அம்மான்னா சும்மாவா?

Thursday, October 30, 2008

FLASH NEWS : அம்மாவின் மீது கொலை முயற்சி

இலங்கை பிரச்சனையில் உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் செயல்பாட்டினால் கலக்கம் அடைந்த தீவிரவாதிகள் அம்மாவின் உயிருக்கு ஊறு விளைவிக்க காத்திருக்கின்றனர் என்ற செய்தி அனைவருக்கும் தெரியும். இன்று கூட ஒரு மிரட்டல் கடிதம்/பேக்ஸ் தாய்லாந்து/மலேசியா வழியாக போயஸ் தோட்டம் சென்று சேர்ந்துள்ளது.

அம்மாவின் பாதுகாப்பிற்கு நாட்டின் தலை சிறந்த கமாண்டோக்கள் அனுப்ப படவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய பட உள்ளது. மேலும் போயஸ் தோட்டம் முழுவதும் அதிநவீன விமான எதிர்ப்பு பீரங்கிகள் அமைக்க படவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இவ்வளவு பேராபத்து சூழ்ந்து இருந்த போதும் தமிழ் மக்களுக்கு தாயுள்ளத்தோடு சேவை புரிய அம்மா பீடு நடை போடுகின்றார். ஹிந்துஸ்தானத்தின் மூத்த தேசியவாதியும், மிக புகழ் பெற்ற ஆன்மீகவாதியும் ஆகிய தேவர் திருமகனாரின் குருபூஜையில் கலந்து கொள்ள அம்மா இன்று காலை புறப்பட்டு சென்றார்.

எப்போதும் பச்சை கம்பளம் விரிக்கபட்டு பல படிக்கட்டுகளை உடைய லேடர் பயன்படுத்தபடும். ஆனால் சதிகாரர்கள் முயற்சியால் மூன்று படிக்கட்டுகள் உடைய லேடரை அங்கே அமைத்து இருந்தனர். மேலும் படிக்கட்டுகளில் யார் ஏறினாலும் வழுக்கி விழும்படியாக சோப் கலவையும் ஊற்றபட்டு இருந்ததாக செய்திகள் வருகின்றன. அம்மா அவர்கள் அந்த லேடரில் ஏறிய போது தடுமாறி கீழே விழ இருந்தார்.

தெய்வாதீனமாக ஸ்ரீராமரின் அருளால் அம்மா இந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பித்துவிட்டார். குரு பூஜைக்கு செல்ல வேண்டாம் என்று மற்றவர்கள் தடுத்த போதிலும் தன் உயிரை பற்றி கவலைபடாமல் ஒரு வீர தமிழச்சியாக மீண்டும் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று விமானம் ஏறி மதுரைக்கு சென்றார்.

இந்த படுகொலை முயற்சிக்கு பின்னால் யார் இருப்பார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அம்மாவின் சுற்றுபிராயணங்களில் கூடும் கூட்டத்தினை கண்டு கலங்கிய மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கருணாநிதியும் அவருக்கு உதவும் மத்திய ரோம ஆட்சியும்தான் இதற்கு காரணம் என்று மக்கள் அனைவரும் பேசிகொள்கின்றனர்.

இந்த கொலை முயற்சிக்கு பொறுப்பு ஏற்று உடனடியாக முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுமாறு மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு 80 கோடி ஹிந்துக்களும் ஈ-மெயில் அனுப்புங்கள்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

(நேற்று எழுதிய பதிவு தமிழ்மணத்தில் இணைக்க முடியாததால் இன்று வெளியிட படுகின்றது.)

5 Comments:

 • //
  கடிதம்/பேக்ஸ் தாய்லாந்து/மலேசியா வழியாக போயஸ் தோட்டம் சென்று சேர்ந்துள்ளது.
  //

  கடிதமா?
  பேக்சா??

  தாய்லாந்தா??
  மலேசியாவா??

  ஏன்டா எல்லொருன் சேர்ந்து இப்படி பித்தலாட்டம் பன்னுரீங்க?

  By at 10/30/2008 10:46 PM  

 • ஜெயலலிதா+பிராமணர்கள் = பித்தலாட்டம்

  By at 10/30/2008 11:51 PM  

 • குரு பூஜைக்குப் போன அம்மாவின் மேல் மைனா. அரசின் நான்கு கைக்கூலிகள் குண்டு எறிந்து, அம்மாவுக்கு எதிராக அவை வெடிக்கமுடியாமல் கார் ஜன்னல்களை உடைத்ததைப் பற்றிச் சொல்லாத நீயெல்லாம் தங்கத் தாரகையின் ஆதரவாளரா, வெட்கம், வெட்கம்...

  By at 10/31/2008 12:27 AM  

 • கிழஞ்செழியன் அவர்களே,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  இந்த பதிவு நேற்று எழுதியது. அம்மாவின் மீது நடந்த கொலை வெறி தாக்குல் செய்தியை கேள்விபட்டதும் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். அதனால் என் உடல் நலன் பாதிக்கபட்டுவிட்டது. நலமானதும் 80 கோடி ஹிந்துக்களையும் திரட்டி ஒரு கிடு கிடு போராட்டம் நடத்துவோம்.

  By at 10/31/2008 1:12 AM  

 • அம்மாவின் மேல் நடத்த பட்ட தாக்குதலை அறிந்து சொல்லென துயரம் அடைந்தேன்.

  By at 10/31/2008 10:18 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za