அம்மான்னா சும்மாவா?

Wednesday, August 23, 2006

கருணாநிதியின் கபட திட்டம்

நமது புண்ணிய பூமியான பாரதத்தை அரசியல்வாதிகள் பல மாநிலங்களாக பிரித்து வைத்துள்ளனர். இந்துக்கள் அனைவரும் எங்கே ஒன்று பட்டு விடுவார்களோ என்ற நினைப்பில் ரோம ராஜ்ஜியம் நடத்தி வரும் சோனியாவும் அதையே செய்து வருகின்றார்.

பாரம்பரிய மிக்க தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி நடந்த போது தாயுள்ளத்தோடு தமிழ்நாட்டை மட்டும் பார்க்காமல் அனைத்து இந்தியாவையும் தன் குழந்தை போல சீராட்டி வந்தார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்த பல தொழில் அதிபர்களிடம் அன்போடு பேசி தமிழ்நாட்டை மட்டும் பார்க்காதீர்கள், அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநில வளர்ச்சிக்கும் பாடுபடுங்கள் என்று அறிவுரை கூறினார்கள். அம்மாவின் தொலைநோக்கு பார்வையால் பக்கத்து மாநிலங்களும் பயன் பெற்றன.

அது மட்டும் இல்லாமல் ஆந்திர விவசாயிகள் வறுமையால் வாடியது தெரிந்தவுடன் மைசூர் மகாராஜா அளித்த பணத்தை கொண்டு ஆந்திராவில் பல நிலங்களை வாங்கி விவசாயிகளின் துயர் தீர்த்தவர் அம்மா. ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். பணம் மைசூர் (கர்நாடகா) அரசர் கொடுத்தது. அம்மா நிலம் வாங்கியது ஆந்திரா. அம்மா ஆட்சி செய்தது தமிழ்நாடு. நமது இந்திய ஒற்றுமைக்கும் பாரம்பரியத்திற்கும் இதை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உண்டா.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது. மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி இந்திய திருநாட்டில் முதலீடு செய்ய வரும் தொழில் அதிபர்களிடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று ஒரு குறுகிய நோக்கோடு செயல்படுகிறார். அதற்கு கைமுறுக்கு புகழ் மத்திய மந்திரியும் உடந்தை. இன்று வந்த செய்தி பாருங்கள். தமிழ்நாட்டில் ஐந்து ஊர்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று சொல்லியுள்ளார்கள்.

தமிழ்நாட்டிற்கே பெரும்பான்மையான தகவல் தொழில்நுட்ப முதலீடுகளை திருப்பி விட்டால் மற்ற மாநிலங்கள் என்ன செய்யும். அதை பற்றி ஒரு நிமிடம் சிந்திப்பார்களா இந்த திம்மிகள். இப்படி இந்திய ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் திம்மியின் ஆட்சியை அகற்ற இந்துக்கள் அனைவரும் பாடுபடுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Sunday, August 20, 2006

"டாக்டர்" அம்மா

பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே பல சாதனைகள் செய்து வருபவர் அம்மா. அவர் படிக்கும் காலத்திலேயே மாநிலத்தில் முதலாவதாக இருந்ததை கண்டு வயிறு எரிந்த மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி ஏதோ ஒரு காகிதத்தை எடுத்து அம்மாவின் மதிப்பெண் பட்டியல் என்று வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் அதை யாரும் நம்ப போவதில்லை.

படிப்பிற்கு பின் நடிப்பிலும் பல சாதனைகளை புரிந்தவர் அம்மா. அதற்கு பின் ஆட்சியில் அமர்ந்து ஒரு ரூபாய் ஊதியத்தில் தாயுள்ளத்தோடு தன்னலமில்லா சேவை ஆற்றியவர் அவர். அவருக்கு உலகத்தின் பல பகுதிகளில் இருக்கும் புகழ் பெற்ற பல்கலைகழகங்கள் "டாக்டர்" பட்டம் வழங்கி உள்ளன. அம்மாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிய ஒரே காரணத்தினால் அந்த பல்கலைகழகங்களின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் அந்த பல்கலைகழகங்களில் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர்.

