அம்மான்னா சும்மாவா?

Sunday, May 17, 2009

வெற்றி பெருவெற்றி

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் அ.இ.அ.தி.மு.கவிற்கு 9 தொகுதிகளை அள்ளி வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அம்மாவின் ராசி எண் 9 என்பதை அறிந்து அதற்கேற்ப நடந்து கொண்ட கோடானு கோடி ஹிந்துக்களுக்கு என் வணக்கங்கள்.

அம்மாவிற்கு மட்டும் இன்றி, தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கும் (18 = 1+8 = 9), மத்தியில் ரோம ஆட்சி நடத்தி வரும் அண்டோனியோ மெய்னோவிற்கும் 9 இடங்கள்தான். மக்களின் இந்த மதியூகத்தினை கண்டு மெய் சிலிர்க்கின்றது.

அம்மா மேலும் சிறப்பாக செய்து இருக்கலாம் என்று என்னை போன்ற சிற்றிலைகளின் சிறு கருத்து. இலங்கையை பற்றி பேசாமல் ஸ்ரீராம சேதுவை பற்றி அதிகமாக பேசி இருந்தால் மேலும் பலமான வெற்றி கிடைத்து இருக்கலாம்.

மத்தியில் பா.ஜ.க குறிப்பிடும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அது நான் ஏற்கனவே ஊகித்து இருந்த விஷயம். மாவீர ஹிந்து ஸ்ரீயான அம்மாவின் துணையின்றி அகில பாரதத்தையும் வென்று விடலாம் என்று சில வீணர்கள் முடிவு செய்த போதே அவர்களின் முடிவு தெரிந்துவிட்டது.

வரும்காலத்தில் ஈழத்தாயாகிய அம்மாவின் துணைகொண்டு ஸ்ரீமான் மோடி பாரதத்தினை ரோம நாட்டினரிடம் இருந்து மீட்க வேண்டும் என்று 80 கோடி ஹிந்துக்களின் சார்பாக ஸ்ரீராமரிடம் வேண்டுவோம்.

வாழ்க பாரதம். வாழ்க அம்மா.

Sunday, May 10, 2009

அன்னையர் தினம்


அகில உலகத்தையும் வாழவைக்கும் அன்னையே

ஈழத்தாயே

வாழ்த்த வயதில்லை

தகுதியும் இல்லை

உங்களை வணங்கும் ஒரு சிற்றிலை.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za