வெற்றி வெற்றி
கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் எதிரிகளை புறமுதுகிட்டு ஓட ஓட விரட்டி தேசிய கட்சியான பா.ஜ.க பெரும் வெற்றி பெற்று உள்ளது. பா.ஜ.கவின் இந்த வெற்றி அவர்களின் ஆன்மீக மற்றும் தேச பற்றுகளின் விளைவால் கிட்டியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. விரைவில் ஸ்ரீமான் அத்வானி தலைமையில் பாரதம் முழுவதும் பா.ஜ.கவின் நல்லாட்சி மலரும். மைனாரிட்டி ஆட்சி நடைபெரும் இருண்ட தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கர்நாடக பா.ஜ.கவின் வெற்றியை காவிரி டெல்டா பகுதி ஹிந்துக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இனி 5 ஆண்டுகளுக்கு காவிரி நீர் பிரச்சனை இருக்காது என்று அப்பகுதி ஹிந்துக்கள் பெரும் மனநிறைவு கொண்டுள்ளனர். விவசாயம் நன்றாக நடந்தால் ஜிகாதி பூமியாக மாறி வரும் தஞ்சை பகுதி பழைய நிலைக்கு விரைவில் திரும்பும் என்று பெரியவர் ஸ்ரீமான் மலர்மன்னன் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளார். அதே போல சேலம், தருமபுரி ஹிந்துக்களும் ஒகனேக்கல் குடிநீர் விரைவில் கிட்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.
பாரதம் எங்கும் மகிழ்ச்சியை தோற்றுவித்த இந்த வெற்றியை 80 கோடி ஹிந்துக்களும் கொண்டாடி மகிழ்வோம்.
வாழ்க பாரதம். வாழ்க அம்மா.
2 Comments:
//அதே போல சேலம், தருமபுரி ஹிந்துக்களும் ஒகனேக்கல் குடிநீர் விரைவில் கிட்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.//
அப்படியே சேலம், தருமபுரி ஹிந்துக்கள் அந்த இரண்டு மாவட்டத்தையும் கர்நாடகம் இணைத்து கொள்ள வேண்டும் என்று தென்னகத்து மோடி எடியூரப்பாவிடம் விண்ணப்பிக்க வில்லையா?
By at 5/26/2008 10:14 PM
:)
By at 5/30/2008 7:20 PM
Post a Comment
<< Home