அம்மான்னா சும்மாவா?

Monday, December 08, 2008

அம்மான்னா அம்மாதான்

பாரதத்தின் தலை சிறந்த அறிஞர் பெருமக்களில் குறிப்பிட தகுந்தவர் அம்மா என்பது உள்ளங்கை நெல்லிகனி. அதனால்தான் அவரை உலகின் ஒரே தங்க தாரகை என்று நாங்கள் எல்லோரும் போற்றி வருகின்றோம்.

அம்மாவின் தீர்க்கதரிசனம் உலக பிரசித்தி பெற்றது. வரும் நாடாளமன்ற தேர்தலுக்காக இப்போது கூட்டணி அமைக்கும் செயல் ஒன்றே அவரின் திறமைக்கு எடுத்துகாட்டு. தேசியத்தையும், ஆன்மீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.கவின் இரும்பு மனிதர் அத்வானி சமீபத்தில் (2008ல்) சென்னைக்கு வந்து இருந்தார். அம்மாவின் தரிசனம் கிட்டாதா என்று பல முயற்சி செய்தார். அம்மாவின் ஆசி கிட்டினால் வருங்காலத்தில் மத்திய ஆட்சியை சுலபமாக கைப்பற்றி விடலாம் என்ற கனவும் அவருக்கு இருந்தது.

அம்மாவோ அவரை சந்திக்கவில்லை. பல கோடி ஹிந்துக்களுக்கு அது வியப்பாக இருந்தது. அம்மா பாரதத்தில் செல்வாக்கு மிக்க பா.ஜ.கவுடன் தானே கூட்டணி அமைப்பார் என்று நம்பி இருந்தோம். இப்படி நடந்து கொள்கின்றாரே என்று கேள்வி எழுப்பினர். பா.ஜ.கவிற்கு எத்தனை செல்வாக்கு இருக்கின்றது என்று பார்த்துவிட்டு அவர்களுடன் கூட்டணி பற்றி பேசலாம் என்று முடிவு செய்து விட்டார் அம்மா.

சுலபமாக வெற்றி பெற்று இருக்க வேண்டிய தில்லியையும், ராஜஸ்தானத்தையும் இழந்துவிட்டு நிற்கின்றது பா.ஜ.க. கொடநாட்டில் இருந்து கொண்டே பாரதத்தின் ஜாதகத்தினை சரியாக கணிக்கும் ஆற்றல் பெற்றவர் அம்மா. பா.ஜ.க சுலபமாக ஜெயித்துவிடாது என்று சரியாக கணக்கு போட்டுவிட்டதன் காரணமாகதான் அவர் அத்வானியை சந்திக்க வில்லை. இப்போது தெரிகின்றதா அம்மாவின் தீர்க்கதரிசனம்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

5 Comments:

  • வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்!!!!!

    By at 12/08/2008 3:29 AM  

  • அம்மான்னா சும்மாவா?! வாழ்க அம்மாவின் புகழ்!

    By at 12/08/2008 4:23 AM  

  • //
    சுலபமாக வெற்றி பெற்று இருக்க வேண்டிய தில்லியையும், ராஜஸ்தானத்தையும் இழந்துவிட்டு நிற்கின்றது.
    //
    இலைக்காரரே,
    இதெல்லாம் அத்வானி அம்மாவை மதிக்காமல் செயல்பட்டதால் வந்த தோல்விகள்!
    அம்மாவை மதித்து இம்மாநிலங்களில் அம்மாவுடன் கூட்டணி வைத்து, "அகில இந்திய" அதிமுக வுக்கு ராஜஸ்தானத்தில் 160 இடங்கள், டெல்லியில் 45 இடங்கள், மத்தியப் பிரதேசத்தில் 130 இடங்கள், சட்டீஸ்கரில் 50 இடங்கள் கொடுத்து, அம்மாவை இந்த மாநிலங்களில் பிரச்சாரம் செய்யப் பனிவுடன் அழைத்திருக்க வேண்டும்!
    அப்படிச் செய்திருந்தால் 4 மாநிலங்களிலும் அம்மாவின் ஆசியுடன் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும்!
    அத்வானி இதைச் செய்யாததே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்!

    By at 12/08/2008 5:49 PM  

  • இலைக்காரரே,
    நீங்கள் நானாக இருக்குமோ என்ற சந்தேகத்தை, மீண்டும் சில திம்மிகள் கிளப்பி வருகின்றனர்... நான் நீங்கள் இல்லை என்பதை தயவு செய்து தெளிவு படுத்தவும்!

    By at 12/08/2008 8:00 PM  

  • //
    இலைக்காரரே,
    இதெல்லாம் அத்வானி அம்மாவை மதிக்காமல் செயல்பட்டதால் வந்த தோல்விகள்!
    அம்மாவை மதித்து இம்மாநிலங்களில் அம்மாவுடன் கூட்டணி வைத்து, "அகில இந்திய" அதிமுக வுக்கு ராஜஸ்தானத்தில் 160 இடங்கள், டெல்லியில் 45 இடங்கள், மத்தியப் பிரதேசத்தில் 130 இடங்கள், சட்டீஸ்கரில் 50 இடங்கள் கொடுத்து, அம்மாவை இந்த மாநிலங்களில் பிரச்சாரம் செய்யப் பனிவுடன் அழைத்திருக்க வேண்டும்!
    அப்படிச் செய்திருந்தால் 4 மாநிலங்களிலும் அம்மாவின் ஆசியுடன் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும்!
    அத்வானி இதைச் செய்யாததே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்!
    //

    ஜெகதீசன்,
    பதிவில் நீங்கள் போட மறந்ததை பின்னூட்டத்தில் போட்டுள்ளமைக்கு நன்றி.
    கலக்கலா இருக்கு பதிவும் பின்னூட்டமும்.

    வாழ்க அம்மா வீழ்க திம்மிகள்
    //
    ஜெகதீசன் said...
    இலைக்காரரே,
    நீங்கள் நானாக இருக்குமோ என்ற சந்தேகத்தை, மீண்டும் சில திம்மிகள் கிளப்பி வருகின்றனர்... நான் நீங்கள் இல்லை என்பதை தயவு செய்து தெளிவு படுத்தவும்!
    //

    அட! லாகின் மாத்தி பின்னூட்டம் போடுறதுக்கு இப்படி ஒரு பில்ட் அப்பா??

    By at 12/08/2008 11:07 PM  

Post a Comment

<< Home

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za