அம்மான்னா சும்மாவா?

Tuesday, May 31, 2011

அம்மா வாழ்க‌

உலகின் ஒரே தங்கதாரகையும், ஈழத்தாயும், தமிழகத்தின் நிரந்தர முதல்வரும் ஆகிய நம் அம்மா அவர்களின் ஆற்றல் திறன் உலகம் அறிந்தது. நேற்று நடந்த ஒரு நிகழ்வை பற்றி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

அம்மா அவர்கள் கோட்டையில் இருந்து தன் வீட்டிற்கு சுமார் 1:40 மணிக்கு கிளம்பியுள்ளார். வழியில் நின்று கொண்டு இருந்த பல ஆயிரம் மக்களிடையே இருந்த முன்னால் MLAவை அழைத்து அவரின் குறையை கேட்டு அறிந்தார். இது என்ன ஒரு பெரிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் இது தாயுள்ளத்தோடு அம்மா அவர்கள் ஆற்றிய ஒரு பெரும் பணி.

மைனாரிட்டி ஆட்சியில் சீரழிந்த தமிழகத்தினை மீண்டும் நிலைநிறுத்த அம்மா அவர்கள் ஊண் உறக்கம் இன்றி 24 மணி நேரமும் அரும்பாடுபட்டு வருகின்றார். மதியம் 1:40 மணிக்குதான் வீட்டிற்கு செல்ல ஆரம்பிக்கின்றார். அதற்கு மேல்தான் அவரின் மதிய உணவு உட்கொள்ளும் நேரம். தாயே நீங்கள் இப்படி கடுமையாக உழைத்து உங்கள் உடம்பை கெடுத்துகொள்ள வேண்டாம் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பிலும், புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்களின் சார்பிலும் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.

வழியில் நிறைந்து இருக்கும் பல ஆயிரம் மக்கள் இடையே நிற்கும் ஒருவரை உடனே அடையாளம் காணும் பெரும் ஆற்றல் அம்மாவிடம் உள்ளது. மேலும் அம்மாவை பற்றி குறை கூறுவோர் அம்மாவை உடனே பார்க்க முடியாது, மிக கஷ்டம் என்று புருடா விடுவர். அதை எல்லாம் இந்த செயல் மூலம் தவிடு பொடி ஆக்கிவிட்டார் நம் அம்மா. மைனாரிட்டி ஆட்சி புரிந்த திம்மி எப்போதாவது இந்த மாதிரி நடு வழியில் வண்டியை நிறுத்தி மக்கள் குறை கேட்டு உள்ளாரா?

தாயே நீங்கள் பொற்கால ஆட்சி நடத்தும் தமிழகத்தில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம் என்பதே எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

1 Comments:

  • //தாயே நீங்கள் பொற்கால ஆட்சி நடத்தும் தமிழகத்தில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம் என்பதே எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம்.//

    இலை, இது இந்த ஜென்ம புண்ணியமும் கூட.

    By at 6/01/2011 7:33 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za