அம்மான்னா சும்மாவா?

Wednesday, November 23, 2011

சும்மா அதிருதுதில்ல‌

உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையும், ஈழ‌த்தாயும், த‌மிழ‌க‌த்தின் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ரும் ஆகிய‌ ந‌ம் அம்மாவின் ஆற்ற‌ல் ஒப்பு உய‌ர்வு அற்ற‌து. அமெரிக்க‌ வெளி உற‌வுத்துறை அமைச்ச‌ர் ஹிலாரியே அம்மாவின் ஆற்ற‌லை க‌ண்டு விய‌ந்தார் என்ப‌து வ‌ர‌லாறு.

அர‌சிய‌லில் ப‌ழ‌ம் தின்று கொட்டை போட்ட‌வ‌ர்க‌ள் எல்லாம் ஒரு கேள்விக்கே ப‌தில் தெரியாம‌ல் விழி பிதுங்கி நிற்கும் போது அம்மா அவ‌ர்க‌ள் 1339 கேள்விக‌ளுக்கு ப‌தில் அளித்து பெரும் சாத‌னை ப‌டைத்து உள்ளார்.

உல‌க சாத‌னைக‌ளை ப‌திந்து வ‌ரும் கின்ன‌ஸ் நிறுவ‌ன‌ம் இதை ஒரு உல‌க‌ சாத‌னையாக‌ ப‌திய‌ விருப்ப‌ம் தெரிவித்து அம்மாவிட‌ம் அனும‌தி கேட்டு இருப்ப‌தாக‌ போய‌ஸ் செய்திக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.

அம்மான்னா சும்மாவா. வாழ்க‌ அம்மா.

1 Comments:

  • அம்மா பட்ட வேதனையை கேலி பேசுகிறீர்கள்?

    கனிமொழி இது போல சாதனை செய்ய வில்லையா?

    By at 11/29/2011 12:57 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za