அம்மான்னா சும்மாவா?

Saturday, August 30, 2008

ஆந்திராவின் வியாதி

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா ஆந்திராவில் புதிய அவதாரம் எடுத்து இருக்கும் சிரஞ்சீவியை பற்றி வியாதி என்று சரியாக வாக்கு அருளினார்.

சிரஞ்சீவி கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிடும் போதே அவரின் சாயம் வெளுத்துவிட்டது. பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது பின்னணியில் இருந்த உருவங்கள் அம்பேத்கர், தெரசா மற்றும் தாடி வைத்த ஒருவர். யார் அவர் என்று ஆராய்ந்த போது அவர் ஸ்ரீமான் பால்தாக்கரே அவதானித்து உள்ள மாநிலமான மகாராஷ்டிரத்தை சேர்ந்த பாபூலே என்று தெரிந்தது. அந்த பாபூலே பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்கும் கூட்டம் ஈ.வே.ராவின் கூட்டம்.

அருமை ஹிந்துக்களே அம்மாவின் தீர்க்கதரிசனத்தை இப்போது புரிந்து கொண்டிருப்பீரகள் என்று நம்புகின்றேன். நம் ஹிந்து தெய்வங்களின் படம் ஒன்று கூட அங்கே இல்லை. மேலும் தெரசாவின் பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்க போகின்றேன் என்று பேச்சு வேறு. தொண்டு செய்வதற்கு என்றே பிறந்த நம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கண்களில் படவில்லையா. ஹிந்து சமுதாயத்தை உயர்த்த பெரும் பாடுபடும் விசுவ ஹிந்து பரிஷத் இல்லையா. ஹிந்துக்களின் உயிரை காக்கும் பஜ்ரங்தள் இல்லையா. இதை எல்லாம் விட்டு விட்டு தெரசா தான் கண்களுக்கு தெரிகின்றார் என்றால் என்ன அர்த்தம்.

கட்சி ஆரம்பிக்கும் போது ஏதாவது சொல்லுவார் என்று பார்த்தால் நம் சமுதாயத்தின் பெரும் நோயான சமூக நீதியை பின்பற்ற போவதாக அறிவித்து உள்ளார். ஒற்றுமையாக அவரவருக்கு விதிக்கபட்டு இருந்த கடமையை செவ்வனே செய்து வந்த ஹிந்துக்களை பிரிக்க ஏற்படுத்த பட்ட ஒரு ஆயுதத்தை கையில் எடுக்கும் சிரஞ்சீவியை ஒன்று சேர்ந்து கண்டிப்போம்.

மேலும் உலகின் முக்கிய ஹிந்து தலமான திருமலையை தேர்ந்து எடுத்தது ஹிந்துக்கள் இடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெரசாவின் ஆசியோடு கட்சி தொடங்கும் இந்த வியாதி வாடிகன் உத்தரவின் படி திருமலையை ரோமலை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சிலர் சந்தேகம் கொள்கின்றனர்.

கட்சியின் பெயரை வேறு ஒருவர் பதிவு செய்துவிட்டாராம். அதை அவரிடம் இருந்து வாங்க அவருக்கு முக்கிய பதவி, சட்டசபைக்கு போட்டியிட டிக்கெட் என்று வாரியிரைத்து உள்ளனர். ஒரு பெயருக்கு இவ்வளவு லஞ்சம் கொடுக்கும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தினை விட மோசமான ஆட்சி வழங்குவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அம்மா அடையாளம் காட்டும் இப்படிபட்ட வியாதிகளை 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்.

வாழ்க அம்மா. வீழ்க வியாதி.

Tuesday, August 19, 2008

மதிமூடனே பதவி விலகு

பாரதத்தின் மருத்துவ சிகிச்சை முறைகள் உலக புகழ் பெற்றவை. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்தவர்கள் நாம். இதை கண்டு பொறுக்க முடியாத கிறித்துவ மிஷினரிகள் மேற்கத்திய சிகிச்சை முறைதான் சிறந்தது என்று நம் கல்வி முறையையே அடியோடு மாற்றினார்கள்.

அதை தொடர்ந்து வந்த திராவிட நஞ்சுக்கள் தகுதி திறமை இல்லாத பலரையும் மருத்துவராக்க திட்டமிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் செம்மொழி அறிவானது மருத்துவதுறைக்கு ஒரு முக்கிய தகுதி. அந்த முக்கிய தகுதியை நீக்கினர். பிறகு இடஒதுக்கீடு என்ற நோயை ஒற்றுமையாக இருந்த ஹிந்துக்கள் இடையே புகுத்தி ஜாதி என்ற கிருமியை வளர்த்தனர்.

