அம்மான்னா சும்மாவா?

Tuesday, June 20, 2006

பொடா

நமது புண்ணிய பூமியில் திம்மிக்களின் துணையோடு தீவிரவாதம் படிப்படியாக வளர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர் அம்மா. தீவிரவாதிகளுக்கு பரிந்து பேசியதால் தனது அண்ணன் என்றும் பாராமல் 19 மாதம் சிறையில் அடைத்தவர் அவர். ஆனால் இன்று நடப்பது என்ன?

தீவிரவாதிகள் பதுங்குவதற்கு 50000 வீடுகள் கட்டி தரப்போகிறார்களாம். என்ன அநியாயம். அவர்களுக்கு உதவி தொகை வேறு அளிக்கப்படுமாம். அந்த தொகை துப்பாக்கி ரவையாவும், வெடி குண்டுகளாகவும் மாறும்.

ஏற்கனவே பல தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். இப்போது பதுங்குவதற்கு இடம் அமைத்துக்கொடுத்தால் இன்னும் பலர் இங்கே வருவர். அவர்கள் மூலம் நமது நாட்டை துண்டாட பார்க்கிறார் கருணாநிதி. வரும் காலத்தில் இந்த பாவச் செயலுக்காக இப்போதைய அமைச்சர்கள் "பொடா" மூலம் உள்ளே போவது உறுதி.

நமது இறையான்மைக்கு ஊறு விளைவிக்கும் செயலை துணிந்து வெளியிட்ட ராமநாதபுரம் ஸ்ரீ.சேதுவை அனைவரும் வணங்குவோம். மேல்விபரம் வேண்டுவோர் இந்த சுட்டி பார்க்கவும் http://www.dinamalar.com/2006june21/ithu.asp

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

Monday, June 19, 2006

தைரிய லட்சுமி

தைரிய லட்சுமி என சூப்பர் ஸ்டாரால் பாராட்டப்பட்டவர் அம்மா. அவரிடம் இடக்கு செய்தால் இருக்கவே இருக்கு கஞ்சா கேஸ். அந்த வகையில்தான் செரினா மீது தைரியமாக கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இப்போது உள்ள மைனாரிட்டி அரசு என்ன செய்கிறது. பரிதாப நிலையில் இருக்கும் செரினா மீது கள்ள நோட்டு வழக்கு பாய்ச்சுகிறது. நாட்டு மக்கள் எல்லாம் "என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.

எப்படி கேஸ் போட வேண்டும் என்று கூட தெரியாமல் இவர்கள் ஆட்சி செய்யும் லட்சணத்தை பாருங்கள். போங்கப்பா போங்க, ஒழுங்கா போயஸ்தோட்டம் போய் பாடம் படியுங்க.

அம்மா அம்மா

அம்மாவை பாருங்கள். அவர் உட்கார்ந்தா செய்தி. நின்றால் செய்தி. கட்சி அலுவலகத்திற்கு வருவதே ஒரு தலைப்பு செய்தி.

"மாவட்ட செயலாளர்கள் மாற்றம்: ஜெயலலிதா 22-ந் தேதி தலைமை கழகம் வருகை"

(நன்றி மாலைமலர்.)

அவர் கட்சி அலுவலகத்திற்கு வருவதே வெளிநாட்டு ஜனாதிபதி நம் நாட்டிற்கு வருவது மாதிரி ஒரு முக்கியமான நிகழ்வு. இதைப்போல் எந்த கட்சியிலாவது நடத்திக்காட்ட முடியுமா? இதைபோல் செய்ய முடியுமா மைனாரிட்டி முதல்வரான கருணாநிதியால்?.

Thursday, June 15, 2006

கிழவனின் களவானித்தனம் – II

மைனாரிட்டி ஒட்டுக்கள் மூலம் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி கோடிகளை அபகரித்த செய்தியின் தொடர்ச்சி.

அதை பற்றி பிரமுகர்களின் கருத்து.

சோ - இது ஒரு பெரிய விஷயம் இல்லை. அவர் மிரட்டி இதை செய்திருக்கலாம்.

தினமலர் (ஜாதி, மதம் பார்க்காத நாட்டின் ஒரே நடுநிலை நாளிதழ்) -

3000 கோடி

மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி மத்திய ஒதுக்கீட்டின் கீழ் 3000 கோடி அதிகம் பெற்று வந்துள்ளார். இவருக்கு முன் ஆட்சியில் இருந்த அதிமுக முதல்வர் புரட்சி தலைவி சென்ற ஆண்டு 9000 கோடி ரூபாய் பெற்று வந்தார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன்னால் முதல்வர் - அனுபவம் இல்லாத கருணாநிதி. நான் முதல்வராக இருந்த போது 9000 கோடி ரூபாயில் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் தாயுள்ளத்தோடு பரிவாக கவனித்து செயலாற்றினேன். ஆனால் கருணாநிதிக்கோ 12500 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதில் இருந்தே அவர் ஆட்சி செய்யும் லட்சனத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

வை.கோ - அலுவாலியாவின் கையை முறுக்கி கூடுதல் பணம் பெற்று விட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே இதை பற்றி பிரதமர் முழு விசாரனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பணத்தை கொண்டு தயாநிதி Star TVய வாங்கப்போகிறார்.

