அம்மான்னா சும்மாவா?

Saturday, August 30, 2008

ஆந்திராவின் வியாதி

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா ஆந்திராவில் புதிய அவதாரம் எடுத்து இருக்கும் சிரஞ்சீவியை பற்றி வியாதி என்று சரியாக வாக்கு அருளினார்.

சிரஞ்சீவி கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிடும் போதே அவரின் சாயம் வெளுத்துவிட்டது. பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது பின்னணியில் இருந்த உருவங்கள் அம்பேத்கர், தெரசா மற்றும் தாடி வைத்த ஒருவர். யார் அவர் என்று ஆராய்ந்த போது அவர் ஸ்ரீமான் பால்தாக்கரே அவதானித்து உள்ள மாநிலமான மகாராஷ்டிரத்தை சேர்ந்த பாபூலே என்று தெரிந்தது. அந்த பாபூலே பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்கும் கூட்டம் ஈ.வே.ராவின் கூட்டம்.

அருமை ஹிந்துக்களே அம்மாவின் தீர்க்கதரிசனத்தை இப்போது புரிந்து கொண்டிருப்பீரகள் என்று நம்புகின்றேன். நம் ஹிந்து தெய்வங்களின் படம் ஒன்று கூட அங்கே இல்லை. மேலும் தெரசாவின் பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்க போகின்றேன் என்று பேச்சு வேறு. தொண்டு செய்வதற்கு என்றே பிறந்த நம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கண்களில் படவில்லையா. ஹிந்து சமுதாயத்தை உயர்த்த பெரும் பாடுபடும் விசுவ ஹிந்து பரிஷத் இல்லையா. ஹிந்துக்களின் உயிரை காக்கும் பஜ்ரங்தள் இல்லையா. இதை எல்லாம் விட்டு விட்டு தெரசா தான் கண்களுக்கு தெரிகின்றார் என்றால் என்ன அர்த்தம்.

கட்சி ஆரம்பிக்கும் போது ஏதாவது சொல்லுவார் என்று பார்த்தால் நம் சமுதாயத்தின் பெரும் நோயான சமூக நீதியை பின்பற்ற போவதாக அறிவித்து உள்ளார். ஒற்றுமையாக அவரவருக்கு விதிக்கபட்டு இருந்த கடமையை செவ்வனே செய்து வந்த ஹிந்துக்களை பிரிக்க ஏற்படுத்த பட்ட ஒரு ஆயுதத்தை கையில் எடுக்கும் சிரஞ்சீவியை ஒன்று சேர்ந்து கண்டிப்போம்.

மேலும் உலகின் முக்கிய ஹிந்து தலமான திருமலையை தேர்ந்து எடுத்தது ஹிந்துக்கள் இடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெரசாவின் ஆசியோடு கட்சி தொடங்கும் இந்த வியாதி வாடிகன் உத்தரவின் படி திருமலையை ரோமலை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சிலர் சந்தேகம் கொள்கின்றனர்.

கட்சியின் பெயரை வேறு ஒருவர் பதிவு செய்துவிட்டாராம். அதை அவரிடம் இருந்து வாங்க அவருக்கு முக்கிய பதவி, சட்டசபைக்கு போட்டியிட டிக்கெட் என்று வாரியிரைத்து உள்ளனர். ஒரு பெயருக்கு இவ்வளவு லஞ்சம் கொடுக்கும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தினை விட மோசமான ஆட்சி வழங்குவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அம்மா அடையாளம் காட்டும் இப்படிபட்ட வியாதிகளை 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்.

வாழ்க அம்மா. வீழ்க வியாதி.

1 Comments:

  • என்ன இலைக்காரரே,
    சமீபகாலமாக வியாதிகாரர்கள் தொல்லை அதிகமாகிக் கொண்டே போகிறது.
    வாழ்க அம்மா. வீழ்க வியாதிகள்.

    By at 8/31/2008 9:35 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za