அம்மான்னா சும்மாவா?

Monday, February 25, 2008

அம்மா என்றால் அன்பு

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா பல கோடி ஆண்டுகள் வாழ 80 கோடி ஹிந்துக்களும் பூஜைகள் செய்வோம். 60 ஜோடிகள் இலவச திருமணத்தின் போது அம்மா இவ்வாறு பேசினார்.உலகம் முழுவதும் இலையுதிர் காலம் இருந்தாலும் அதிமுகவுக்கு என்றும் வசந்த காலம் தான். அதிமுக என்பது கால ஓட்டத்தில் காய்ந்து போகாத கற்பக விருட்சம். எந்த வேடனாலும் இதனைக் குறி வைக்க முடியாது. எந்த விஷ அம்பாலும் இதனைக் காயப்படுத்த முடியாது. ஏனெனில் இது எம்.ஜி.ஆர் என்ற தேயாத சந்திரன் வளர்த்த தெய்வீக மரம்.

ஆதிக்க கழுகுகளிடம் இருந்தும், அடாவடி ஓநாய்களிடம் இருந்தும், அக்கிரமக்கார மலைப் பாம்புகளிடம் இருந்தும் நான் அதிமுகவைக் காப்பாற்றி வருகிறேன். எம்ஜிஆரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி கட்சியைக் காப்பாற்றி வருகிறேன். தாய் ஸ்தானத்தில் இருந்து தினமும் கட்சியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி உங்கள்மீது அன்பு பாராட்டுகிறேன். அதனால்தான் நீங்கள் எல்லோரும் என்னை அம்மா என அன்புடன் அழைக்கிறீர்கள்.

இதில், 60 ஜோடியினருக்கு இலவச திருமணமும், கட்சி நிர்வாகிகள் 5 பேரின் இல்லத் திருமணத்தையும் நடத்தி வைத்துள்ளேன். என் தந்தை தனது 42-வது வயதிலும், எனது தாயார் தனது 47-வது வயதிலும், எனது அண்ணன் தனது 49-வது வயதிலும் மறைந்தார்கள். நான் இன்று 60 வயதைக் கடந்து 61-வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கிறேன். அதற்கு எனது தாயாரின் ஆசியும், எனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரின் அருளாசியும், அதிமுக தொண்டர்களாகிய நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும்தான் காரணம்.

இன்று நடப்பது என் 60-வது பிறந்தநாள் விழாவா, 65 ஜோடிகளின் திருமண விழாவா என்றால்...இரண்டும் தான். 60 மணப்பெண்களும் இது என் அம்மா வீட்டு சீதனம் என்று செல்லி மகிழ 60 விதமான பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட இலவச திருமணங்கள் அதிமுகவைத் தவிர வேறு யாராலும் நடத்த முடியாது. அதனால்தான் அதிமுக அரசியல் கட்சி என்ற நிலையைத் தாண்டி, ஒரு அன்புக் குடும்பம் என்ற உன்னத நிலையை அடைந்து இருக்கிறது.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிக்கள்.

Thursday, February 21, 2008

ஸ்ரீராம கோபாலன்ஜி சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம்

ஹிந்துஸ்தானத்தின் பாரம்பரியத்தையும், பெருமையையும் கட்டி காக்க நாள்தோறும் பாடுபட்டு வரும் பெரியவர் தாங்கள் என்பதை இந்த உலகமே அறியும். உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு ஹிந்துவின் கண்களிள் தூசி விழுந்தாலும் அஹிம்சா மூர்த்தியான தங்கள் கண்களில் ரத்தம் வழியும் என்பதை கண்கூடாக நான் பார்த்து இருக்கின்றேன்.

சமீபகாலமாக (2007 மற்றும் 2008ல்) மலேசிய நாட்டில் இருக்கும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக நீங்கள் நடத்திவரும் பெரும் போராட்டங்களை பல நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உங்களின் போராட்டங்களின் விளைவாக மலேசிய அரசாங்கம் கவிழலாம் என்று அங்கிருந்து ஒரு நண்பர் மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். மலேசிய எதிர் கட்சியாக விளங்கும் முகமதிய கட்சி ஒன்று "islamic state" என்ற வார்த்தைகளை தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இருந்து முதல் முறையாக நீக்கிவிட்டதாகவும் நண்பர் குறிப்பிட்டு உள்ளார். இவை யாவும் தங்களின் போராட்டத்தின் பயனாக மலர்ந்த மலர்ச்சி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

உலகம் எங்கும் நிறைந்து இருக்கும் ஹிந்துக்களுக்காக போராடி வரும் தாங்கள் மகாராஷ்டிரத்தில் உதை வாங்கி மாநிலத்தை விட்டு விரட்டபடும் ஹிந்துக்களுக்காக ஏன் தீவிரமாக போராடவில்லை என்ற ஒரு சிறு கேள்வி என் மனத்தில் உதித்தது. உடனே உங்களின் பார்வையில் வைத்தால் விரைவில் மும்பையில் வசிக்கும் ஹிந்துக்களின் துயர் துடைக்க ஒரு பெரும் போராட்டதை நீங்கள் வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.