இதனால் உலக புகழ் பெற்று இருந்த நம் மருத்துவ துறை படுபாதாளத்தில் விழுந்தது. ஆனாலும் ஸ்ரீமான் வேணுகோபால் போன்ற நம்மவர் தொடர்ந்து இந்த அடக்குமுறையை எதிர்த்து போராடினர். அவர்களுக்கு உற்ற துணைவராக நம் உச்ச நீதிமன்ற நீதிமான்கள் தங்கள் கடமையை செவ்வனே ஆற்றி வந்தனர்.

இதை கண்டு எரிச்சல் அடைந்த வாடிகன் அரசு அன்டோனியோ மெய்னோவின் மூலம் ஸ்ரீமான் வேணுகோபாலுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்தது. இந்த விஷயத்தில் முன் நின்று காரியம் ஆற்றியவன் "மதிமூடன்" அன்புமணி (உபயம் ஆத்திக செம்மல் VSK அய்யா).

அகில உலக புகழை உடைய AIIMS ஸ்தாபனத்தை ஸ்ரீமான் வேணுகோபால் திறம்பட இயக்கி வந்தார். அவரை பதவியில் இருந்து அநியாயமாக விரட்டி அடித்தனர் திம்மிக்கள். ஸ்ரீமான் வேணுகோபால் பதவியில் இருந்து விரட்ட பட்டவுடன் AIIMS ஸ்தாபனம் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது.

முதலில் 49 குழந்தைகள் மரணம் அடைந்தனர் என்றார்கள். இப்போது அரிய வகை ரத்தம் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. ஸ்ரீமான் வேணுகோபால் இயக்குநராக இருந்திருந்தால் இது போன்று நடக்குமா என்று யோசித்து பாருங்கள்.

இந்த கொடுமையான நிலைக்கு பொறுப்பேற்று உடனடியாக மதிமூடன் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் எச்சரிக்கை விடுக்கின்றேன். இவரை அமைச்சராக்க சிபாரிசு செய்த மைனாரிட்டி அரசின் முதல்வராகிய கருணாநிதியும் பதவி விலக வேண்டும்.

வாழ்க வேணுகோபால். வீழ்க மதிமூடன்.

வியாதி, பெரும்வியாதி

தேசிய முற்போக்கு திருடர்கள் கழகத்தை ஆரம்பித்த நாட்களில் இருந்தே விஜயகாந்து ஒரு குடிகாரன் என்று நாட்டு மக்களுக்கு நிரூபித்து வருகின்றான். அவனின் சிறப்புகளை பற்றி நான் பல பதிவுகள் போட்டு உள்ளேன். சமீபத்தில் (சில வாரங்களுக்கு) முன் நம் பாரம்பரிய இதழான தினமலரில் அவன் குடித்துவிட்டு கூட்டத்தில் தள்ளாட்டத்துடன் பேசியதை போட்டு இருந்தார்கள்.

இப்போது அம்மாவை பெரும்வியாதி என்கின்றான். ஆமாம் அம்மா ஒரு பெரும் வியாதிதான். அவருக்கு எப்படி வியாதி வந்தது என்று சற்று யோசியுங்கள். எழுத்து சித்தராகிய ஸ்ரீமான் பாலகுமாரன் ஒரு கேள்வி பதிலில் இதை ஒரு முறை அழகாக விளக்கி உள்ளார்.

கே: யோகி ராம்சூரத்குமாருக்கு எப்படி புற்றுநோய் தாக்கியது?
ப: உங்கள் கேள்வியே தவறானது. அவருக்கு நோய் தொற்றவில்லை. அவரின் பக்தர்களின் நோயை அவர் வாங்கிக்கொண்டு தன் பக்தர்களை காப்பாற்றுகிறார்.

இதை போலத்தான் உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவும் கோடானுகோடி தமிழர்களின் நோய்களை அவ்வப்போது செய்து வரும் யாகங்களின் மூலம் தனதாக்கி கொள்கின்றார். அம்மாவின் இந்த புனித பணியை 80 கோடி ஹிந்துக்களும் ஒன்று சேர்ந்து வாழ்த்துவோம்.

வாழ்க அம்மா. வீழ்க குடிகாரன்.

