அம்மான்னா சும்மாவா?

Monday, April 18, 2011

கொட நாடு

உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா அவர்கள் கொட நாட்டிற்கு சென்று விட்டார் என்பதை ஒரு பெரிய விஷயமாக சில திம்மிக்கள் பேசி திரிகின்றனர். ஈழத்தாயான நம் அம்மா நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தனிக்கட்சி ஆட்சி அமைப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

கொட நாட்டிற்கு செல்வதை பெரிதாக பேசும் திம்மிக்களே, கருணாநிதி ஓய்வெடுக்க மகாபலிபுரம் செல்வதில்லையா? ஜார்ஜ் புஷ் ஓய்வெடுக்க தன் கடற்கரை மாளிகைக்கு செல்வதில்லையா?

முதலில் அம்மா ஏன் கொட நாட்டிற்கு சென்றார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆணி பிடுங்கும் மக்களுக்கு "off-site strategy building session" என்பதை பற்றி நன்கு தெரியும். அதை போலதான் தமிழக மக்களுக்கு எப்படி தாயுள்ளத்தோடு பணி செய்யலாம் என்பதை பற்றி சிந்திப்பதற்காகவே அவர் கொட நாடு சென்றுள்ளார்.

ஈழத்தாயான நம் அம்மா அவர்கள் முதல்வர் ஆவது உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் ஐநா சபை கொடுங்கோலன் ராஜபக்சே மீது குற்றபத்திரிக்கை தயார் செய்து விட்டது. அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற‌தும் ராஜபக்சே கைது செய்யப்படுவான். அதன் தொடர்சியாக மிக விரைவில் ஈழம் மலரும்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

3 Comments:

 • :)

  By at 4/18/2011 9:11 PM  

 • கொடநாடு அம்மாவின் கொடை நாடு.

  By at 4/18/2011 9:44 PM  

 • லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராமாயண காலத்தில் ஶ்ரீலங்கா போருக்குச் சென்றபோது பகவான் ஶ்ரீராமர் ஓய்வெடுத்துச் சென்ற புனிதஸ்தலம் கொடநாடு எஸ்ட்டேட்.

  பகவான் ஶ்ரீராமர் அருள்பெற்ற கொடநாட்டிலிருந்து நிரந்தர முதல்வர் அம்மா நல்லாட்சி புரிந்து அருள்பாலிப்பார்!

  By at 4/20/2011 8:29 PM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za