வாழ்க ஹிந்துக்கள். வீழ்க திம்மிகள்.

கீழ்தரமான திராவிட திம்மிக்கள்

பாரததாயின் பாரம்பரியத்தை எப்போதும் கேலி செய்யும் குணம் ஈவேராவிற்கு உண்டு. அவரின் குண்டர்படையும் அவருக்கு சளைத்தது அல்ல என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வரும் கொலைஞரின் பூத் ஏஜண்ட் ஆன ஒரு பதிவர் அம்மாவின் பிறந்த நாள் புகைபடத்தை வைத்து ஒரு பதிவு போட்டுள்ளார். அம்மாவின் பிறந்த நாள் விழா உலகம் எங்கும் கோலகலமாக கொண்டாட படுவதை கண்டு வயிறெரிந்த வீணர்கள் இப்படி கேவலமான செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

அம்மாவின் பிறந்த நாள் விழா ஒரு ஹிந்து திருக்கோயிலின் உள்ளே நடைபெற்று உள்ளது. தகுதியும், திறமையும் வாய்ந்த கடவுளின் பிரநிதிகள் அந்த விழாவை முன்னின்று நடத்தி வைத்துள்ளனர். பாரம்பரிய மிக்க அவ்விழா சனாதன தருமத்தில் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் படி நடைபெற்று உள்ளது. சனாதன தரும குறியீடுகள் ஒவ்வொன்றும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களால் எழுதபட்டவை. உலகின் பல தலை சிறந்த அறிவியல் அறிஞர்கள் அதை பிரித்து ஆராய்ந்து அவை எல்லாம் அறிவியல் சார்ந்தவை என்று நிரூபித்து உள்ளனர். மெக்காலே கல்வி முறையில் வாந்தி எடுத்து படித்தவர்களுக்கு ஹிந்துஸ்தானத்தின் பழம் பெரும் பொக்கீஷங்களை பற்றி எதுவும் தெரியாது.

அவ்விழாவில் நடைபெற்றதாக நம்பபடும் ஒரு நிகழ்வின் புகைபடத்தை வைத்து கதை எழுதுவது ஒரு கீழ்த்தரமான செயல் என்பதை அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகின்றேன். பதிவு எழுதியவர் தான் சுஜாதா மற்றும் பாலகுமாரன் அளவிற்கு ஸ்வாரஸ்யமாக எழுதுபவர் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இப்படி பொய் உரைகளை எழுதி வந்தால் அந்த பதிவர் ஜெமோ அளவிற்கு கூட ஸ்வாரஸ்யமானவர் இல்லை என்றாகிவிடும்.

வாழ்க அம்மா பல்லாண்டு. வீழ்க திம்மிகள்.

Wednesday, February 20, 2008

அம்மா மீது மீண்டும் கொலை முயற்சி

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவை தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு அறவே பிடிக்காது. திம்மி செய்யும் தப்புகளை நாள்தோறும் சுட்டி காட்டி அம்மாவின் அறிக்கைகள் ஸ்ரீராம பானம் போல் பாயும். அதை சமாளிக்க முடியாத திம்மியும் அவரின் மகனும் அம்மாவின் வீட்டிற்கு ஒரு கொலையாளியை அனுப்பி வைத்த கதை உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஸ்ரீராமரின் அனுக்கிரகத்தால் அம்மாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இன்று தன் பிறந்த நாளை கொண்டாட தென் தமிழக கோவில் ஓன்றிக்கு தனி விமானம் மூலம் அம்மா பறந்தார். விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் விமான நிலையத்திற்கே வந்துவிட்டது. இது அம்மாவின் மீது ஏவிவிடபட்ட ஒரு கொலைபாதக செயலாக இருக்ககூடும் என்று லட்சோப லட்சம் தொண்டர்கள் கருதுகின்றனர்.

