அம்மான்னா சும்மாவா?

Saturday, October 04, 2014

அம்மா அம்மாதான்

உலகின் ஒரே தங்க தாரகையும் ஈழத்தாயும் ஆகிய எங்கள் அம்மாவை வீழ்த்திவிட்டதாக கனவு காண்கின்றனர் இந்த திம்மிக்கள். இது ரோம் நாட்டின் சதி என்பது எங்களுக்கு தெரியாதா? கருணாநிதியின் தூண்டுதல் காரணமாக அன்டோனியோ மெய்னோ வாடிகன் மூலம் குண்ஹாவிற்கு கொடுத்த அழுத்தம் நாங்கள் அறியாததா?


அம்மாவிற்கு அளிக்க பட்ட தண்டனையை கண்டு பல கோடி ஹிந்துக்கள் வேதனை அடைகின்றனர். நேற்று வரை கருணாநிதியின் அல்லக்கையாக கூவிய லக்கி இன்று அம்மாவிற்கு ஆதரவாக பதிவு இடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.


அம்மா சிறையில் உள்ளார் என்பதை கேள்விப்பட்ட ஆர்னால்ட் சிறையை தகர்த்து அம்மாவை வெளியில் கொண்டுவர ஆயுத்தம் ஆனார். தனி விமானத்தில் கிளம்ப இருந்த நிலையில் நம் திரைஉலக கண்மணிகள் நடத்திய ஆர்பாட்டத்தை கண்டார். இந்த வேலையை தமிழகத்தில் இருக்கும் இவர்களே முடித்து விடுவார்கள் என்று பயணத்தினை தள்ளிவைத்து விட்டார்.


66 கோடிக்காக சிறை சென்ற நம் அம்மாவின் தியாகத்தினை போற்றும் வகையில் நம் ஈழ நண்பர்கள் விரைவில் கிடைக்க போகின்ற ஈழத்திற்கு "அம்மா நாடு" என்று பெயர் வைக்க முடிவு செய்து உள்ளனர்.


வாழ்க அம்மா. வீழ்க குண்ஹா.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za