அம்மான்னா சும்மாவா?

Sunday, November 30, 2008

பம்பாய் பயங்கரம்

பாரத மாதாவின் மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி நடை பெற்று இருக்கின்றது. நாட்டின் உள்ளே இருந்து தாக்குதல் நடத்தும் கிருத்துவ மிஷினரிகள், முகமதிய ஜிகாதிகள், திராவிட திம்மிக்கள் போதாது என்று கடல் வழியே வந்த கயவர் கூட்டம் ஒன்று படுகொலைகள் புரிந்து உள்ளன.

இந்த பயங்கர நிகழ்விற்கு பொறுப்பு ஏற்று தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியும், அவருக்கு துணை நிற்கும் மத்திய மொம்மை அரசின் மன்மோகன் சிங்கும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

இது போன்ற சோதனை மிக்க நேரத்தில் பாரத தாயை காப்பாற்றும் முழு தகுதி மகா சக்தியான நம் அம்மாவிற்கு மட்டுமே உண்டு என்பதை நினைவு படுத்துகிறேன். 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து பாரத பிரதமர் பொறுப்பை ஏற்குமாறு அம்மாவை வேண்டுவோம்.

இந்த தாக்குதல்களில் தங்கள் உயிரை நீத்த ஹிந்துக்களுக்கு ஆங்காங்கே மோட்ச தீபம் ஏற்றி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

16 Comments:

 • எங்கள் தலைவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்ரீமான் மோடி அவர்களுக்கு எதிரான இப்பதிவிற்கு என் கடுமையான எதிர்ப்புகளை இங்கு பதிவு செய்கிறேன்!!!

  "ஸ்ரீமான் மோடி பிரதமராகவேண்டும், இஸ்ரவேலின் சொற்படி நடக்க வேண்டும்" என்பதே இப்போது 80 கோடியே 43 ஆயிரத்து 432 இந்துக்களின் ஒரே ஆசை!!!

  By at 11/30/2008 10:40 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி. ஸ்ரீமான் மோடி பாரத பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்பதில் எனக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் பிரதமர் ஆவதை அமெரிக்கா விரும்பாது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  அமெரிக்க உதவி கிட்டாவிடில் இஸ்ரேலும் நம்மை மதிக்காது. எனவேதான் உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவை பாரத பிரதமர் பதவிக்கு முன்மொழிகின்றேன்.

  By at 11/30/2008 10:54 PM  

 • இலைக்காரன் அவர்களே,

  நான் ஜீடாக்கில் கேட்டுக் கொண்டதால், உங்களது கடும் வேலைகளுக்கிடையேயுன், உடனே என் பின்னூட்டத்தை வெளியிட்டதற்கும், பதில் சொன்னதற்கும் மிக்க நன்றி!!

  நீங்கள் சொல்வதும் சரிதான்!!

  இந்துக்கள் அனைவரும் சேர்ந்து அம்மாவை பொம்மை பிரதமராக ஆக்கிவிட்டு, ஸ்ரீமான் மோடியை நிழல் பிரதமராக ஆக்கி அவர் சொல்படி அம்மாவை ஆட்சி நடத்த வைத்துவிடலாம்!

  வாழ்க ஸ்ரீமான் மோடி!!!
  ஜெய் ஸ்ரீராம்!!

  By at 11/30/2008 10:58 PM  

 • ஜெகதீசன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  அம்மா பொம்மை பிரதமரா. சர்வ சக்தி சார் அம்மா. சிங்கைக்கு ஆட்டோ வராது என்பதால் எதை வேண்டுமானாலும் பின்னூட்டமாக போடுவதா.

  அது சரி. ஜீடாக் என்றால் என்ன?

  By at 11/30/2008 11:08 PM  

 • எங்கிட்டு இருந்து வந்திய, குண்டு வெடிச்சுட்டா பதிவு போட்டுடுறீரே ?

  By at 11/30/2008 11:14 PM  

 • கோவி.கண்ணன் அவர்களே,

  வருகைக்கு நன்றி.

  உங்களை மாதிரி ஒரு நாளைக்கு மூன்று,நான்கு பதிவுகள் இட என்னால் முடியாது. அம்மாவை முன்னிலை படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தால் பதிவிடுவேன். அவ்வளவுதான்.

  By at 11/30/2008 11:27 PM  

 • இலைக்காரரே நான் நினைத்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள்.

  அம்மா மட்டும் இப்போது பிரதமராக இருந்திருந்தால் இப்படி ஒரு சோக சம்பவம் நடந்திருக்காது. பாரதத் தாயை அம்மாவால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
  அம்மா தான் பாரதத் தாய். பாரதத் தாய் தான் அம்மா. அதை உணர்ந்து தான், அம்மா சில நாட்களுக்கு முன் தனக்கு பாதுகாப்பு பலப்படுத்த வேண்டுமென்று கேட்டிருந்தார். அதை உதாசீனப்ப்டுத்தியதால் தான் இப்படி நிகழ்ந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மைனாரிட்டி கருணாநிதி உடனடியாக பதவி விலக வேண்டும்.

  By at 12/01/2008 12:27 AM  

 • ஜெகதீசன் அவர்களின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
  அம்மா மட்டுமே பிரதமராகும் தகுதி கொண்டவர்.