ஒரு ஹிந்து ஸ்திரீயானவர் கோயிலுக்கு செல்ல முடியா நிலைமையை கண்டு 80 கோடி ஹிந்துக்களும் வேதனை அடைந்துள்ளனர். உலகம் புகழும் ஒர் தங்க தாரகையை அவர் விரும்பிய கோயிலுக்கு செல்ல முடியாமல் தடுத்த மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியையும், அவருக்கு பக்க பலமாக நிற்கும் மெய்னோவையும் கடுமையாக கண்டிப்போம். அம்மா பல கோடி ஆண்டுகள் வாழ 80 கோடி ஹிந்துக்களும் அவர் சார்பில் அவரவர் இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

Monday, February 18, 2008

நாம் எங்கே செல்கின்றோம்?

சற்றுமுன் இணையத்தில் கண்ட செய்தி. பாரத தாயே எங்களால் எதுவும் செய்ய இயலா நிலையில் இருக்கின்றோம்.

SC upholds law making Tamil compulsory in schools

The Supreme Court on Monday upheld a law making Tamil a compulsory subject from class one in all schools in Tamil Nadu from the academic year 2006-07, saying it could not interfere with a policy decision of the state.

A bench comprising Justices Arijit Pasayat and J M Panchal refused to interfere with the Madras High Court judgment upholding the validity of the Tamil Nadu Tamil Learning Act of 2006.

The bench dismissed a bunch of petitions from the Kanyakumari District Malayala Samajam and others challenging the law. It said it couldn't interfere with the policy decision of the state and cited similar laws in Karnataka and Maharashtra, making Kanada and Marathi as a compulsory subject, in the respective states.

The high court had said that the legislation was not unreasonable or discriminatory and did not result in minority institutions losing their character. Further, the high court had said the legislation was not a colourable exercise of power with a malafide intention to take away the rights of minorities, to use their mother tongue as a medium of instruction.

The law does not, in any way, curtail the rights guaranteed to minority institutions under Article 29(1) and 30(1) of the Constitution, the high court had said.

Wednesday, February 13, 2008

பாரதத்தை சீரழிக்கும் திம்மி

பல கோடி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த பாரதத்தை கிருத்துவ மிஷினரிகள் ஜாதி என்ற கோடாரியால் பிளந்தனர். கிருத்துவம் மற்றும் ஜிகாதிகளின் கைபிள்ளையாக இருக்கும் கொலைஞர் பாரதத்தை தொடர்ந்து கூறு போட முயன்று வருகின்றார்.

ஹிந்துஸ்தானத்தில் எல்லோரும் ஒர் இனம், ஒர் தாய் பிள்ளைகள் என்று வாழ்ந்து வருகின்றனர். அண்ணாதுரை என்ற திராவிட திம்மி வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று பிரிவினை பேச்சை ஆரம்பித்து வைத்தார். அதை நம்பிய சிலரின் செய்கைகளால் திம்மிக்கள் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வந்தனர். இப்போது ஆட்சி அதிகாரத்தின் மூலம் நாடு முழுவதும் பிரிவினை செயல்களை தூண்டிவிட்டு வருகின்றனர்.

தொலைகாட்சி பெட்டியை பார்த்தால் கர்நாடகத்தில் கலவரம். மஹாராஷ்டிரத்தில் கலவரம் என்று நாள்தோறும் பிரச்சனைகள் கிளம்புகின்றன. ராஜ் தாக்கரே பகிரங்கமாக கருணாநிதி செய்வதைதான் நான் செய்கின்றேன் என்று பேட்டி கொடுக்கின்றார். கலவர காட்சிகளை தமிழ்நாடு எங்கும் விளம்பர படுத்த அரசே இலவச தொலைகாட்சி பெட்டிகளை அளித்து வருகின்றது. இதை பார்க்கும் தமிழக மக்களும் நாமும் கலவரத்தில் ஈடுபடலாமே என்ற நிலைக்கு தள்ளபடுவர். இலவசங்களின் மூலம் மக்கள் மூளை சலவை செய்யபடுகின்றனர்.

இந்த பாசிச செயலை தேசநலன் மிக்க மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும். கருணாநிதியை ஆட்சி பொறுப்பில் இருத்து விரைவில் அகற்ற 80 கோடி ஹிந்துக்களும் பிரார்த்தனை செய்வோம்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

Friday, February 01, 2008

ச்சும்மா அதிருதில்ல.......

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா அவர்கள் இன்று சட்டமன்றத்திற்கு வருகை அளித்தார். அவரின் வருகையால் மன்றம் பரபரபானது. அவரது பேச்சால் மன்றம் அதிர்ந்தது.

வாழ்க அம்மா. வீழ்க மைனாரிட்டி ஆட்சி புரியும் திம்மி.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za