Tuesday, August 12, 2008

கன்னடம் செம்மொழி ஆவதை தடுக்கும் கருணாநிதி

பாரதத்தின் தாய்மொழியான சமஸ்கிருதம் பெரும் வளங்களை உடையது என்பது அனைவருக்கும் தெரியும். கம்யூட்டருக்கு கூட இதுதான் உகந்த மொழி என்பது பல முறை நிரூபிக்கபட்டு உள்ளது. நம் மொழியின் வளர்ச்சியை கண்டு எரிச்சல் அடைந்த கிருத்துவ மிஷினரிகள் அதை அழிக்க பெரும் முயற்சிகளை எடுத்தனர். அவை யாவும் தோல்வி அடைந்தது.

அதை தொடர்ந்து திராவிட நஞ்சுக்கள் தமிழ்மொழியும் சிறந்தது என்பதை காட்ட தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசை மிரட்டி வாங்கிவிட்டனர். தமிழ் செம்மொழியானதால் தமிழர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவா கிடைத்தது? அதனால் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதா என்பது போன்ற உண்மை உணர்வுகளை நம் இதழ்கள் ஆன தினமலர், தினமணி, துக்ளக் போன்றவை பல முறை தமிழர்களுக்கு எடுத்து சொல்லி உள்ளன.

பாரதத்தின் தென்பகுதியில் இருக்கும் கர்நாடகத்தில் உள்ள மக்கள் அவ்வப்போது அவர்களின் வட்டார மொழியான கன்னடத்தில் உரையாடுவர். கன்னட மொழியும் ஒரு சிறந்த மொழி. அம்மொழியின் சிறப்பும், வளமும் பெரும் புகழ் வாய்ந்தது. பாரதத்தின் சிறந்த அறிஞர் பெருமக்கள் அவ்வப்போது கன்னட மொழியில் பேசி, எழுதி வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக சூப்பர் ஸ்டார் சமீபத்தில் எழுதிய கன்னட மொழி கடிதத்தை குறிப்பிடலாம்.

இவ்வளவு சிறப்புகளை கொண்ட கன்னட மொழி செம்மொழி அந்தஸ்தை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதை தடுக்கும் விதத்தில் மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இருந்து ஒரு வழக்கு தொடுக்கபட்டு இருக்கிறது. மைனாரிட்டி ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் எது நடந்தாலும் அதன் பின்னணியில் கருணாநிதியும் அவரின் குடும்பத்தினரும்தான் இருப்பர் என்பது அனைவருக்கும் தெரியும். மைனாரிட்டி தமிழக அரசை எதிர்த்து தென்னகத்து மோடியான ஸ்ரீமான் எதியூரப்பா போர்குரல் எழுப்பி உள்ளார்.

கன்னட மொழிக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் களம் இறங்குவாரா என்பது கோடானுகோடி கன்னடர்களின் எதிர்பார்ப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க விரைவில் ரோபோ படம் வெளியாகும் தருணத்தில் நம் சூப்பர் ஸ்டார் ஒரு பெரும் உண்ணாவிரதத்தை நடத்த உள்ளார் எனும் செய்தி இப்போது கசிந்துள்ளது.

மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தின் கொலைநகருக்கு திரும்பிய அம்மா விரைவில் இதை பற்றி ஒரு அறிக்கை வெளியிடுவார் என்று போயஸ் தோட்ட செய்திகள் அறிவிக்கின்றன. அம்மாவின் விரல் அசைவிற்காக ஒட்டு மொத்த கர்நாடகமும் ஆவலோடு காத்து இருக்கின்றது.

வாழ்க அம்மா. வாழ்க கன்னடம்.

Sunday, August 10, 2008

மகிழ்ச்சியான செய்திகள்

முதலாவதாக தமிழகத்தின் கொலைநகரமான சென்னைக்கு அம்மா திரும்பி உள்ளார். அவரின் வருகையானது அனைத்து உலக பத்திரிக்கையாளர்களாளும் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி இதனால் பெரும் கலக்கம் அடைந்துள்ளாதாக தெரிகின்றது.

அடுத்ததாக சீனாவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பாரத புத்திரர் ஒருவர் முதன் முதலாக தங்கம் வென்று உள்ளார். அவரின் சாதனைக்கு அம்மா கொடநாடு எஸ்டேட்டில் நடத்திய தொடர் யாகங்களும் ஒரு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தங்க சாதனை புரிந்த அந்த வீர ஹிந்துவை 80 கோடி ஹிந்துக்களும் வாழ்த்துவோம்.

வாழ்க அம்மா. வாழ்க பிந்த்ரா.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za