அம்மான்னா சும்மாவா?

Tuesday, February 07, 2012

இந்த‌ ப‌டை போதுமா

இந்த‌ ப‌டை போதுமா இன்னும் கொஞ்ச‌ம் வேணுமா என்பதை போல் உல‌கின் ஒரே த‌ங்க‌ தார‌கையான‌ ந‌ம் அம்மா அவ‌ர்க‌ள் அறைகூவ‌ல் விட்டு உள்ளார். கூடிய‌ விரைவில் ந‌ட‌க்க‌ இருக்கும் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ இடைதேர்த‌லில் ந‌ம் கழ‌க‌ம் குறைந்த‌ப‌ட்ச‌ம் 90 ச‌த‌விகித‌ வாக்குக‌ளை பெற‌ வேண்டும் என்ற‌ தொலை நோக்கு பார்வையோடு இந்த‌ ப‌டை அறிவிக்க‌ப‌ட்டு உள்ளது. த‌மிழ‌க‌த்தின் நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் ஆகிய‌ ந‌ம் அம்மாவின் கால‌டியில் பெரும் வெற்றியை ச‌ம‌ர்பிக்க‌ ந‌ம் அரிமாக்க‌ள் கிள‌ம்பிவிட்ட‌ன‌ர்.

இடை தேர்த‌லில் 90 ச‌த‌விகித‌ம் வாக்கு பெற‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தோடுதான் சில‌ இட‌ங்க‌ளில் 8 ம‌ணி நேர‌ மின்வெட்டு அறிவிக்க‌ ப‌ட்டு இருக்கின்ற‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ த‌மிழ‌க‌த்தின் சில‌ ப‌குதிக‌ளில் இருந்து ப‌ல‌ர் இடை தேர்த‌ல் ந‌ட‌க்கும் இட‌ம் நோக்கி புல‌ம் பெய‌ர்வ‌ர். அப்ப‌டி செல்லும் அனைவ‌ரும் ந‌ம் சின்ன‌த்திற்கே வாக்க‌ளிப்ப‌ர் என்ப‌து உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி.

அம்மாவின் கால‌டியில் வெற்றியை ச‌ம‌ர்பிப்போம் என்று 80 கோடி ஹிந்துக்க‌ளும் உறுதி எடுப்போம்.

வாழ்க‌ அம்மா. வீழ்க‌ குடிகார‌ன்.

0 Comments:

Post a Comment

<< Home


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za