அம்மான்னா சும்மாவா?

Monday, July 24, 2006

கம்யூனிஸ்டுகளின் அராஜகம்

நமது புண்ணிய பூமியை அழிப்பதே தலையாய செயல் என்று கருதும் கம்யூனிஸ்டுகள் கேரள மாநிலத்தை முஸ்லிம்கள்+கிருத்துவர்கள் துணையுடன் கைப்பற்றியது அனைவருக்கும் நினைவில் இருக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் உடல் இளைத்த முஸ்லிம் தீவிரவாதிக்காக சென்னைக்கு காவடி எடுத்தனர். சென்னையில் உள்ள திம்மியும் உதவி செய்வதாக வாக்கு அளித்தது.

பிறகு கோடிக்கணக்கான இந்துக்களின் நெஞ்சில் குடியிருக்கும் ஐயப்பன் கோவிலில் புகுந்து குழப்பம் விளைவித்தனர். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதை போல இப்போது ஐயப்பன் கோவில் தலைமை பூசாரி மீது அபாண்ட பழி போட்டுள்ளனர். தயவு செய்து இந்த சுட்டியினை பாருங்கள்.

கோவில் பூசாரிகள் கடவுளுக்கு சமமானவர் என்று ஆத்திகர் அனைவரும் அறிந்ததே. அப்படி பட்ட ஒரு பூசாரியை, அதுவும் பல கோடி பேர் வணங்கும் ஐயப்பன் கோவில் பூசாரியை இப்படி கேவலப்படுத்தலாமா.

"உங்கள் விருப்பங்களை, வேண்டுதல்களை உங்களுக்காக செய்து கொடுப்பப்பவன் அர்ச்சகன், பூசாரி. உமக்காக மெய்யுருகி, நும் நலம் வேண்டி பூசை செய்பவனை இகழுதல், தெய்வத்தை இகழுதலுக்குச் சமம். கடவுளை இகழுதலும் அவர் அடியாரை இகழுதலும் ஒன்றே!" - (நன்றி ஆத்திகர் SK அய்யா அவர்கள்).

இவ்வாறாக கடவுளை நிந்திக்கும் இந்த திம்மிக்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவோம்.

சுவாமியே சரணம் ஐயப்பா. ஜெய்ஹிந்த்.

Wednesday, July 19, 2006

மகாத்மாவை மறைக்கும் மதிமூடர்

நமது புண்ணிய பூமியை கிருத்துவரிடம் இருந்து மீட்க பெரும் பாடுபட்டவர் ஸ்ரீமான் மகாத்மா காந்தி அவர்கள். அவர் நினைவை போற்றும் விதமாக அவரின் திருவுருவ சிலையை அங்காங்கே எழுப்பி அதை அனுதினமும் வணங்கும் பழக்கம் பாரதத்தாயின் புதல்வர்களுக்கு உண்டு. மதராஸ் நகரில் முக்கிய கேந்திரமான மெரீனா கடற்கரையில் அண்ணலுக்கு ஒரு பெரும் சிலை நிறுவப்பட்டது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.

தற்போது அண்ணலின் சிலையை மறைத்து வேறு ஒரு புது சிலை எழுப்பப்படுகிறது. இந்த சிலை எழுப்பப்பட்டால் அண்ணலின் சிலையை யாராலும் பார்க்கமுடியாத நிலை ஏற்படும். சினிமாவில் கொள்ளைக்காரன் வேடம் ஏற்று முஸ்லிம்களிடம் ஒரு பட்டம் வாங்கியவருக்கு சிலையாம். யாருக்கு சிலை வைக்கவேண்டும் என்று ஒரு வறைமுறை இல்லாமல் போய்விட்டது நாட்டில்.

இந்த சிலை எழுப்பப்பட்டால் கடற்கரை சாலையில் யாரும் வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். இதே போன்று நெரிசல் ஏற்பட்டு பல கோடி ரூபாய்கள் தினமும் பாழானதால்தான் கண்ணகி சிலையை அம்மா அகற்றினார். அது உங்கள் நினைவில் இருக்கும் என நம்புகிறேன்.

இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார் ஒரு தியாகி. நல்ல நீதி நமக்கு கிடைக்கும் என்று எல்லாம் வல்ல சிவபெருமானை அவரவர் இடத்தில் இருந்து வழிபடுவோம்.

வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.

Thursday, July 13, 2006

இந்துக்களை நிந்திக்கும் கருணாநிதி

நமது புண்ணிய பூமியில் ஏராளமான ஆன்மீகசெம்மல்கள் அவதரித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய இஷ்டதெய்வங்களை போற்றி பல அறிய பாடல்களை விட்டு சென்றுள்ளனர். தமிழகத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற திருமறைகள் ஏராளம். அவற்றை தினமும் பாடி கடவுளை சேவிக்கும் பழக்கம் கோடானுகோடி பக்தர்களுக்கு உண்டு. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்பதை அனைவரும் அறிவர். அப்படிப்பட்ட திருவாசகத்தை தமிழகத்தின் ஒரு கோயிலுக்குள் பாடமுடியவில்லை இப்போது.

இந்துக்களை நிந்திப்பதையே தொழிலாக கொண்டுள்ளார் கருணாநிதி. ஏற்கனவே எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு உதவாத சட்டம் கொண்டுவந்து இந்துக்கள் மனம் நோகசெய்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே. சரி போகட்டும் என்று விட்டால் இப்போது அடிமடியிலேயே கை வைக்கிறார்.

நம் கடவுளை நம் கோவிலுக்குள் சென்று சேவிக்க முடியவில்லை தமிழகத்தில். இதுபோல் ஒரு தடையை வேறு மதத்தினருக்கு விதிக்க தைரியம் உண்டா? இந்துக்களே விழித்தெழுங்கள். நாம் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்.

இதை பற்றி மேல்விபரம் வேண்டுவோர், இங்கு பாருங்கள்.

ஓம் சிவாய நமஹ. ஜெய் ஹிந்த்.

Tuesday, July 11, 2006

மும்பாய் குண்டுவெடிப்பு

நேற்று மும்பாயில் தொடர் குண்டு வெடிப்புகள் மூலம் 200 பேர் பலியாகி உள்ளனர். முதலில் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் மோட்ச தீபம் ஏற்றுவோம்.

இதற்கு முழு காரணம் வாடிகன் உத்தரவுப்படி திம்மித்துவ ஆட்சி புரியும் காங்கிரசே. நமது ராம ராஜ்யத்தில் ரோம ராஜ்யம் அமைக்க சோனியா செயல்படுவது அனைவரும் அறிந்த விஷயம். ஸ்ரீமான் மன்மோகனை சுதந்திரமாக செயல்பட அவர் அனுமதிப்பதில்லை.

ஸ்ரீமான் மன்மோகன் இந்த விஷயத்தில் சோனியாவின் பேச்சை கேட்காமல் ராம ராஜ்யம் அமைக்க பெரும் பாடுபடும் ஸ்ரீமான் வாஜ்பாய் அவர்களின் ஆலோசனைபடி நடக்கவேண்டும்.

உதாரணத்திற்கு முகமதிய தீவிரவாதிகளை அடியோடு அழித்த பாகிஸ்தான் அதிபர் ஜனாப் முஷரப்பை புதுதில்லிக்கு அழைத்து அறுசுவை விருந்து படைக்கலாம்.

இல்லையென்றால் கார்கில் போரினைப்போல ஏராளமான முகமதிய தீவிரவாதிகளை நாட்டின் உள்ளே அனுமதித்து, அவர்கள் பக்காவான பதுங்கு குழிகள் அமைக்கும்வரை காத்திருந்து பிறகு சில ஆயிரம் போர் வீரர்களை பலி கொடுத்து பெரு வெற்றி பெற்றது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் இரும்பு மனிதர் போல பாரதத்தின் சிறையில் வாடும் உடல் மெலிந்த சமாதான புறாக்களை தனி விமானத்தின் மூலம் சில நாடுகளுக்கு உல்லாச பயணம் செல்ல அனுமதிக்கலாம்.

