அம்மான்னா சும்மாவா?

Monday, March 19, 2012

இருண்ட‌ த‌மிழ‌க‌த்தினை வெளிச்ச‌மாக்கிய‌ அம்மா

உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையான‌ அம்மாவின‌ ந‌ல்லாட்சியில் த‌மிழ‌க‌ம் பீடு ந‌டை போட்டு வ‌ருகின்ற‌து. ஈழ‌த்தாயின் ஆட்சி சிற‌ப்புக‌ளை க‌ண்டு அமெரிக்க‌ அமைச்ச‌ர் ஹிலாரியே விய‌ந்து போற்றினார்.

மைனாரிட்டி ஆட்சியின் கார‌ண‌மாக‌ த‌மிழ‌க‌ம் இருளில் மூழ்கிய‌து. ம‌க்க‌ள் சொல்ல‌ முடியாத‌ துய‌ர‌த்தில் வீழ்ந்த‌ன‌ர். த‌மிழ‌க‌ இருளை போக்கும் வித‌மாக‌ ந‌ம் நிர‌ந்தர‌ முத‌ல்வ‌ர் ம‌த்திய‌ அர‌சோடு போராடி கூட‌ங்குள‌ அணுமின் திட்ட‌த்தினை தொட‌ங்க‌ உத்த‌ர‌வு இட்டு விட்டார்.

கூட‌ங்குள‌த்தில் உற்ப‌த்தி ஆகும் மின்சார‌ம் அடுத்த‌ வார‌ம் முத‌ல் த‌மிழ‌க‌ம் எங்கும் விநியோக‌ம் ஆகும் என்று தெரிகின்ற‌து. என‌வே அடுத்த‌ வார‌ம் முத‌ல் ஒரு நிமிட‌ம் கூட‌ த‌மிழ‌க‌த்தில் மின்வெட்டு இருக்காது என்ப‌தை ம‌கிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன். மேலும் உப‌ரி மின்சார‌த்தினை வாங்க‌ ப‌க்க‌த்து மாநில‌ங்க‌ள் போட்டி போடுகின்ற‌ன‌ என்ப‌தாக‌ செய்திக‌ள் வ‌ந்துள்ள‌ன‌. அது மட்டும் இல்லாம‌ல் ந‌ம் அண்டை நாடுக‌ளும் அம்மாவிட‌ம் மின்சார‌ம் வேண்டி விண்ண‌ப்பித்து உள்ள‌தாக‌ கோட்டை த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.

ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் வாழ்வில் விள‌க்கேற்றிய‌ அம்மா அவ‌ர்க‌ளை 80 கோடி ஹிந்துக்க‌ள் சார்பில் வாழ்த்தி வ‌ண‌ங்குவோம்.

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ மின்வெட்டு.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za