCD அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  இது போன்ற இளைஞர்களை விட்டுவிட்டால் மலேசியாவை போல பிற்காலத்தில் தமிழர்கள் தமிழ்நாட்டில் சம உரிமை கேட்டு போராடும் நிலை வரலாம்.

  By at 12/06/2007 11:08 PM  

 • Mr.பொது ஜனம்... அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  காவலர் லஞ்சம் வாங்காமல் இருந்தது அம்மாவின் தொண்டனான என்னால்தான்.

  By at 12/06/2007 11:11 PM  

 • இலைக்காரரே என்ன ரொம்பா நாளா ஆளயே காணோம்?
  திரும்பி வந்து இப்படி சீரியசான பதிவ போட்டிருக்கிறீங்க?
  பழய காமடி எல்லாம் இனிமேல் கிடையாதா?

  By at 12/06/2007 11:12 PM  

 • இலைக்காரார் பதிவு போட்டுட்டார்னு நண்பர் ஜெகதீசனுக்கு தகவல் அனுப்புங்கப்பா.
  அவர இன்னும் காணோம்.

  By at 12/06/2007 11:13 PM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  வேலை காரணமாக பதிவுகள் வெளிவரவில்லை. நான் எப்போதும் அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலைதான்.

  By at 12/06/2007 11:23 PM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஆஹா. என்னை வைத்து காமெடி எதுவும் பண்ணலையே?

  By at 12/06/2007 11:25 PM  

 • இலைக்காரன் வாழ்க.
  தமிழன்னை வாழ்க.
  செயாம்மா வாழ்க.
  சசியம்மா வாழ்க.

  By at 12/06/2007 11:27 PM  

 • ஜெகதீசன் சொல்லாமல் இது நல்ல பதிவு என்று என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

  By at 12/06/2007 11:31 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 12/06/2007 11:39 PM  

 • I don't think the way you and the other person behaved are same.

  Don't you think the following statement made you no difference with the other person "in treating (other language speaking?) people cheap" ..??

  "...ஆத்திரம் அடைந்த நான் "இது தமிழ்நாடுடா நாயே. தமிழ்ல பேசு" என்றேன்..."

  Request, you to follow the good behaviour in treating the people, as like you expect from others.

  Pandyah !

  By at 12/07/2007 12:48 AM  

 • இலைக்காரரே சிரி ராமரின் பிறந்த நாளை கண்டுபிடித்து விட்டார்களாமே..
  இனிமேல் நாம் 81,34,98,789 இந்துக்களும் கி.மு கி.பி என்பதற்கு பதில்லாக ரா.மு ரா.பி (ராப்பிச்சை அல்ல) என்று உபயோகிப்போம்.

  தங்கத் தாரகை அம்மா வாழ்க.
  தகரத் தாரகை சின்னாம்மா வாழ்க.

  By at 12/07/2007 1:16 AM  

 • yours அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  "good behaviour" எல்லாம் நம்மிடம் மற்றவர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பொருத்தே அமையும். எதற்கும் ஒர் அளவு உண்டு. அந்த இளைஞன் உபயோகித்த வார்த்தைகள் எல்லாவற்றையும் நான் பதிவிடவில்லை. காவலர்களும் என் நண்பனும் அருகில் இருந்ததால் வேறு எதுவும் நிகழவில்லை. இல்லையேல்....

  By at 12/07/2007 1:45 AM  

 • great அவர்களே,

  வருகைக்கும் செய்திக்கும் மிக்க நன்றி.

  By at 12/07/2007 1:46 AM  

 • //Pandyah !//
  நன்றி இலைக்காரரே இந்த மளையாள வெறியனுக்கு நல்ல பதில் அளித்துள்ளீர்கள்

  By at 12/07/2007 2:26 AM  

 • இலைக்காரரே உங்கள் வீரம் மெச்சும்படியாக உள்ளது. என்னதான் இருந்தாலும் நீங்கள் தமிழர் இல்லையா..!!!!!!

  By at 12/07/2007 2:28 AM  

 • அவர்கள் இல்லாதிருந்தால்,

  உன்மையான அம்மா தொண்டர்களாக ஆகி, கொளுத்தியிருப்பீர்கள்..அதைத் தானே சொல்ல வந்தீர்கள்...

  By at 12/07/2007 4:02 AM  

 • great அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  தமிழ்நாட்டில் தமிழர்களை பார்த்து fuck, fucker என்று கூறிய ஒருவனை சும்மா விட்டுவிட நான் என்ன திம்மியா?.

  By at 12/07/2007 5:10 AM  

 • TBCD அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  எனக்கு வந்த ஆத்திரத்தில் நிச்சயம் கொளுத்தி இருப்பேன்.

