அம்மான்னா சும்மாவா?

Monday, February 25, 2008

அம்மா என்றால் அன்பு

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா பல கோடி ஆண்டுகள் வாழ 80 கோடி ஹிந்துக்களும் பூஜைகள் செய்வோம். 60 ஜோடிகள் இலவச திருமணத்தின் போது அம்மா இவ்வாறு பேசினார்.உலகம் முழுவதும் இலையுதிர் காலம் இருந்தாலும் அதிமுகவுக்கு என்றும் வசந்த காலம் தான். அதிமுக என்பது கால ஓட்டத்தில் காய்ந்து போகாத கற்பக விருட்சம். எந்த வேடனாலும் இதனைக் குறி வைக்க முடியாது. எந்த விஷ அம்பாலும் இதனைக் காயப்படுத்த முடியாது. ஏனெனில் இது எம்.ஜி.ஆர் என்ற தேயாத சந்திரன் வளர்த்த தெய்வீக மரம்.

ஆதிக்க கழுகுகளிடம் இருந்தும், அடாவடி ஓநாய்களிடம் இருந்தும், அக்கிரமக்கார மலைப் பாம்புகளிடம் இருந்தும் நான் அதிமுகவைக் காப்பாற்றி வருகிறேன். எம்ஜிஆரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி கட்சியைக் காப்பாற்றி வருகிறேன். தாய் ஸ்தானத்தில் இருந்து தினமும் கட்சியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி உங்கள்மீது அன்பு பாராட்டுகிறேன். அதனால்தான் நீங்கள் எல்லோரும் என்னை அம்மா என அன்புடன் அழைக்கிறீர்கள்.

இதில், 60 ஜோடியினருக்கு இலவச திருமணமும், கட்சி நிர்வாகிகள் 5 பேரின் இல்லத் திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளேன். என் தந்தை தனது 42-வது வயதிலும், எனது தாயார் தனது 47-வது வயதிலும், எனது அண்ணன் தனது 49-வது வயதிலும் மறைந்தார்கள். நான் இன்று 60 வயதைக் கடந்து 61-வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கிறேன். அதற்கு எனது தாயாரின் ஆசியும், எனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரின் அருளாசியும், அதிமுக தொண்டர்களாகிய நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும்தான் காரணம்.

இன்று நடப்பது என் 60-வது பிறந்தநாள் விழாவா, 65 ஜோடிகளின் திருமண விழாவா என்றால்...இரண்டும் தான். 60 மணப்பெண்களும் இது என் அம்மா வீட்டு சீதனம் என்று செல்லி மகிழ 60 விதமான பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட இலவச திருமணங்கள் அதிமுகவைத் தவிர வேறு யாராலும் நடத்த முடியாது. அதனால்தான் அதிமுக அரசியல் கட்சி என்ற நிலையைத் தாண்டி, ஒரு அன்புக் குடும்பம் என்ற உன்னத நிலையை அடைந்து இருக்கிறது.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

2 Comments:

  • அம்மா ஏன் கல்யாணமே பண்ணிக்கவே இல்லை? :(

    By at 2/25/2008 2:15 AM  

  • உலகமே வியக்கும்வண்ணம் வளர்ப்பு மகனுக்கு எனது ஆட்சியில் திருமணம் நடத்தி வைத்ததை
    இரத்தத்தின் இரத்தமாகிய நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.என்னவாயிற்று? எனது போயஸ் தோட்டத்திலேயே கஞ்சா வளர்த்து காவல் துறையிடம் மாட்டிக் கொண்டான்! உண்ட வீட்டுக்கே இரண்டகம்...என்ன செய்வது? இப்போது நான் நடத்திய இந்த 65 ஜோடிகளாவது
    எனக்குத் துரோகம் செய்யாமல் இருந்தால் சரி!

    By at 2/25/2008 3:49 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za