அம்மான்னா சும்மாவா?

Tuesday, March 04, 2008

எது உண்மை???

ஹிந்துஸ்தானத்தின் பொக்கீஷமான சிதம்பரம் கோவிலில் நிகழ்பவை எமக்கு பெரும் கவலை அளிக்கின்றது. எந்த செய்தி உண்மை, எது பொய் என்பது பெரும் கேள்வி குறியாகிவிட்டது. இரு பக்க கருத்துகளை சற்று நோக்குவோம்.

தேவாரம் பாட முடியுமா?

ஆம் என்கிறது ஸ்ரீமான் ஜடாயுவின் பதிவும், கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவும். இல்லை, ஒளிந்திருந்துதான் பாடினார்கள் என்கின்றது நாக.இளங்கோவனின் பதிவு.

இப்படி சுலபமாக தேவாரம் பாட முடியும் என்றால் ஆறுமுகம் ஏன் இப்படி பொய் பிரச்சாரம் செய்கின்றார். இப்படி நடக்கும் பொய் பித்தலாட்டத்தை முறியடிக்க ஒரு யோசனை. நமது அருமை தீட்ஷிதர்களே ஆறுமுகத்தை கோவிலின் உள்ளே அழைத்து சென்று தேவாரம் பாட வைத்து ஒன்றிரண்டு புகைபடங்கள் எடுத்து வெளியிடலாமே.

கோவிலின் உள்ளே நடந்தது என்ன?

ஒன்றுமே இல்லை. ஏளன சிரிப்போடு நுழைந்த கும்பலை கண்டு பொறுக்காத ஒரு பெரியவர் அவர்களை தடுக்க பார்த்தார் என்கிறார் ஸ்ரீமான் ஜடாயு.

ஆனால் எல்லா பத்திரிக்கைகளும் வேறு மாதிரி செய்தி வெளியிட்டு உள்ளனர். நாட்டின் ஒரே நடுநிலை பத்திரிக்கையான நமது தினமலர் "தள்ளுமுள்ளு" என்கிறது. வேறு சில போலீசாரை தீட்ஷிதர்கள் தாக்கினர் என்றன. ஜூனியர் விகடனோ இப்படி சொல்கின்றது.

ஆறுமுகசாமி தரப்பினர், பொன்னம்பல மேடையை நெருங்கும்போது மேடைக்குக் கீழே தீட்சிதர்கள் கும்பல் மறித்தது. அவர்கள் போலீஸாரை உள்ளே நுழையவிடாமல் தடுக்க முயற்சித்தனர். அதை மீறி ஆறுமுகசாமியை, எஸ்.பி-யும் ஏ.எஸ்.பி-யும் மேடையில் ஏற்ற முயன்றனர். அப்போது அவர்களின் பதவியையும் பாராது முரட்டுத்தனமாகக் கீழே தள்ளிவிட்டனர் தீட்சிதர்கள். அதைப்பார்த்து மஃப்டி போலீஸார் ஓடிவந்து வழி ஏற்படுத்த... தண்ணீரையும் எண்ணெயையும் வழியில் இருப்போர் மீது ஊற்றிக் கொண்டேயிருந்தனர் தீட்சிதர்கள்.

மோதல் உக்கிரமாக... எஸ்.பி-யும், ஏ.எஸ்.பி-யும் தாங்களே சட்டை, பனியனைக் கழட்டி விட்டு ஆறுமுகசாமியை உள்ளே அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது எஸ்.பி. மீண்டும் கீழே தள்ளி விடப்பட்டதால், கோபமான எஸ்.பி-யின் பாதுகாவலர் துப்பாக்கியை எடுத்து அவரைத் தள்ளிவிட்டவர்களை நோக்கிக் குறிவைத்தார். அவசரஅவசரமாக அதைத் தடுத்தார் எஸ்.பி.

ஏ.எஸ்.பி-யும் ரொம்பவே டென்ஷனாகி, தீட்சிதர்களை அப்புறப்படுத்தும்படி போலீஸாருக்குக் கட்டளையிட, சிறிது நேரத்தில் மேடையிலிருந்தவர்களைக் கீழே அள்ளிப் போட்டது போலீஸ்.

எனக்கு தலை சுற்றி விட்டது. உங்களுக்கு?

நடப்பவை எல்லாமே அந்த ஈசனின் திருவிளையாடல்தானோ.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za