அம்மான்னா சும்மாவா?

Monday, September 05, 2011

சுப்ரீம் கோர்ட் நீதிப‌திக‌ள் ஒழிக‌

உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையும், ஈழ‌த்தாயும், த‌மிழ‌க‌த்தின் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ருமாகிய‌ ந‌ம் அம்மாவின் உயிரை ப‌றிப்ப‌த‌ற்க்கு விடுத‌லை புலிக‌ள், அல்க‌யிதா, உல்பா, ல‌க்ஷ‌ர் தொயிபா போன்ற‌ தீவிர‌வாத‌ அமைப்புக‌ள் முய‌ன்று வ‌ருவ‌து உள்ள‌ங்கை நெல்லிக்கனி. அம்மாவின் உயிருக்கு மேற்க‌ண்ட‌ அமைப்புக‌ளினால் ஆப‌த்து இருப்ப‌தாக‌ அம்மாவை ச‌மீப‌த்தில் ச‌ந்தித்த‌ ஹிலாரியும் குறிப்பிட்டு இருந்த‌தை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ வேண்டும்.


அம்மாவின் உயிருக்கு ஆப‌த்து ஏற்ப‌டும் என்ப‌தாலேயே அவ‌ர் பெங்க‌ளூர் செல்ல‌ ம‌றுத்து வ‌ருகின்றார் என்ப‌து கோடானுகோடி ஹிந்த்துக்க‌ளுக்கும், உல‌க‌ம் எங்கும் வாழ்ந்து வ‌ரும் ப‌ல‌ கோடி புல‌ம் பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ருக்கும் தெரியும்.


அப்படி இருக்க‌ சுப்ரீம் கோர்ட் அம்மாவை பெங்க‌ளூரு நீதிம‌ன்ற‌த்தில் ஆஜ‌ர் ஆக‌ சொல்லி உள்ள‌து. இது என்ன‌ அநியாய‌ம். அக்கிர‌ம‌ம். இந்த‌ செய‌லை 80 கோடி ஹிந்துக்க‌ளின் சார்பில் வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கின்றேன். இந்த‌ கொடுஞ்செய‌லை எதிர்த்து நாம் அனைவ‌ரும் ராம்லீலா மைதான‌த்தில் அமைதியான‌ முறையில் உண்ணாவிர‌த‌ம் இருப்போம். ராம்லீலா மைதான‌த்தை குத்த‌கைக்கு எடுத்து இருக்கும் அன்னா ஹ‌சாரேவிட‌ம் இதை ப‌ற்றி பேச‌ தூத‌ர்க‌ள் விரைந்து உள்ள‌ன‌ர்.


வாழ்க‌ அம்மா. வீழ்க‌ திம்மிக‌ள்.


3 Comments:

  • அம்மான்னா..அம்மாதான் சூப்பர் முதல்வர்...வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
    டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

    By at 9/05/2011 4:16 AM  

  • அம்மாவின் நிலைமை புரியாத "சுப்ரீம் கோர்ட் நீதிப‌திக‌ள் ஒழிக‌"

    By at 9/12/2011 9:31 PM  

  • தயவு செய்து எனக்கு ஒரு விழயத்தை தெளிவு படுத்தவும்! நீங்கள் ஜெயலலிதா ஆதரவாளரா இல்லை மிக கடுமையாக எதிர்ப்பவரா?
    இந்த அளவுக்கு அந்த அம்மையார வச்சு காமெடி பண்றீங்களே!......இன்னும் உங்ககிட்ட இருந்து நல்லா எதிர்பார்க்கிறேன்!

    By at 1/21/2012 5:26 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za