அம்மான்னா சும்மாவா?

Thursday, May 26, 2011

அன்னா ஹசாரே ஒழிக

பாரதத்தின் புதிய விடிவெள்ளி என்று கருதப்பட்ட அன்னா ஹசாரேவின் சுயம் வெளிபட்டுவிட்டது. உண்ணாவிரத பந்தலில் பாரத மாதாவின் படத்தை வைத்திருந்ததால் அவரை 80 கோடி ஹிந்துக்களும் ஆதரித்தனர். உலகம் எங்கும் பரவி இருக்கும் பாரத மக்கள் blog, facebook, twitter மூலம் தங்கள் தேசபக்தியினை வெளிபடுத்தினர். அவர்களின் ஆர்வத்தால் சில காலம் blog செயல்பட முடியாமல் போனது.

ரோம ராஜ்ஜியத்தினை அகற்றி ராம ராஜ்ஜியத்தினை நிறுவ அயராது பாடுபட்டு வரும் வீர சிவாஜியாகிய நம் மோடியை உலகின் ஆக சிறந்த (இரண்டாம்) முதல்வர் என்று பாராட்டினார் அன்னா ஹசாரே. அவரை பார்த்து மற்றவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேட்டி அளித்தார். அதை கண்டு தூய உள்ளம் கொண்ட 80 கோடி ஹிந்துக்களும் மனம் மகிழ்ந்தனர்.

ஆனால் இப்போது அதே அன்னா ஹசாரே குஜராத்தில் சாராயம் ஆறாக ஓடுகின்றது என்று பேட்டி கொடுக்கின்றார். குஜராத்தில் ஊழல் என்று கூப்பாடு போடுகின்றார். ஒரு குழுவில் இடம் கொடுத்ததற்காக இப்படியா ரோம ராணியின் காலில் விழுவது? வெட்கம், மகா வெட்கம். அன்னா நீங்கள் மனம் மாறியதற்கு என்ன காரணம்?

வாழ்க மோடி. வீழ்க அன்னா.

1 Comments:

  • அன்னா ஹசாரே ஒலிக. மோடி வால்க

    By at 5/27/2011 6:58 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za