அம்மான்னா சும்மாவா?

Thursday, February 21, 2008

ஸ்ரீராம கோபாலன்ஜி சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம்

ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரியத்தையும், பெருமையையும் கட்டி காக்க நாள்தோறும் பாடுபட்டு வரும் பெரியவர் தாங்கள் என்பதை இந்த உலகமே அறியும். உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு ஹிந்துவின் கண்களிள் தூசி விழுந்தாலும் அஹிம்சா மூர்த்தியான தங்கள் கண்களில் ரத்தம் வழியும் என்பதை கண்கூடாக நான் பார்த்து இருக்கின்றேன்.

சமீபகாலமாக (2007 மற்றும் 2008ல்) மலேசிய நாட்டில் இருக்கும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக நீங்கள் நடத்திவரும் பெரும் போராட்டங்களை பல நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உங்களின் போராட்டங்களின் விளைவாக மலேசிய அரசாங்கம் கவிழலாம் என்று அங்கிருந்து ஒரு நண்பர் மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். மலேசிய எதிர் கட்சியாக விளங்கும் முகமதிய கட்சி ஒன்று "islamic state" என்ற வார்த்தைகளை தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இருந்து முதல் முறையாக நீக்கிவிட்டதாகவும் நண்பர் குறிப்பிட்டு உள்ளார். இவை யாவும் தங்களின் போராட்டத்தின் பயனாக மலர்ந்த மலர்ச்சி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

உலகம் எங்கும் நிறைந்து இருக்கும் ஹிந்துக்களுக்காக போராடி வரும் தாங்கள் மகாராஷ்டிரத்தில் உதை வாங்கி மாநிலத்தை விட்டு விரட்டபடும் ஹிந்துக்களுக்காக ஏன் தீவிரமாக போராடவில்லை என்ற ஒரு சிறு கேள்வி என் மனத்தில் உதித்தது. உடனே உங்களின் பார்வையில் வைத்தால் விரைவில் மும்பையில் வசிக்கும் ஹிந்துக்களின் துயர் துடைக்க ஒரு பெரும் போராட்டதை நீங்கள் வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க திம்மிகள்.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za