அம்மான்னா சும்மாவா?

Monday, January 21, 2008

பசுக்களை கொன்ற கருணாநிதி

ராமேஸ்வரம் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 15 பசு மாடுகள் பட்டினியால் இறந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 55 பசுக்களில் 15 பசுக்கள் இறந்துவிட்டதாகவும், மேலும் சில பசுக்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.இந்தியாவிலேயே புண்ணிய ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் கோவிலுக்கு பசு மாடுகளை பக்தர்கள் தானமாக வழங்குவது வழக்கம். இப்படி தானமாக வழங்கப்படும் பசு மாடுகளை பராமரிக்க கோயிலிலேயே பசுப்பட்டி உள்ளது.

ஆனால், இந்த பசுப்பட்டி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாலும், சரியான முறையில் பராமரிக்கப்படாததாலும், குறைந்தபட்ச தீனி கூட வழங்காததாலும் பசுக்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.இறந்த பசு மாடுகளை பரிசோதித்த மருத்துவர் குழு, மாடுகளை எந்தவிதமான நோயும் தாக்கவில்லை என்றும், சத்துக்குறைவு மற்றும் தீவனப்பற்றாக்குறை காரணமாகவே பசுக்கள் இறந்து போயுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

வாயில்லா ஜீவன்களை பட்டினியால் சாகடிப்பது என்பது மிகப் பெரிய பாவச் செயல். பசுக்களின் பராமரிப்பு செலவிற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 900 மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதுவும் முழுமையாக அவைகளுக்காக செலவழிக்கப்படுவதில்லை என்றும் தெரியவருகிறது.இந்து சமய அறநிலையத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, பக்தர்கள் பசுக்களை தானமாக கொடுக்கிறார்களே தவிர அவற்றை பராமரிப்பதற்கான செலவுகளை கொடுப்பதில்லை என்று கூறி, மேற்படி பசுக்களின் இறப்பை அவர் நியாயப்படுத்தியிருக்கிறாரே தவிர, பசுக்களின் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறவுமில்லை, அதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் இத்தகைய பேச்சும், போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.இதற்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

10 Comments:

  • ஏங்கானும்...

    சொன்னா கோவிக்க மாட்டேளே...டெய்லி பூசைக்கு கோமியம் புடிக்கறப்போ உங்களவா என்ன பண்ணீண்டுருந்தா...அவா கவனிச்சிருக்கலாம்லியோ...

    அவா கட்ற கல்லாவுல கொஞ்சம் கோமாதாவுக்கும் போட்ருந்தா எல்லாம் கொழுகொழுன்னு இருந்திருக்குமே...

    வேதத்துல இதபத்தி சொல்லலையாங்கானும்....

    (மேலே சொன்ன விதத்தில் எனக்கு உடன்பாடில்லை...இருந்தாலும் மலிவான உங்கள் நோக்கத்தை கண்டிக்கவே அவ்வாறு எழுத நேர்ந்தது....மன்னிக்கவும்)

    By at 1/21/2008 9:11 AM  

  • மத்திய அரசு உடனே தமிழ ஆட்சியைக் கலைக்க வேண்டும். பசுக்கள் இறந்த தகவல்கள் உடனே ஐ.நா மன்றில் விசாரித்து தி.மு.க மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.
    ஐ. நா செயலர் மூன் அவர்கள் இதில் தி.மு.க ஆட்சிக்கு சாதகமாக செயற்படுவராயின் நான் தீக் குளிப்பேன்.


    அம்மா பிள்ளை.

    By at 1/21/2008 10:49 AM  

  • இரண்டாம் சொக்கன் அவர்களே,

    வருகைக்கு நன்றி.

    பூஜைக்கு கோமியத்தை பிடிக்கும் அளவிற்கு நாங்கள் குறைந்துவிடவில்லை. அதற்கு நிறைய பேர் இருக்கின்றனர்.

    By at 1/21/2008 12:39 PM  

  • அம்மா பிள்ளை அவர்களே,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    By at 1/21/2008 12:40 PM  

  • யோவ் இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? விட்டா முதலமைச்சரை பருத்திக்கொட்டை புண்ணாக்கு எல்லம் அரைச்சு மாட்டுக்கு தண்ணிகாட்ட சொல்லுவீங்க போல!!

    By at 1/22/2008 4:11 AM  

  • காணாம போனவரு திரும்ப வந்துட்டாரு.. அந்த அம்மாவுக்கு என்ன வேலை"? அவ வீட்டு நாய்க்கு வயத்தால போனா கூட அதுக்கு கருணாநிதி தான் காரணம்னு சொல்லுவா.

    இவளும் இவளின் தொடுப்பு தோழியும் சரக்கு அடிச்சுட்டு மகாமம்ல குளிச்சப்போ நடந்ததே படுகொலை.. அப்போ என்ன பண்ணா ? இவ தானே ஆட்சில இருந்தா??

    மக்களே போயிட்டாங்க, இவ பசுக்கு பேச வந்துட்டா...
    சரியான இவடா அவ.. ஆக்கங்கெட்டவ

    By at 1/22/2008 8:49 AM  

  • ஜெக்கு 3 மாசம் கெடு , அதுக்குள்ளே திருந்தவில்லையென்றால், நான் திருத்துவேன். ஜெ க்கு பாடம் புகட்டுவேன்.

    - நடராஜன்.

    ===============
    இன்ஸ்டன்ட் காபி, பாஸ்ட் புட் கட்சியா என் கட்சி இருக்கலாம், உங்க கட்சி மாதிரி வேஸ்ட் புட் கட்சியில்லை..

    - விஜயகாந்த்

    அம்மாவுக்கு வந்த சோதனைய பாருடா.

    By at 1/22/2008 10:33 PM  

  • muthu அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    By at 1/25/2008 6:51 AM  

  • வாக்காளன் அவர்களே,

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    By at 1/25/2008 6:51 AM  

  • தமிழ் நாட்டில் பசுமாட்டை பற்றி கவலைப்பட நிறைய பேர் இருக்கும்போது அதனுடைய கணவன்மார்களை பற்றியும் எழுத ஆட்கள் இல்லையா ? அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு பற்றி சொல்கிறேன்.

    By at 1/26/2008 2:39 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za