அம்மான்னா சும்மாவா?

Monday, December 15, 2008

ஹிந்துக்களை கொல்லும் சாமுவேல்

பாரதத்தில் ஹிந்துக்கள் கிருத்துவ மிஷினரிகளாலும், முகமதிய ஜிகாதிகளாலும், திராவிட திம்மிகளாலும் சொல்ல முடியாத துயருக்கு நாள்தோறும் ஆளாகின்றனர். இப்போது வாடிகன் ஆசியோடு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்யும் சாமுவேல் படுபாதக செயலை தொடங்கிவைத்து உள்ளார்.

ஒரு சிலர் இரண்டு பெண்களின் மீது ஆசிட் வீசினார்களாம். அதன் தொடர்சியாக மூன்று பேர் அநியாயமாக சுட்டு கொலை செய்யபட்டுவிட்டனர். ஹிந்துக்கள் ஒரு போதும் இது போன்ற பாவ செயல்களை செய்ய மாட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அந்த சம்பவத்தினை முழுமையாக ஆராயாமல் குறுட்டாம் போக்கில் வழியில் சிக்கிய நபர்களை என்கவுண்டர் என்ற போர்வையில் போட்டு தள்ளுவது எந்த வகையில் நியாயம்.

குற்றம் சாட்டபட்டவர்கள் ஒரு முகமதிய ஜிகாதியாகவோ, கிருத்துவ மிஷினரியாகவோ இருந்தால் இந்த படுகொலைகள் நிகழ்ந்து இருக்குமா என்று யோசியுங்கள்.

எப்போதும் அஹிம்சையை கடைபிடிக்கும் ஹிந்துக்களை என்ன செய்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற நினைப்பில் இருக்கும் சாமுவேலுக்கு 80 கோடி ஹிந்துக்களின் சார்பில் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கின்றேன்.

வாழ்க பாரதம். வீழ்க சாமுவேல்.

Monday, December 08, 2008

அம்மான்னா அம்மாதான்

பாரதத்தின் தலை சிறந்த அறிஞர் பெருமக்களில் குறிப்பிட தகுந்தவர் அம்மா என்பது உள்ளங்கை நெல்லிகனி. அதனால்தான் அவரை உலகின் ஒரே தங்க தாரகை என்று நாங்கள் எல்லோரும் போற்றி வருகின்றோம்.

அம்மாவின் தீர்க்கதரிசனம் உலக பிரசித்தி பெற்றது. வரும் நாடாளமன்ற தேர்தலுக்காக இப்போது கூட்டணி அமைக்கும் செயல் ஒன்றே அவரின் திறமைக்கு எடுத்துகாட்டு. தேசியத்தையும், ஆன்மீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் பா.ஜ.கவின் இரும்பு மனிதர் அத்வானி சமீபத்தில் (2008ல்) சென்னைக்கு வந்து இருந்தார். அம்மாவின் தரிசனம் கிட்டாதா என்று பல முயற்சி செய்தார். அம்மாவின் ஆசி கிட்டினால் வருங்காலத்தில் மத்திய ஆட்சியை சுலபமாக கைப்பற்றி விடலாம் என்ற கனவும் அவருக்கு இருந்தது.

அம்மாவோ அவரை சந்திக்கவில்லை. பல கோடி ஹிந்துக்களுக்கு அது வியப்பாக இருந்தது. அம்மா பாரதத்தில் செல்வாக்கு மிக்க பா.ஜ.கவுடன் தானே கூட்டணி அமைப்பார் என்று நம்பி இருந்தோம். இப்படி நடந்து கொள்கின்றாரே என்று கேள்வி எழுப்பினர். பா.ஜ.கவிற்கு எத்தனை செல்வாக்கு இருக்கின்றது என்று பார்த்துவிட்டு அவர்களுடன் கூட்டணி பற்றி பேசலாம் என்று முடிவு செய்து விட்டார் அம்மா.

சுலபமாக வெற்றி பெற்று இருக்க வேண்டிய தில்லியையும், ராஜஸ்தானத்தையும் இழந்துவிட்டு நிற்கின்றது பா.ஜ.க. கொடநாட்டில் இருந்து கொண்டே பாரதத்தின் ஜாதகத்தினை சரியாக கணிக்கும் ஆற்றல் பெற்றவர் அம்மா. பா.ஜ.க சுலபமாக ஜெயித்துவிடாது என்று சரியாக கணக்கு போட்டுவிட்டதன் காரணமாகதான் அவர் அத்வானியை சந்திக்க வில்லை. இப்போது தெரிகின்றதா அம்மாவின் தீர்க்கதரிசனம்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

Monday, December 01, 2008

ஹிந்துக்களை பிளவுபடுத்தும் கருணாநிதி

பாரத தேசத்தின் மக்களாகிய நாம் ஒற்றுமையாக ஒரே இனமாக அவரவர்க்கு விதிக்கபட்ட கடமைகளை செய்து வந்து கொண்டு இருக்கின்றோம். நம் முன்னோர்கள் பல கோடி ஆண்டுகளாக காப்பாற்றி வந்த ஒற்றுமையை கிருத்துவ மிஷினரிகள் ஜாதி என்ற கோடாரியை கொண்டு பிளந்தனர். திராவிட திம்மிகளும் அதையே பின் பற்றி இட ஒதுக்கீடு என்று கிருமியை நம்மிடையே புகுத்தி விட்டனர்.

ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று நினைத்த கருணாநிதி தொடர்ந்து நம்மிடையே பிளவுகளை ஏற்படுத்தி வந்துள்ளார். இப்போது அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடாம். இப்படி ஒரு சமூகம் இருப்பதே நம்மில் பலருக்கு தெரியாது. இல்லாத ஒன்றை கற்பனையாக உருவாக்கி ஹிந்துக்களை பிளவுபடுத்தும் கருணாநிதியை வன்மையாக கண்டிப்போம்.

தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவினை சரி செய்து ஒன்றினைக்கும் கருணாநிதி ஹிந்துக்களை மட்டும் ஏன் இப்படி பிரித்து பார்க்கின்றார் என்று 80 கோடி ஹிந்துக்களும் கேள்வி கேட்கின்றனர். இந்த கொடுமையான பிரிவினை செயலை உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா மட்டுமே எதிர்கின்றார் என்பதையும் நினைவில் வையுங்கள். தேர்தல் நேரத்தில் பிரிவினையை வளர்க்கும் திராவிட திம்மிக்களுக்கு வாக்களிக்காமல் இருங்கள்.

வாழ்க ஹிந்து ஒற்றுமை. வாழ்க அம்மா.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za