அம்மான்னா சும்மாவா?

Monday, January 12, 2009

டிபாசிட்டை பறிகொடுத்த குடிகாரன்

மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் நடந்த இடை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. நம்மவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் பணபலத்தால் திமுக வென்று விட்டது. முடிவினை கண்டு தொய்வு கொள்ளாமல் கடுமையான களப்பணி ஆற்றுவோம். அம்மாவின் பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மலர செய்வோம் என்று ஹிந்துக்கள் அனைவரும் வீர சபதம் எடுப்போம்.

கேப்டன் என்றும், கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் பிதற்றி திரிந்த குடிகாரன் கட்சிக்கு டிபாசிட் பறிபோய்விட்டது. மரியாதைக்குரிய மூத்த பதிவர்கள் சிலர் கூட தேசிய முற்போக்கு திருடர்கள் கழகம் தான் வெற்றி பெரும் என்று மஞ்சள் வர்ணத்தில் கோடிட்டு காட்டினர். அந்தோ பரிதாபம். குடிகாரன் இந்த தேர்தல் தனக்கு ஒரு திருப்புமுனை என்று சவடால் விட்டு திரிந்தான். மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் வழியில் தன் மனைவி தாக்கபட்டதாக ஒரு கபட நாடகம் நடத்தினான்.

இன்னொரு வருங்கால முதல்வரின் கட்சிக்கோ 1000 ஓட்டுகள் கூட கிடைக்கவில்லை. அரிதாரம் பூசிவிட்டால் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கு பின்னே இருந்தவர் உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா. அம்மாவின் திருமங்கல வெற்றியை 80 கோடி ஹிந்துக்களும் கொண்டாடி மகிழ்வோம்.

அம்மாவின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட கோபால்சுவாமி, நரேஷ் குப்தா, ராமதாஸ் மற்றும் பல கோடி ஹிந்துக்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள்.

வாழ்க அம்மா. வீழ்க குடிகாரன்.

11 Comments:

 • திருமங்கலம் தொகுதியில் மொத்தம் 40,156 வாக்குகள் மட்டுமே நல்ல வாக்குகள் என்பதும் மற்றவை அனைத்துமே கள்ள ஓட்டுகள் என்பதும் உலகறிந்த உண்மை. அந்த நல்ல வாக்குகள் அனைத்தும் அம்மாவிற்கே கிடைத்துள்ளது. அப்படியிருக்க திமுக வென்றதாக அறிவித்திருப்பது பெரும் மோசடியில்லையா என்று 80 கோடி இந்துக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  இருந்தாலும் குடிகாரன் தோற்றதில் மகிழ்ச்சியே.


  வாழ்க அம்மா. வீழ்க குடிகாரன்.

  By at 1/12/2009 4:02 AM  

 • அய்யோ அம்மா!

  By at 1/12/2009 4:10 AM  

 • :))))

  By at 1/12/2009 5:44 AM  

 • :))

  By at 1/12/2009 7:49 AM  

 • //
  அய்யோ அம்மா!

  By வால்பையன்
  //

  வாழ்க ரத்தத்தின் ரத்தம் வால்பையன்

  By at 1/12/2009 8:37 AM  

 • அம்மா அன்றே சொல்லி விட்டார், வாக்கு இயந்திரத்தில் விழும் எல்லா வாக்குகளுமே உதய சூரியன் என்று விழும் என்று.

  By at 1/12/2009 8:44 AM  

 • //
  எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கு பின்னே இருந்தவர் உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா.
  //

  Super

  By at 1/12/2009 9:16 PM  

 • இலைக்காரரே,
  தி.மு.கவினர் கள்ள ஓட்டு மூலம் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை திம்மி அன்பழகன் அவர்களே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்....

  திருமங்கலத்தில் திமுகவின் வெற்றி குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளரும் நிதியமைச்சருமான அன்பழகன் கூறுகையில்,


  குறிப்பாக சொல்லப் போனால், இந்த தேர்தலில் அழகிரியும், ஸ்டாலினும் ஒரே வேனில் ஒன்றாகச் சேர்ந்து பிரசாரம் செய்த அந்தக் காட்சிக்காகவே ஒவ்வொருவரும் 2 ஓட்டுப் போட்டிருப்பார்கள். எனவே, இந்த காட்சிக்கு கிடைத்த வெற்றியைப் பாராட்டுகிறேன்.


  எனவே இதையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு திமுக வெற்றி செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்கவேண்டும்...

  By at 1/13/2009 12:48 AM  

 • ஆரின் வெற்றிகளுக்கு பின்னே இருந்தவர் உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா.
  appatiyaa?puthusa iruke?

  By at 1/13/2009 1:28 AM  

 • கோபால்சுவாமி, நரேஷ் குப்தா, ராமதாஸ்

  - This is politics :-)

  By at 1/13/2009 2:50 AM  

 • உண்மையில் அம்மா இந்த அளவிற்கு தோற்றதிற்கு காரணம் நீங்கள் சொல்லும் அந்த "குடிகாரன்"தான். இனிமேலாவது அம்மா விழித்து அந்த "குடிகாரனை" கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் பிழைத்தார் இல்லையென்றால் சங்குதான்.

  By at 6/02/2009 9:05 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za