சுப்பிரமணிய சுவாமி - இது புலிகளின் வேலை. சோனியாவை நாடு கடத்த வேண்டும். புலிகளின் தனி நாட்டு தீவிரவாதத்திற்காக சோனியா கருணாநிதி மூலம் பல கோடிகளை கொடுத்துள்ளார். இதை பற்றி கோபி அன்னானுக்கு தகவல் கொடுத்துள்ளேன். விரைவில் ஜார்ஜ் புஷ்ஷிடம் புகார் செய்ய உள்ளேன்.

Tuesday, June 13, 2006

இந்தி கட்டாய பாடமாக்கப்படும்

விரைவில் கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூடி தமிழகத்தில் அனைவரும் கட்டாயமாக இந்தி படிக்கவேண்டும் என ஒரு உத்தரவு போட இருப்பதாக பட்சி செய்தி சொல்லியுள்ளது.

இதற்கு என்ன காரணம் என நமது செய்தியாளர் தோண்டி எடுத்த விபரம்.

கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் காரணமாக சமீபத்தில் ஸ்டாலின் மீது கத்தியால் குத்த முயன்றதாக ஒரு செய்தி வெளியானது. அப்போது காவலுக்கு இருந்த போலீஸ்காரர் அதை தடுத்துவிட்டார். எனினும் அவர் நமது தேசிய மொழியான ஹிந்தியில் உதவிக்கு அழைத்த விபரம் யாருக்கும் தெரியவில்லை. அவர் ஏதோ ஹிந்தி பாட்டு பாடுவதாக அனைவரும் நினைத்துவிட்டனர்.

பல தலைமுறைகள் ஹிந்தி படிக்கமுடியாமல் போனதற்கு காரணமான கருணாநிதி இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே தமிழகத்தில் அனைவரும் கட்டாயமாக இந்தி படிக்கவேண்டும் என ஒரு உத்தரவு போட்டுவிட வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதை பற்றி நமது நிருபர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். ஏராளமானவர்கள் இதை நல்ல முடிவு என்றனர்.
(தாம்பரம் ஆனாபானா) இதன் மூலம் தமிழர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
(மைலாப்பூர் மனாவேனா) இந்த அறிவிப்பின் மூலம் எனக்கு பதவி உயர்வு கிடைப்பது சுலபம்.
(வடசென்னை பனாலனா) இனிமேல் வட இந்திய பெண்களிடம் நன்றாக கடலை போடலாம்.

Monday, June 12, 2006

கிழவனின் களவானித்தனம்

பாரத தேசம் முஸ்லிம்களிடமும் பிறகு கிருத்துவர்களிடமும் அடிமை பட்டு கிடந்தது. மாதாவின் விலங்குகளை வீர சவர்கார், திலகர், வல்லபாய் படேல் போன்ற பெருந்தலைவர்கள் பாடுபட்டு உடைத்தனர். ஆனால் இப்போது மீண்டும் கிருத்துவர்களின் கைப்பிடியில் நசுங்கி கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் திம்மிக்கள் வேறு ஆங்காங்கே மாதாவை சீரழிக்கிறார்கள். நமது பாரதம் இப்போது உள்ள ஆட்சியாளர்களால் படிப்படியாக துண்டாடப்படுகிறது.

நமது புண்ணிய பூமி ஏராளமான வளங்களை கொண்டது. அப்படி இருந்தும் நாட்டின் பல பகுதிகள் இன்னும் முன்னேறவில்லை. உதாரணத்திற்கு மாட்டுக்காரன் லல்லுவிடம் அகப்பட்ட பீகாரை பாருங்கள். முஸல்மான்களின் ஓட்டிற்காக ராமபிரான் அவதரித்த இடத்தை விட்டுக்கொடுக்காத திம்மி முலயமிடம் அகப்பட்ட உபியை பாருங்கள்.

ஒரு குடும்பத்திற்கு வரும் வருமானத்தை எல்லோருக்கும் சரியாக பகிர்ந்து அளிப்பது தானே குடும்பத்தலைவனுக்கு அழகு. அதுதானே நமது பாரத பண்பாடு. ஆனால் இப்போது என்ன நடக்கிறது. இதையெல்லாம் என்னித்தான் அன்றே எமது பெரியார் பாரதி பாடினான் "நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த ...."

இந்துக்களை இழிவுபடுத்துவதை குறிக்கோளாக கொண்ட மைனாரிட்டி அரசின் கிழவன் தலைநகர் தில்லி சென்று கிருத்துவரான சோனியாவிடம் முழங்காலிட்டு 12500 கோடி ரூபாய் கொண்டுவந்து விட்டான்.

இது யாருக்கு பயன்பட போகிறது? நமக்கா, இல்லவே இல்லை. முதலில் இந்த திம்மி எடை குறைந்து விட்ட முஸ்லிம்முக்கு பிரியாணி வாங்கி கொடுப்பான். பிறகு கிருத்துவர்கள் மனம் மகிழ சர்ச்சுகள் கட்டுவான். பிறகு தகுதி திறமை சற்றும் இல்லாத கூட்டத்திற்கு அரிசி போடுவான்.

இதனால் நமது இந்து சமுதாயம் எப்படி முன்னேற்றம் அடைய முடியும். இந்துக்களே ஒன்று படுங்கள். கருணாநிதி போன்ற களவானிகளிடம் இருந்து நம் பாரத மாதாவை காப்பாற்றுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Sunday, June 11, 2006

வணக்கம்

இது என் முதல் பதிவு.

எதை பற்றி எழுதப்போகிறேன்?

பிடித்த விஷயங்களை (முக்கியமாக அரசியல்) பற்றி எழுத ஆசை.

அன்புடன்
இலைக்காரன்


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za