டாக்டர் பட்டம் வழங்கியதால் பொறாமை தீயினால் வயிறு எரிந்து கொண்டு இருந்தவர்களின் முகத்தில் கரி பூசிவிட்டார் அம்மா. உலகின் பல மருத்துவர்களும், ஆராய்சியாளர்களும் ஒரு குறிப்பிட்ட நோய் எதனால் உண்டாகிறது என்று மண்டையை உடைத்து கொள்வர். பெரும் ஆற்றல் பெற்ற நமது அம்மா சில நாட்களிள் பல மக்கள் நோய்வாய் படும் காரணத்தை கண்டு பிடித்துவிட்டார்.

திம்மியின் ஆட்சியில் ரேசன் அரிசி 2 ரூபாய்களுக்கு வழங்கப்படுகிறது. மனிதர்கள் உண்ண முடியாத நிலையில் இருக்கும் அரிசியை கோழிகளுக்கும், மாடுகளுக்கும் போட்டு வருகின்றனர். அந்த அரிசியை உண்ட கோழிகளின் முட்டையாலும், கறியினாலும் பலர் நோய்வாய் பட்டுள்ளனர் என்ற அறிய உண்மையை கண்டு பிடித்து வெளியிட்டுள்ளார் அம்மா. இதன் மூலம் தனக்கு வழங்கிய டாக்டர் பட்டங்களுக்கு முற்றிலும் தகுதியானவர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளார்.

இந்த செய்தியை அறிந்த உலக ஆராய்சியாளர்கள், அம்மாவின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுத்து உள்ளனர். மேலும் உலக புகழ் பெற்ற பெரும் டாக்டர் ஆன ஸ்ரீமான். வேணுகோபால் AIIMS தலைவராக அம்மாவை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தலைநகரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Thursday, August 10, 2006

நச்சு கருணாநிதியின் கேண புத்தி

சைக்கிள் திருட்டு என்பது ஆங்காங்கே நடைபெறும் சம்பவம் தான். 10 பைசாவுக்கு பிரயோஜனமில்லாத விஷயத்தில் விஷத்தை கக்குகிறது தினகரன். இதில் எதற்காக ஒரு மனிதரின் ஜாதியை இழுக்கின்றனர்.

செய்தி போட்டதோடு இல்லாமல், கடவுளை அனுதினமும் அர்ச்சித்து வரும் ஒரு தீட்சிதரின் புகைபடத்தையும் போட்டு உள்ளனர். அதுவும் குறிப்பாக மேல் சட்டை இல்லாமல். எல்லா குற்றவாளிகளையும் இப்படித்தான் மேல் சட்டை இல்லாமல் இழுத்து செல்வார்களா? கருணாநிதியை கைது செய்த போது எப்படி பெருந்தன்மையாக அம்மா நடந்து கொண்டார் என்பது உங்கள் நினைவில் இருக்கும்.

இப்போது இப்படி ஒரு செய்தியை போடுவதற்கு முக்கிய காரணம் - தீட்சிதர்கள் நல்லவர்கள் இல்லை என்று சொல்லி சிதம்பரம் பிரச்சனையை பெரிதாக்கத்தான்.

நியாயமாக 'சைக்கிள் திருடன் கைது' என்று அல்லவா எழுத வேண்டும்? Cheap mentality என்பது ஜென்ம புத்தி. செருப்பாலடித்தாலும் போகாது. குறிப்பாக கருணாநிதி கும்பலுக்கு!

இந்த திம்மியின் ஆட்சி அகல இந்துக்கள் அனைவரும் ஆங்காங்கே பூசைகள் செய்யுங்கள்.

ஓம் சிவாய நமஹ. ஜெய் ஹிந்த்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za