மதிமூடனே பதவி விலகு
பாரதத்தின் மருத்துவ சிகிச்சை முறைகள் உலக புகழ் பெற்றவை. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்தவர்கள் நாம். இதை கண்டு பொறுக்க முடியாத கிறித்துவ மிஷினரிகள் மேற்கத்திய சிகிச்சை முறைதான் சிறந்தது என்று நம் கல்வி முறையையே அடியோடு மாற்றினார்கள்.
அதை தொடர்ந்து வந்த திராவிட நஞ்சுக்கள் தகுதி திறமை இல்லாத பலரையும் மருத்துவராக்க திட்டமிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் செம்மொழி அறிவானது மருத்துவதுறைக்கு ஒரு முக்கிய தகுதி. அந்த முக்கிய தகுதியை நீக்கினர். பிறகு இடஒதுக்கீடு என்ற நோயை ஒற்றுமையாக இருந்த ஹிந்துக்கள் இடையே புகுத்தி ஜாதி என்ற கிருமியை வளர்த்தனர்.
இதனால் உலக புகழ் பெற்று இருந்த நம் மருத்துவ துறை படுபாதாளத்தில் விழுந்தது. ஆனாலும் ஸ்ரீமான் வேணுகோபால் போன்ற நம்மவர் தொடர்ந்து இந்த அடக்குமுறையை எதிர்த்து போராடினர். அவர்களுக்கு உற்ற துணைவராக நம் உச்ச நீதிமன்ற நீதிமான்கள் தங்கள் கடமையை செவ்வனே ஆற்றி வந்தனர்.
இதை கண்டு எரிச்சல் அடைந்த வாடிகன் அரசு அன்டோனியோ மெய்னோவின் மூலம் ஸ்ரீமான் வேணுகோபாலுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்தது. இந்த விஷயத்தில் முன் நின்று காரியம் ஆற்றியவன் "மதிமூடன்" அன்புமணி (உபயம் ஆத்திக செம்மல் VSK அய்யா).
அகில உலக புகழை உடைய AIIMS ஸ்தாபனத்தை ஸ்ரீமான் வேணுகோபால் திறம்பட இயக்கி வந்தார். அவரை பதவியில் இருந்து அநியாயமாக விரட்டி அடித்தனர் திம்மிக்கள். ஸ்ரீமான் வேணுகோபால் பதவியில் இருந்து விரட்ட பட்டவுடன் AIIMS ஸ்தாபனம் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது.
முதலில் 49 குழந்தைகள் மரணம் அடைந்தனர் என்றார்கள். இப்போது அரிய வகை ரத்தம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. ஸ்ரீமான் வேணுகோபால் இயக்குநராக இருந்திருந்தால் இது போன்று நடக்குமா என்று யோசித்து பாருங்கள்.
இந்த கொடுமையான நிலைக்கு பொறுப்பேற்று உடனடியாக மதிமூடன் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் எச்சரிக்கை விடுக்கின்றேன். இவரை அமைச்சராக்க சிபாரிசு செய்த மைனாரிட்டி அரசின் முதல்வராகிய கருணாநிதியும் பதவி விலக வேண்டும்.
வாழ்க வேணுகோபால். வீழ்க மதிமூடன்.
8 Comments:
உள்ளேன் ஐயா,
போராடுனுமா ? எங்கே எப்போது ?
:)
அன்புமணி பதவி விலகும் வரை,
ஆரியபவன் வாசலில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
By at 8/19/2008 8:19 PM
வீழ்க மதிமூடன்! வீழ்க மைனாரிட்டி கொடுங்கோல் ஆட்சி புரியும் கொலைஞர்!
வாழ்க வேணுகோபால்! வாழ்க அம்மா! வாழ்க அத்வானிஜி! வாழ்க உச்ச நீதிமன்ற நீதிமான்கள்!
ஜெய் ஸ்ரீ ராம்!!
By at 8/19/2008 8:49 PM
தமிழ்மணத்தில் இதுவரை வந்த பதிவுகளிலேயே இதுதான் அடிமுட்டள்த்தனமானப் பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் அந்த ஸ்ரீமான் வேணுகோபால் நம் மருத்துவமுறையை பயன்படுத்தாமல் மிஷனரிகள் புகுத்திய மேற்க்கத்திய மருத்துவமுறையை தெரிந்து கொண்டார்?
By at 8/19/2008 8:51 PM
கோவி.கண்ணன் அவர்களே,
வருகைக்கு நன்றி.
சிங்கப்பூரில் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் என்பது உங்களுக்கு தெரியுமா?
By at 8/19/2008 9:26 PM
ஜெகதீசன் அவர்களே,
வருகைக்கும், தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
By at 8/19/2008 9:27 PM
robin அவர்களே,
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
By at 8/19/2008 9:29 PM
//கோவி.கண்ணன் அவர்களே,
வருகைக்கு நன்றி.
சிங்கப்பூரில் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் என்பது உங்களுக்கு தெரியுமா?
By இலைக்காரன் at 8/19/2008 9:26 PM //
சிங்கப்பூரில் ஆரிய பவன் இல்லை என்கிற தைரியம் கோவியாருக்கு! இருக்கா கோவியாரே? நான் இதுவரைப் பார்த்ததில்லை.
ஆரிய பவன் என்றால் ஆறிப்போன இட்லி தோசை கிடைக்குமாக்கும் என்று நான் சின்னக்குழந்தையாக இருக்கும் போது நினைத்திருந்தேன். அதற்குள் இவ்வளவு சூட்சுமம் இருக்கும் என்பது போகப் போகத் தான் தெரிந்தது.
ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் இரண்டும் கலக்கட்டுமே...!
நான் ரசித்த வரிகள்!!!
அன்புடன்,
ஜோதிபாரதி.
By at 8/19/2008 10:29 PM
இலைக்காரரே இந்த பதிவை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.
என்ன காரணம்? யார் செய்த தாமதம்?
By at 8/21/2008 2:51 AM
Post a Comment
<< Home