இவைகளை செயல்படுத்த முடியாவிட்டால் நாட்டில் தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் ஒரே தலைவரான அம்மாவிடம் ஒரு மாதம் பிரதமர் பொறுப்பை ஒப்படைத்துபாருங்கள். அவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது தனது சகோதரனை தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் பொடா மூலம் சிறையில் இட்டவர். மேலும் புளி கேட்டு கடையில் தகராறு செய்த பள்ளி மாணவர்களையும் பொடாவில் தள்ளினார். அப்படி செய்ததால்தான் தமிழகம் அமைதிபூங்காவாய் திகழ்ந்தது.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

Thursday, July 06, 2006

கருணாநிதியின் கபட நாடகம்

தமிழ்நாட்டில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதி டெல்லியில் சில எம்.பிக்களும் பல மந்திரிகளும் வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.

ஸ்ரீமான் மன்மோகன் நமது நாட்டை வளமிக்கதாக ஆக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார். அதன்படி நெய்வேலி நிறுவனத்தின் 10% பங்கை தனியாரிடம் விற்க முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் அந்த 10% பங்கும் தன் குடும்பத்தினருக்கே கொடுக்க வேண்டும் என கருணாநிதி மிரட்டி உள்ளார். இதற்கு ஸ்ரீமான் மன்மோகன் ஒப்புக்கொள்ள மறுத்து விட்டதால் தயாநிதி மூலம் ஆட்சியில் இருந்து விலகிவிடுவோம் என இப்போது மிரட்டல் விடுக்கிறார்கள்.

ஸ்ரீமான் மன்மோகன் இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து விடாமல் 10% பங்கை தனியாரிடம் விற்க உறுதி எடுக்க வேண்டும். அப்படியே ஒருவரிடம்தான் பங்கை விற்க வேண்டும் எனில் நாட்டிற்காக தாயுள்ளத்தோடு ஒரு ருபாயில் உழைத்த அம்மாவிடம் அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

இதைப்பற்றி அம்மாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "இது தாம் வெகுநாட்களாக எதிர்பார்த்த நிகழ்வு" என்றார். நமது புண்ணிய பூமியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற துணை பிரதமர் பொறுப்பை ஏற்று கடமையாற்ற தான் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்துக்களின் விரோதியான கருணாநிதியை கழட்டிவிடுவதின் மூலம் ஸ்ரீமான் மன்மோகனுக்கு 80 கோடி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்றார்.

ஸ்ரீமான் மன்மோகன் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என்று நம்புவோம்.

சுவாமியே சரணம் ஐயப்பா. ஜெய்ஹிந்த்.

Tuesday, July 04, 2006

புலிகளுக்கு உதவும் சிறுத்தைகள்

நமது புண்ணிய பூமியில் தீவிரவாதிகளுக்கு உதவும் போக்கு அதிகரித்து இருக்கும் போக்கை விளக்க நான் இட்ட பதிவு.

ஏற்கனவே உள்ள திம்மிக்கள் போதாது என்று புது திம்மிக்கள் அவதாரம் எடுத்து உள்ளனர். சிறுத்தைகள் கட்சி தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்படும் இடம் போதாது எனவும் மேலும் சலுகைகள் அளிக்க வேண்டும் என்று மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியிடம் தெரிவித்து உள்ளனர். இதை பற்றி மேல் விபரம் அறிய இங்கு பாருங்கள்.

Monday, July 03, 2006

பிராமணர்களை துரத்தும் தி.மு.க

திராவிட இயக்கங்கள் பிராமணர்களை தமிழ்நாட்டில் இருந்து துரத்திவிட்டனர். இப்போது மிஞ்சி இருப்பது கோவில் பூசாரிகள் மட்டுமே.

அருமை நண்பர் பிரான்சிஸ் கோத்தியே கட்டுரையை பாருங்கள்.

http://in.rediff.com/news/2006/jul/03franc.htm


 

http://www.techsys.co.za http://www.target.co.za http://www.unearth.co.za