அம்மான்னா சும்மாவா?

Wednesday, December 07, 2011

மைனாரிட்டி ஆட்சியின் அல‌ங்கோல‌ம்

த‌மிழக‌த்தில் சென்ற‌ ஏப்ர‌ல் மாத‌ம் வ‌ரை மைனாரிட்டி ஆட்சி ந‌டைபெற்ற‌து உங்க‌ள் அனைவ‌ருக்கும் தெரியும். அந்த‌ ஆட்சியில் ம‌க்க‌ள் தாங்க‌ முடியாத‌ வேத‌னைக‌ளை அனுப‌வித்து வ‌ந்த‌ன‌ர். உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையான‌ ந‌ம் அம்மா அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளின் துய‌ர் நிலையை க‌ண்டு கொதித்து எழுந்து ந‌ம் தாய்நாட்டை தீய‌ச‌க்திக‌ளிட‌ம் இருந்து மீட்டார்.

மைனாரிட்டி ஆட்சியின் போது நெல்லையில் ஒரு மாண‌வியை ஒருவ‌ன் தொட‌ர்ந்து கேலி செய்து வ‌ந்துள்ளான். அவ‌ன் மீது போலீஸ் எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌வில்லை. தைரிய‌ம் அடைந்த‌ அந்த‌ க‌ய‌வ‌ன் இப்போது அந்த‌ மாண‌வியின் மீது கார் கொண்டு மோதி அவ‌ளை கொலை செய்துவிட்டான். இது அம்மாவின் பொற்கால‌ ஆட்சி என்ப‌தை அந்த‌ முட்டாள் அறிய‌வில்லை.

இதே மைனாரிட்டி ஆட்சியாக‌ இருந்தால் அவ‌ன் சுத‌ந்திர‌மாக‌ வெளியில் சுற்றி வ‌ந்திருப்பான். ஆனால் அம்மாவின் ஆட்சியில் அப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்குமா? போலீஸ் அவ‌ன் மீது கொலை வ‌ழ‌க்கு ப‌திவு செய்து சிறையில் த‌ள்ளிவிட்ட‌ன‌ர்.

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ தீய‌ச‌க்திக‌ள்.

1 Comments:

  • KKKK

    By at 4/21/2014 2:01 AM  

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za