அம்மான்னா சும்மாவா?

Tuesday, May 13, 2008

சீன ஏஜண்டுகளுக்கு ஓர் எச்சரிக்கை

பாரதத்தின் பெருமையை, பாரம்பரியத்தை சந்தர்பம் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சீரழிக்க முயன்று வருபவர்களில் சீன ஏஜண்டுகளான கம்யூனிஸ்டுகள் முக்கியமானவர்கள். கிருத்துவ மிஷினரிகள், முகமதிய ஜிகாதிகள் மற்றும் சீன ஏஜண்டுகளான கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரையும் வேரோடு சாய்க்க எல்லோரும் திரிசூலம் ஏந்துவோம் என்று நம் ஹிந்து சாம்ராட் சிங்கால் ஏற்கனவே சூளுரைத்து உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

பாரதத்தில் ஹிந்து சமயத்தை பல்கி, பெருக வைக்கும் முயற்சியில் தீவிர ஹிந்து தொண்டர்களான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் தேச,சமய சேவையை ஐ.நா சபையே பல முறை பாராட்டி பத்திரங்கள் வழங்கி உள்ளது. அப்படிபட்ட கண்ணியமான தொண்டர்கள் பலரை கேரள மாநிலத்தில் வெட்டி வீழ்த்தி உள்ளனர் அங்கு காட்டாச்சி நடத்தி வரும் சீன ஏஜண்டுகள். அது மட்டுமா, திபெத் நாட்டில் ஹிந்துமத்தின் ஒரு அங்கமாக விளங்கும் புத்த மதத்தின் குருமார்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட்டு உள்ளனர் சீனர்கள். மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று பல கோடி ஹிந்துக்களால் நம்பபடும் புத்தரின் சீடர்கள் மீது நடந்த தாக்குதல் 80 கோடி ஹிந்துக்களையும் சினம் கொள்ள வைத்துவிட்டது.

நமக்கு ஒரு துன்பம் விளைந்தால் நம் தாய் அதை பார்த்துகொண்டு சும்மா இருப்பார்களா. ஹிந்துக்களின் மீது நடத்த பட்ட கொடும்தாக்குதலை கண்டு சினம் கொண்ட பூமாதேவியின் கோப பெருமூச்சுதான் சீனாவில் நேற்று முந்தினம் வெளிபட்டு உள்ளது. சீன ஏஜண்டுகள் தொடர்ந்து ஹிந்துக்களை தாக்கி வந்தால் ஒலிம்பிக் போட்டி நடைபெரும் போது சீனாவில் பெரும் பூகம்பம் ஏற்படும் என்று வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோசியர் ஒருவர் குறிப்பிட்டு உள்ளார்.

சீன ஏஜண்டுகளே, பூமாதேவியின் மனத்தை குளிர்விக்க கேரளா முழுவதும் உடனடியாக விளக்கேற்றி வழிபாடு நடத்துங்கள்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க சீன ஏஜண்டுகள்.

8 Comments:

 • unnai yellam seruppala adikkanum da...... kannan.....

  By at 5/13/2008 11:32 PM  

 • இலைக்காரரே தயவு செய்து வாழ்க அம்மா!! வீழ்க திம்மிகள்!!! என்ற வசனம் இல்லாமல் இது போல் பதிவு எழுதாதீர்கள். இது அன்பு வேண்டுகோள்.

  By at 5/14/2008 12:18 AM  

 • முத்து அவர்களே உங்கள் கோபம் புரிகிறது. நீங்கள் இதற்காக ஆத்திரப்பட்டு கேரள சீன ஏஜெண்டுகளை Lunar செருப்பால் அடிக்க சென்று விடாதீர்கள். நம் இந்து தர்மம் நமக்கு அதையா போதிக்கிறது? நம் அம்மா தங்கத் தாரகை புரட்சி தலைவலி நமக்கு கற்றுத் தந்தது போல் யாகம் செய்தும் விளக்கேற்றியுமே நாம் நம் எதிரிகளை ஒழிக்க வேண்டும். அம்மாவும் அப்படி செய்து தானே திம்மிகள் வாழும் இத்தமிழகத்தில் நிரந்தர முதல்வராக உள்ளார். எனவே கையில் உள்ள Lunar செருப்பை கீழே போட்டு விட்டு நம் சின்ன புரட்சி தலைவர் இலைக்காரர் சொன்னது போல் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் விளக்கு பிடியுங்கள் சே... மன்னிக்கவும் விளக்கேற்றுங்கள். அருகில் வைத்தீஸ்வரன் கோவில் இல்லை என்றால் சரத் குமாரின் வைத்தீஸ்வரன் படம் ஓடும் தியேட்டரில் விளக்கேற்றவும். அப்படி விளக்கேற்றும் போது திரை எரிந்தாலும் பரவாயில்லை. திரைப்படம் பார்க்க வந்தவர்களை அந்த கொடுமையிலிருந்து காப்பாற்றிய புண்ணியம் உங்களை சேரும்

  வாழ்க அம்மா. வீழ்க சீன ஏஜென்டுகள்..

  By at 5/14/2008 12:22 AM  

 • இலைக்காரரே முத்து உங்கள் நண்பரா? அம்மாவும் சின்னம்மாவும் ஒருமுறை போயஸ் வீட்டிற்குள் ஒரு ஆடிட்டரை செருப்பாலேயே பெண்டு கழட்டினார்களே. முத்துவும் அதுபோல் செருப்பை ஆயுதமாக பயன்படுத்துகிறாரே அதனால் தான் கேட்கிறேன்.

  By at 5/14/2008 2:01 AM  

 • நமது தருமத்துக்கு எதிராக கமல் ஹாசன் சதித்திட்டம் தீட்டி எடுத்திருக்கும் படம் பற்றியும் எழுத வேண்டும்.

  வாழ்க அம்மா. வீழ்க திம்மிகள்.

  By at 5/14/2008 5:53 AM  

 • //வைத்தீஸ்வரன் கோவிலில் விளக்கு பிடியுங்கள் //
  புறம்போக்கு. கோயிலில் நீங்கள் அதைத்தான் பண்ணுகிறீர்களா?

  By at 7/03/2008 4:39 AM  

 • என் comment வரலைனா நான் இது பற்றி ஒரு பதிவு எழுதுவேன்.

  By at 7/03/2008 7:54 AM  

 • //
  புறம்போக்கு. கோயிலில் நீங்கள் அதைத்தான் பண்ணுகிறீர்களா?
  //
  உள்ள நடக்குற கூத்திற்கு வேற என்ன பண்றதாம்.

  புறம்போக்கு கோயிலில் நீங்கள் அதைத்தான் பண்ணுகிறீர்களா?
  Howzzzattttttttt.........

  By at 7/25/2008 4:02 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za