  By at 12/07/2007 5:10 AM  

 • சர்தான், தப்புத்தான் அவன் செஞ்சது.

  அது இருக்கட்டும், தமிழையே தாய் மொழியாவும், (சுத்தம் செய்யும்) தொழில் மொழியாவும், வாழ்க்கை மொழியாவும் கொண்டுனு வர்ர கீழ்த்தட்டு மக்களாக இருந்தாக்கா மட்டும் அப்டியே கட்டி புடிச்சி புகழ்ந்து தள்ளிடுவீங்களா என்ன?

  :-(

  By at 12/07/2007 5:15 AM  

 • இலைக்காரன் அவர்களே தாங்களும் சென்னைவாசி தானோ? :-)

  By at 12/07/2007 5:49 AM  

 • சரியாக விசாரித்தீர்கள, அந்த Software Engineer பிரமோத் மகாஜனின் உறவினராக இருக்கப் போகிறார்.

  By at 12/07/2007 6:45 PM  

 • மாசிலா அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  இங்கே மொழி ஒரு பிரச்சனை இல்லை. படித்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கின்றனரே என்பதுதான் என் கவலை.

  By at 12/07/2007 7:58 PM  

 • லக்கிலுக் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  சென்னையும், சென்னையை சார்ந்த இடமுமே என் இருப்பிடம்.

  By at 12/07/2007 7:58 PM  

 • உறையூர்காரன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அந்த இளைஞன் சரக்கு மட்டும் அடித்தது போல் தெரியவில்லை. மருந்தும் உட்கொண்ட மாதிரிதான் நடந்து கொண்டான்.

  By at 12/07/2007 8:00 PM  

 • இலைக்காரரே, இதுவே அம்மாவின் புகழைப் பாடாத (எங்க அம்மா இல்ல, 80 கோடி இந்துக்களின் அம்மா) கடைசிப் பதிவாக இருக்கட்டும்.

  By at 12/07/2007 9:32 PM  

 • //நம் சமுதாயம் சரியான வழியில்தான் செல்கின்றதா என்ற பெரும் கவலை எனக்கு ஏற்பட்டு உள்ளது.//

  கவலை வேண்டாம் இலைக்காரரே, திம்மிகளின் ஆட்சியில் சரியான வழி இல்லைதான். நமது பிளாட்டிண தாரகை அம்மா வந்துதான் 6 வழி சாலை போட்டு சரியான வழி காட்ட வேண்டும்.

  By at 12/07/2007 9:37 PM  

 • இலை, அம்மாவின் தொண்டராக இருந்தும் ஏனிந்த தமிழ்வெறி?

  By at 12/07/2007 11:23 PM  

 • பல்லுபிச்சை அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 12/08/2007 1:29 AM  

 • ஜாலிஜம்பர் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  சுத்த தமிழச்சியான அம்மாவின் தொண்டன் வேறு எப்படி இருக்க முடியும்?

  By at 12/08/2007 1:29 AM  

 • காசு உள்ள திமிருக்கும், தமிழன் தானே என்ற அலச்சியத்துக்கும் சரியான பாடம் புகட்டிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

  By at 12/16/2007 7:27 PM  

 • நல்ல பதிவு!!

  By at 12/17/2007 9:01 PM  

 • ஜோதிபாரதி அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 12/18/2007 12:09 AM  

 • Thamizhmaagani அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 12/18/2007 12:10 AM  

 • whether rich man or poor man chennai traffic fucks sorry sucks. not a single guy follows the rule.

  you did a great job by teaching the moron a lesson. good show.

  By at 12/18/2007 12:14 AM  

 • //சார்ஜண்ட் குற்றத்தை பதிவு செய்தார். இளைஞனின் ஆத்திரம் அதிகமானது. How much will they charge? May be 5000 or 7000. It doesn’t matter என்றான்.//

  மவனே. 3 மாசத்துக்கு களி திங்க வைக்க வேண்டும்...

  By at 12/18/2007 4:21 AM  

 • சீனு அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  எனக்கு தோன்றியதை சொல்லிவிட்டீர்கள். பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்று என்னும் இது போன்ற இளைஞர்களை உள்ளே தள்ளி கவனித்தால்தான் கொழுப்பு சற்று குறையும்.

  By at 12/18/2007 6:22 AM  

 • மிக நல்ல பதிவு.
  ஆணவம் சில சமயம் சாதிக்கலாம்.
  ஆனால் என்றும் இடும்பை தரும் என்பதை இந்த softwareகாரர்கள் - குறிப்பாகச் சென்னையில் கொட்டமடிக்கும் இளவட்டங்கள் - புரிந்து கொண்டால் நல்லது.

  By at 12/18/2007 7:56 PM  

 • Sundara அவர்களே,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  By at 12/18/2007 11:52 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za