அம்மான்னா சும்மாவா?

Saturday, April 30, 2011

இன்னொரு கலெக்டர் மீது தாக்குதல்

நடந்து முடிந்த தேர்தலில் அசுரர்களை எதிர்த்து போரிட்ட உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மாவின் தளகர்த்தர்களாக விளங்கிய கலெக்டர்களை கருணாநிதி கும்பல் தாக்கி வருவது அனைவருக்கும் தெரியும்.

நேற்று திருவண்ணாமலை கலெக்டர் மீது தேனீக்களை கொண்டு ஒரு பெரும் தாக்குதல் நடந்துள்ளது. கலெக்டர் மீது நடந்த அந்த தாக்குதலினால் திருவண்ணாமலை பகுதியே கொந்தளிப்பதாக நம் நிருபர் தெரிவிக்கின்றார். இந்த கொடும் சம்பவத்தை உலகில் உள்ள 80 கோடி ஹிந்துக்களும் வன்மையாக கண்டிப்போம்.

வாழ்க அம்மா. வீழ்க அசுரர்கள்.

Sunday, April 24, 2011

ஹிந்துவை காப்போம்

பாரதத்தின் பழம் பெரும் பத்திரிக்கைகளில் மதராஸ் நகரில் இருந்து வரும் ஹிந்துவும் ஒன்று. அது நம் பத்திரிக்கை. இப்போது சிறிது தடம் புரண்டு சீன ஏஜண்டாக செயல்பட்டு வருகின்றது. அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. காலப்போக்கில் அது சரியாகிவிடும்.

நம் பாரம்பரிய ஹிந்துவை கைப்பற்ற கருணாநிதி கும்பல் முயன்று வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. முதலில் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தி அவர்களை தனி தனியாக பிரித்துவிட்டு பிறகு உள்ளே புகுந்து பத்திரிக்கையை தன் வசபடுத்த போவதாக உறுதிசெய்ய படாத தகவல்கள் வந்துள்ளன.

ஹிந்துக்களே நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் செயல் ஒன்றும் அடுத்து நடைபெற போகின்றதாம். "The Hindu" என்ற பெயரை இந்த திம்மிக்கள் "The Dravidan" என்று மாற்றப்போகிறார்களாம்.

இதன் பொருட்டு விரைவில் உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா அவர்கள் ஒரு போராட்டம் அறிவிக்க இருக்கின்றார். அதை உலகெங்கும் இருக்கும் 80 கோடி ஹிந்துக்களும் ஆதரிக்க வேண்டும்.

வாழ்க ‍ஹிந்து. வாழ்க அம்மா.

Friday, April 22, 2011

ஈழத்தாய்

சென்ற பதிவில் நான் உலகின் ஒரே தங்கதாரகையான நம் அம்மா அவர்கள் கொட நாட்டிற்கு சென்றது ஓய்வெடுக்க அல்ல என்று விரிவாக விளக்கி இருந்தேன். அதை கண்டு சில திம்மிக்கள் சிரித்தனர். ஆனால் நடந்தது என்ன?

ஈழத்தாயான நம் அம்மாவின் எதிர்ப்பை கண்ட டைம் நாளிதழ் கொடுங்கோலன் ராஜபக்சேவின் பெயரை அதன் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. மேலும் அவனை கைது செய்ய அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அம்மாவின் ஆணைக்கு இணங்கி விரைவில் துணை நிலை ராணுவம் கொழும்புவிற்கு செல்லும் என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்து உள்ளார்.

அம்மான்னா சும்மாவா.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

Monday, April 18, 2011

கொட நாடு

உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா அவர்கள் கொட நாட்டிற்கு சென்று விட்டார் என்பதை ஒரு பெரிய விஷயமாக சில திம்மிக்கள் பேசி திரிகின்றனர். ஈழத்தாயான நம் அம்மா நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தனிக்கட்சி ஆட்சி அமைப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

கொட நாட்டிற்கு செல்வதை பெரிதாக பேசும் திம்மிக்களே, கருணாநிதி ஓய்வெடுக்க மகாபலிபுரம் செல்வதில்லையா? ஜார்ஜ் புஷ் ஓய்வெடுக்க தன் கடற்கரை மாளிகைக்கு செல்வதில்லையா?

முதலில் அம்மா ஏன் கொட நாட்டிற்கு சென்றார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆணி பிடுங்கும் மக்களுக்கு "off-site strategy building session" என்பதை பற்றி நன்கு தெரியும். அதை போலதான் தமிழக மக்களுக்கு எப்படி தாயுள்ளத்தோடு பணி செய்யலாம் என்பதை பற்றி சிந்திப்பதற்காகவே அவர் கொட நாடு சென்றுள்ளார்.

ஈழத்தாயான நம் அம்மா அவர்கள் முதல்வர் ஆவது உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் ஐநா சபை கொடுங்கோலன் ராஜபக்சே மீது குற்றபத்திரிக்கை தயார் செய்து விட்டது. அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற‌தும் ராஜபக்சே கைது செய்யப்படுவான். அதன் தொடர்சியாக மிக விரைவில் ஈழம் மலரும்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

Monday, April 11, 2011

ஜெயம் நமதே

அன்பார்ந்த ஹிந்துக்களே, பீடு நடை போடும் பாரதத் தாயின் வழியில் இருக்கும் தடை கற்களை அகற்றும் முக்கிய தருணத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம். அகண்ட பாரதம் என்ற இலக்கை அடைவதற்கு ஈழம் நமக்கு மிக முக்கியம். அதை நமக்கு அளிக்கும் திறன் பெற்ற ஒரே ஒருவர்தான் நம் அம்மா அவர்கள். அதனால்தான் உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மாவை புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத்தமிழர்கள் "ஈழத்தாய்" என்று அன்போடு அழைக்கின்றனர்.

களப்பணியாற்றும் பல நூறு தொண்டர்கள் ஜெயம் நமதே என்று எனக்கு தகவல் அளித்துள்ளனர். ஒரு சில திம்மி பத்திரிக்கைகளில் வரும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம். அம்மா அவர்களின் தலைமையில் நாம் தனித்து ஆட்சி புரியும் அளவிற்கு வெற்றியினை ஈட்டுவோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

நம்மவர் கூறியது போல நம் வெற்றி கூட்டணியானது குறைந்த பக்ஷம் 200 தொகுதிகளை வெல்வோம்.

வாழ்க அம்மா. ஜெயம் நமதே.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za