அம்மான்னா சும்மாவா?

Thursday, January 10, 2008

உலக ஹிந்துக்களே ஒன்றுபடுங்கள்

ஹிந்துஸ்தானத்தின் தலையாய திம்மியான கொலைஞர் பொங்கல்தான் தமிழ் வருடத்தின் முதல் நாள் என்று அறிவிக்க போவதாக முன்னோட்டம் காட்டியுள்ளார். தமிழர்கள் பல லட்சம் ஆண்டுகளாக கொண்டாடி மகிழ்ந்து வரும் ஒரு புனித பண்டிகையை அழிக்க முற்படும் இந்த கயவனுக்கு நல்ல புத்தியை தர 80 கோடி ஹிந்துக்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.

கிருத்துவ மிஷினரிகளின் அடிவருடிகளும், முகமதிய ஜிகாதிகளின் அடிவருடிகளும், சீன ஏஜண்டுகளின் கைகூலிகளும் இதில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். மதத்தால் நாம் பிளவு பட்டு இருந்தாலும் பண்டிகையை அழித்துவிட்டால் அநியாயமாக ஒரு நாள் விடுமுறை எல்லோருக்கும் கிட்டாமல் போய்விடும்.

ஜெய் ஹிந்த்.

9 Comments:

 • ஏமாற்றம்...!

  ஸ்ரீமான் மோடியின் தமிழக வருகையை வாழ்த்தலாம் என்று வந்தேன். கொலைஞரை பற்றி இருக்கு.

  :(

  By at 1/10/2008 11:34 PM  

 • எங்கே ரொம்ப நாளாக மம்மியின் பேர் சொல்லி கும்மியடிக்கும் ஒரு சீவனைக் காணமே என்று பார்த்திருந்தேன்.

  சரக்கு தீர்ந்துவிட்டதா... ;)

  By at 1/10/2008 11:36 PM  

 • pinnudda kayamai

  By at 1/10/2008 11:36 PM  

 • இலைக்கார‌ன் உங்க‌ளுடைய‌ ப‌திவில் அனானி வ‌சதி இல்லாத‌ கார‌ண‌த்தினால்., 'அம்மாஞ்சி அம்பி' என்கிற‌ பெய‌ரில் ஒரு அனானி இந்த‌ க‌மெண்டை என‌து ப‌திவில் போட்டிருக்கிறார்.....
  ===================================================================


  'இந்தியா' பரத முனிவரால் உருவாக்கப்பட்ட தேசம் அது இந்துமத கலாச்சாரத்தையே தனது வலிமையாக கொண்டது, அதனால் இந்தியா என்று அழைப்பதை காட்டிலும் இந்த புனித வரலாற்றை குறிக்கும் வகையில் பாரதம் என்றே அழைக்க வேண்டும், முனிபுங்கவர்களால் உருவாக்கப்பட்ட தேசம் இது என்பதால், புன்ய பாரதம் என்று நம்மளவாக்கள் கூறி வருகிறோம்!!அப்படியே அழைக்க வேண்டும் என்று சங்கல்ப்பம் செய்து கொண்டு வேலை செய்கின்றன நமது ஹிந்துக்களின் நலனை பாதுகாக்கும் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார், பி.ஜே.பி, அ.தி.மு.க போன்ற அமைப்புகள்!!

  இப்படியொரு புனித வரலாற்றை கொண்ட பாரதம் எனும் பெயர் கொன்ட 'பாரத ரத்னா' விருதை, வாஜ்பாய்க்கும், எம்.ஜி.ஆர்க்கும், அம்மாவுக்கும் அளிப்பது மிகப்பொருத்தமானது, ஆனால் கொலைஞரோ இதை மறுத்து திராவிடம் என்று பேசி இந்த புன்ய பாரதத்தை துண்டாட நினைத்தவர், இன்றளவிலும் தமிழர்கள் பற்றி பேசி பாரதத்தினரை துண்டாட நினைப்பவர், இந்த கொலைஞருக்கும் 'பாரத ரத்னா' விருது கொடுத்து அவரை பெருமைபடுத்த வேண்டும் என்று ஒருவர் எழுதியிருக்கிறாரே அது சரியா இலைக்காரன்?

  ஆனால் ஒருவகையில் இந்த திராவிட கொழுந்து கொலைஞருக்கு 'பாரதம்' என்று பெயர் தாங்கிய விருதை கொடுத்து ஹாஷ்யம் செய்வதை காட்டிலும் அந்த நீசனை வேறு எந்த முறையிலும் அவமானப்படுத்த முடியாது என்று நான் கருதுகிறேன், அதனால் நான் அதனை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்., நீங்கள் என்ன கருதுகிறீர்கள் இலைக்காரன்!!

  By at 1/10/2008 11:48 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. விரைவில் ஸ்ரீமான் மோடியின் விஜயத்தை பற்றி பதிவு வரும்.

  By at 1/11/2008 1:32 AM  

 • tbcd அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  வேலை பளுவின் காரணத்தினால் சற்று ஒதுங்கி இருந்தேன்.

  By at 1/11/2008 1:33 AM  

 • முரளி கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  By at 1/11/2008 1:33 AM  

 • ஸ்டாலின் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  ஹிந்துக்களின் விரோதியான கொலைஞருக்கு எந்த விருதும் அளிக்கபட கூடாது என்பது என் கருத்து. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்ரீராமரை கேலி செய்தவருக்கு பாரதரத்னாவா? என்ன கொடுமை சார் இது.

  ஸ்ரீமான் வாஜ்பேயிக்கு கொடுப்பதை விட ஹிந்து சாம்ராட் ஸ்ரீமான் மோடிக்கும், ஸ்ரீராம சேதுவை காக்க கடும் போராட்டம் நடத்தி வரும் அம்மாவிற்கும் இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கபடவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

  By at 1/11/2008 1:39 AM  

 • இலைக்காரன் அவர்களே! எனக்குத் தெரியாமலேயே என் வலைப்பூவில் ஒரு பதிவு ஸ்ரீமான் மோடியை பற்றி வந்திருக்கிறது. ஒருவேளை நீங்கள் என் வலைப்பூவை ஹாக் செய்து பதிவு போட்டு வருகிறீர்களோ? சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான் ஸ்ரீமான் இட்லிவடையாரின் வலைப்பூவை திம்மிக்கள் சிலர் ஹாக் செய்துவிட்டார்களாம்.

  By at 1/11/2008 9:02 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za