அம்மான்னா சும்மாவா?

Wednesday, October 29, 2008

இலங்கை பிரச்சனையும் பிராமணர்களும்

பிராமண சமுதாய மக்கள் நம் பாரத மாதாவின் மூத்த புதல்வர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உலகின் மிக சிறந்த அறிவாளிகள் ஆன யூத மக்களுக்கு சரிநிகர் சமானமாக விளங்குபவர்கள் அவர்கள். ஆனால் அந்த சமுதாயத்தினை மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டிவிட்டனர். அதனால் பலன் பெற்றது யார்?. நிச்சயமாக பிராமணர்கள்தான். அமெரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரை அவர்களின் ஆளுமை கொடி கட்டி பறக்கின்றது.

இலங்கையில் பல காலமாக இன மோதல்கள் நடைபெற்று வருகின்றது. இலங்கை பிரச்சனையை பற்றி பதிவெழுதும் பல பதிவர்கள் இதில் பிராமண சமுதாயத்தை இழுத்து விட்டு விடுகின்றனர். இந்த சமுதாயத்தின் மீது ஏன் இந்த காழ்ப்புணர்வு. இலங்கை பிரச்சனை சார்பில் பிராமண சமுதாயம் என்ன செய்தது என்று கேள்விகளும் எழுகின்றன.

இதற்கு பதில் கூறும் விதமாக கடந்த சில நாட்களிள் நடைபெற்ற நிகழ்வுகளை குறிப்பிடுகின்றேன்.

- ஹிந்துஸ்தானத்தின் ஒரே தேசிய கட்சியான பா.ஜ.கவின் மூத்த தலைவரான ஸ்ரீமான் இல.கணேசன் அவர்கள் மாநில மைனாரிட்டி ஆட்சியையும் மத்திய ரோம ஆட்சியையும் நேற்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் ஒரு பிடி பிடித்து இருக்கின்றார்.

- தினமணி நாளிதழும் மாநில மைனாரிட்டி ஆட்சியையும் மத்திய ரோம ஆட்சியையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு தலையங்கம் எழுதியுள்ளது.

- புலிகளின் கொ.ப.செவாகிய நெடுமாறனின் கட்டுரையை வெளியிட்டு இலங்கை பிரச்சனையில் தனக்கும் பங்குள்ளது என்று தினமணி நிரூபித்து உள்ளது.

- இலங்கை பிரச்சனையை தீர்க்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறங்குகின்றார் என்ற செய்தியை நம் தேசிய பத்திரிக்கையான தினமலர் வெளியிட்டு பல கோடி ரசிகர்களின் உள்ளத்தில் பால் வார்த்து இருக்கின்றது.

- இலங்கை தமிழர் பிரச்சனையில் கபட நாடகம் ஆடும் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் முகமூடிகளை கிழித்து எறிந்துள்ளது துக்ளக் இதழ்.

- உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் அறிக்கைகள் எல்லாம் அணுகுண்டுகள் போல மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியையும், மத்திய பொம்மையான சிங்கையும் தாக்கி வருகின்றன. அந்த அறிக்கையால் கவரப்பட்ட திராவிட நஞ்சு ஒன்று கூட இனி என் ஓட்டு அம்மாவிற்குதான் என்று ஒரு பதிவு எழுதியுள்ளார்.

- இவை எல்லாவற்றிக்கும் மேலாக இலங்கையின் இறையான்மைக்கு பங்கம் ஏற்படாமல் இந்த பிரச்சனையை தீர்க நம் ஹிந்துவின் ராம் அவர்கள் இரவு பகல் பாராமல் பெரும் பாடுபட்டு வருகின்றார். தினமும் இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொடர்புகொண்டு தீவிர ஆலோசனைகள் நடத்தி வருகின்றார்.

இவ்வளவு செய்தும் ஏன் பிராமணர்களை தொடர்ந்து கேள்வி கேட்கின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. இலங்கை எப்போதும் பற்றி எரியத்தான் செய்யும். ஏன் என்றால் அது ஊழ்வினை. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த படுபாதக செயலினால் ஏற்படும் பின்விளைவு இது.

சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழகாக விளக்கி உள்ளார். மேல் விபரம் வேண்டுவோர் குள்ள ரஜினி, நெட்ட ரஜினி, கருப்பு ரஜினி, சிவப்பு ரஜினி, சாக்லட் பிரவுன் ரஜினி, ஒல்லி ரஜினி, குண்டு ரஜினி, சின்ன ரஜினி, பெரிய ரஜினி என்று அறியப்படும் பதிவர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க பாரதம். வாழ்க ஸ்ரீலங்கா.

5 Comments:

 • //
  இலங்கை பிரச்சனையை தீர்க்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறங்குகின்றார் என்ற செய்தியை நம் தேசிய பத்திரிக்கையான தினமலர் வெளியிட்டு பல கோடி ரசிகர்களின் உள்ளத்தில் பால் வார்த்து இருக்கின்றது.
  //
  இலைக்காரரே சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் இலங்கை பிரச்சினையை விட இலங்கையில் குண்டு விழுகிறதா என்பதை விட சத்திய ராஜ் வாயிலிருந்து ஏதாவது விழுகிறதா, அதை வைத்து அவரைத் திட்டி பேசி, பதிவு போட்டு பொளப்பை ஓட்டலாம் என்று இருப்பதாக அல்லவா கேள்விபட்டேன்.

  By at 10/29/2008 11:29 PM  

 • //
  மேல் விபரம் வேண்டுவோர் குள்ள ரஜினி, நெட்ட ரஜினி, கருப்பு ரஜினி, சிவப்பு ரஜினி, சாக்லட் பிரவுன் ரஜினி, ஒல்லி ரஜினி, குண்டு ரஜினி, சின்ன ரஜினி, பெரிய ரஜினி என்று அறியப்படும் பதிவர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
  //
  இவர்கள் எல்லாம் அவ்வளவு விப(வ)ரமா???

  By at 10/29/2008 11:32 PM  

 • //
  அந்த அறிக்கையால் கவரப்பட்ட திராவிட நஞ்சு ஒன்று கூட இனி என் ஓட்டு அம்மாவிற்குதான் என்று ஒரு பதிவு எழுதியுள்ளார்.
  //

  அய்யய்யோ அவர்கள் இங்கும் வர ஆரம்பித்து விட்டார்களா?
  ஏற்கனவே ஸ்றீமான் எஸ்.வீ.ஷேகர், ஸ்றீமான் விசு போன்ற நம்மவர்கள் ஓரங்கட்டப்பட்டு திம்மிகளின் குடும்ப சேனலுக்கு சீரியலில் நடிக்க போய் விட்டர்கள். இப்போது இவர்களும் வந்தால் ஏனைய நம்மவா கதி???

  By at 10/30/2008 12:59 AM  

 • //பிராமண சமுதாய மக்கள் நம் பாரத மாதாவின் மூத்த புதல்வர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உலகின் மிக சிறந்த அறிவாளிகள் ஆன யூத மக்களுக்கு சரிநிகர் சமானமாக விளங்குபவர்கள் அவர்கள். ஆனால் அந்த சமுதாயத்தினை மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இருந்து அடித்து விரட்டிவிட்டனர். அதனால் பலன் பெற்றது யார்?. நிச்சயமாக பிராமணர்கள்தான். அமெரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரை அவர்களின் ஆளுமை கொடி கட்டி பறக்கின்றது.//

  America has to do a lot.Please read this

  http://newaryan.blogspot.com/2007/10/blog-post_22.html

  By at 10/30/2008 5:22 PM  

 • //இலங்கை எப்போதும் பற்றி எரியத்தான் செய்யும். ஏன் என்றால் அது ஊழ்வினை. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த படுபாதக செயலினால் ஏற்படும் பின்விளைவு இது.//

  அப்போ இப்போ மும்பாய் (பம்பாய்) எரிந்தது எதனால்??

  By at 12/16/2008 6:26 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za