  ஸ்ரீமான் மோடி என்னதான் உயர்ந்த மேன்மை தாங்கிய மனிதராக இருந்தாலும் அம்மாவை விட தகுதியானவர் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பம்பாய் தீவிரவாதிகள் குஜராத் மாநில மீனவர்களின் படகுகளையே திருடி உபயோகித்ததாக செய்திகள் வருகிறது. இதை ஸ்ரீமான் மோடியால் தடுக்க முடியவில்லையே. ஆனால் அம்மா ஆட்சியில் எப்போதாவது தீவிரவாதிகள் படகுகளை திருடியதாக உங்களால் நிரூபிக்க முடியுமா ஜெகதீசன் அவர்களே?
  நாட்டு நலனையே தன் மூச்சாக கொண்ட அம்மா அதற்கு பாதகமாக அந்த ஆண்டவனே வந்தாலும் விடமாட்டார் என்பதற்கு ஸ்ரீ காஞ்சி சங்கராச்சார்யார் சுவாமிகள் கைது ஒரு உதாரணம்.
  எனவே ஜெகதீசன் அவர்களின் இந்த கருத்தை கண்டித்து 80 கேடி இந்துக்களும் தந்தி அனுப்பும் போராட்டம் மேற்கொள்ளுவோம்

  By at 12/01/2008 12:58 AM  

 • //
  அது சரி. ஜீடாக் என்றால் என்ன?
  //

  "G Dog" என்பது சிங்கையில் அறிமுகமாகியிருக்கும் புதுவகை நாய் என்று நினைக்கிறேன்.
  இப்போதெல்லாம் தகவல் பரிமாற்றத்திற்கு புறாவுக்குப் பதிலாக இதை உபயோகப் படுத்துகிறார்கள் போலுள்ளது.

  By at 12/01/2008 1:01 AM  

 • //
  கோவி.கண்ணன் said...
  எங்கிட்டு இருந்து வந்திய, குண்டு வெடிச்சுட்டா பதிவு போட்டுடுறீரே ?
  //

  கோவி அவர்களே, நிலமையின் தீவிரத்தை உணர்ந்து தாமதியாமல் அம்மாவை பிரதமர் ஆக்கா விட்டால் குண்டு வெடிக்காமல் இருந்தால் தான் செய்தி(அல்லது பதிவு) என்ற நிலமை இந்தியாவில் ஏற்பட்டுவிடும்.

  By at 12/01/2008 1:09 AM  

 • Great அவர்களே,

  வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

  By at 12/01/2008 2:16 AM  

 • /////
  //
  அது சரி. ஜீடாக் என்றால் என்ன?
  //

  "G Dog" என்பது சிங்கையில் அறிமுகமாகியிருக்கும் புதுவகை நாய் என்று நினைக்கிறேன்.
  இப்போதெல்லாம் தகவல் பரிமாற்றத்திற்கு புறாவுக்குப் பதிலாக இதை உபயோகப் படுத்துகிறார்கள் போலுள்ளது.

  By Blogger Great at 12/01/2008 1:01 AM
  ////////


  super!!!
  :P

  By at 12/01/2008 5:25 AM  

 • ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வாங்கிய அபினவிர்க்கு (abhinav bindra) 6 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது அரசாங்கம்..
  இத்தனைக்கும் அவர் ஏற்கனவே பணக்காரர்..

  ஆனால் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான எங்கள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 5 லட்சம்.. பாதுகாப்புக்கு படை வீரர்களின் மதிப்பு அவ்வளவு தானா?

  பாதுகாப்பு படை வீரரின் உயிரின் மதிப்பு 5 இலட்சம்.. ஆனால் ஒலிம்பிக் தங்கத்தின் மதிப்பு 6 கோடியா????????....

  சிந்திப்போம்..

  By at 12/01/2008 6:26 AM  

 • this blog is disgusting. using the identity of a popular leader and contumely hurting the leader of AIADMK. i am writing to the chief of the AIADMK and let the persons behind this blog should be placed behind the bars.

  By at 12/01/2008 7:13 AM  

 • இலைக்காரன் சொல்வது மிகச்சரி.

  இந்நேரம் அம்மா பிரதமராக ஒரு வேளை இருந்திருந்தால் நாலரை ஆண்டுகளுக்கு ஒரே உள்துறை மந்திரி இருந்திருப்பாரா? வருசத்துக்கு ஒண்ணுன்னு மந்திரிய மாத்தி சும்மா வெளயாண்டிருக்க மாட்டார்...

  இன்னிக்கு சிவராஜ் பாட்டிலை கை காட்டுறது மாதிரி எவனையாச்சும் கை காட்ட முடியுமா?

  பாகிஸ்தான் அதிபர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பியாவது தீவிரவாதிங்களை களையெடுத்திருக்க மாட்டார்?

  அம்மா இல்லையேல் இந்தியா
  சும்மா...

  ஜெய் பஜ்ரங்பலி....!
  ஜெய் ஜெயலலிதா..!

  By at 12/01/2008 7:37 AM  

 • அம்மா வாழ்க!! சட்ட வல்லுனர் நாகேந்திரன் வாழ்க!!!

  By at 12/01/2008 10:32 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za