அம்மான்னா சும்மாவா?

Thursday, March 24, 2011

அம்மா வாழ்க

மைனாரிட்டி ஆட்சியினால் கடுமையான அவதிக்கு உள்ளான நம் தமிழக மக்களுக்கு தாயுள்ளத்தோடு பல சலுகைகளை அறிவித்த உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா வாழ்க. ஈழத்தாயே இந்த சலுகைகளை ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் வழங்குமாறு அன்போடு வேண்டுகின்றேன்.

வாழ்க அம்மா. வாழ்க பாரதம்.

Saturday, March 19, 2011

இலவசத்தை வீழ்த்துவோம்

"எல்லாமே இலவசம்" என்று திமுகவின் அறிக்கையை பற்றி பாரதத்தின் ஒரே நடுநிலை நாளேடான நம் தினமலர் தெரிவித்துள்ளது. வலைபதிவர்களாகிய நாம் அனைவரும் எப்போதும் இலவசத்திற்கு எதிரானவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே நாம் அனைவரும் ஒன்றினைந்து இலவச மன்னனை தோற்கடிக்க சபதம் எடுப்போம்.

உலகின் ஒரே தங்க தாரகையான நம் அம்மா எப்போதும் அனைவரும் உழைத்து சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஆவார். அதனால்தான் அவருக்கு பல கோடி ரூபாய் சொத்து இருந்த போதும் நமக்கு எல்லாம் தாயுள்ளத்தோடு நல்லாட்சி புரிந்து அதன் மூலம் கிடைக்க பெற்ற ஒரு ரூபாயில் வாழ்ந்து காட்டியவர்.

எனவே 80 கோடி ஹிந்துக்களும், புலம் பெயர்ந்து வாழும் பல கோடி ஈழத் தமிழரும் நம் ஈழத்தாயை ஆட்சி கட்டிலில் அமர்த்துவோமாக.

வாழ்க அம்மா. வாழ்க பாரதம்.

அம்மான்னா சும்மாவா - II

கூட்டணி கட்சிகளுடன் விடிய விடிய 14 மணி நேரம் மாராதான் பேச்சு நடத்திய ஜெ! என்று முழங்குகிறது ஒரு தகவல் களம். அம்மா அவர்களை சந்திக்க முடியாது. அவரை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு என்று பலரும் பல காலமாய் புளுகி வந்தனர். அது எல்லாம் அண்டப்புளுகு என்று இப்போது தெரிந்துவிட்டது. அம்மா அவர்கள் தாயுள்ளத்தோடு எல்லா கட்சி தலைவர்களையும் அன்போடு தன் இல்லத்திற்கு வரவழைத்து அன்பு மழை பாராட்டி உள்ளார். அவர்களோடு பல மணி நேரம் தொடர்ந்து பேசி அவர்கள் உள்ளம் குளிர வைத்து உள்ளார்.

ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே பெற்று அகில உலகம் எல்லாம் வியக்கும் வகையில் நல்லாட்சி நடத்தியவர் உலகிலேயே நம் அம்மா மட்டும்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. உலகின் ஒரே தங்கதாரகையான நம் அம்மா ஆட்சி பொறுப்பிற்கு வருவதற்கு முன்பே எப்படி பல மணி நேரம் ஊண் உறக்கம் இன்றி நாட்டு நலனிற்கு பாடுபடுகிறார் என்பதை பாருங்கள்.

அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மலர 80 கோடி ஹிந்துக்களும். உலகம் எல்லாம் பரவி இருக்கும் கோடானு கோடி புலம் பெயர்ந்த ஈழத்தமிழரும் பாடுபடுவோம்.

வாழ்க அம்மா. ஜெய்ஹிந்த்.

Thursday, March 17, 2011

அம்மான்னா சும்மாவா

யார் யாரோ ராஜதந்திரி என்றனர். ஸ்பெக்டரம் என்றனர். கணி என்றனர். CBI என்றனர். ஈழம் என்றனர். கூட்டணி என்றனர். 41, 21, 11,10, 3, 2, 1 என்றனர். எல்லோரையும் மைதானத்தின் பல பகுதிகளுக்கு ஸிக்ஸர் அடித்துவிட்டார் அம்மா.

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மா வாழ்க. ஈழத்தாயே நீ வாழ்க. தைரிய லட்சுமியே நீ வாழ்க.

உங்களுக்கு பக்க பலமாக உலகில் உள்ள 80 கோடி ஹிந்துக்களும், பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் கோடானு கோடி ஈழத் தமிழர்களும் உள்ளனர். ஆகவே யாரை பற்றியும் கவலைப்படாமல் அடித்து ஆடுங்கள். வெற்றி நமதே.

வாழ்க அம்மா. வீழ்க திம்மிகள்.

Wednesday, March 16, 2011

சும்மா அதிருதில்ல

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பித்து விட்டது. பூவுலகில் இருக்கும் 80 கோடி ஹிந்துக்களும் ஒன்றினைந்து அம்மாவையும், அம்மாவின் 159 புத்திர, புத்திரிகளையும் பெரு வெற்றி அடைய வைப்போம் என சபதம் எடுப்போம்.

விரைவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சந்திப்போம்.

வாழ்க அம்மா. வெல்க ஈழம்.


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za